மேலும் அறிய

Entertainment Headlines: களைகட்டும் லியோ வெற்றிவிழா.. மிரட்டும் தங்கலான் டீசர்.. கேரளாவில் கமல்.. சினிமா ரவுண்ட் அப்!

Entertainment Headlines Nov 01: திரையுலகில் இன்று இதுவரை நடந்த நிகழ்வுகளை கீழே தலைப்புச் செய்திகளாக காணலாம்.

ஸ்கெட்ச் ஆடியோ லாஞ்ச்சில் இல்லை; சக்சஸ் மீட்டில்! குட்டிக்கதையில் அரசியலுக்கு அச்சாரமிடுவாரா விஜய்?

நடிகர் விஜய் நடித்த லியோ திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த அக்டோபர் மாதம் 19ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. வெளியான நாள் முதல் பாக்ஸ் ஆபிஸில் லியோ திரைப்படம் பல சாதனைகளை படைத்து வருகிறது.  மேலும், சினிமா ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடமிருந்து கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்தநிலையில், இன்று மாலை சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரமாண்டமாக லியோ திரைப்படத்தின் சக்சஸ் மீட் நடத்தப்படும் என படக்குழு அறிவித்துள்ளது. மேலும் படிக்க

புழல் சிறையில் இருந்து நிபந்தனை ஜாமினில் வெளிவரும் TTF வாசன்

யூ டியூப் பிரபலமும், நடிகருமான TTF வாசனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  பைக் ரைடு மூலம் யூ-டியூபில் பிரபலமான டிடிஎஃப் வாசன் மஞ்சள் வீரன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில், செப்டம்பர் 16ம் தேதி சென்னை - வேலூர் நெடுஞ்சாலையில் தாமல் பகுதியில் வேகமாக இருசக்கர வாகனத்தில் சென்று விபத்தை ஏற்படுத்திய வழக்கில் TTF வாசன் பாலுச்செட்டி சத்திரம் போலீசாரால் கைது செய்யப்பட்டார். மேலும் படிக்க

ரத்தத்தில் குளிக்கும் விக்ரம் ... அசுரத்தனமாக வெளியான தங்கலான் டீசர்..!

ராஜநாகத்தை இரண்டாக பிச்சிப்போடும் விக்ரம், ரத்தம் ஓடும் ஆறு, ரத்தத்தில் குளிக்கும் விக்ரம் என அசுரத்தனமாக தங்கலான் டீசர் வெளியாகியுள்ளது.  பா. ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் தங்கலான் படத்தின் டீசர் வெளியாகி அசுரத்தனத்தில் மிரட்டலை காட்டியுள்ளது. ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்துடன் இணைந்து நீலம் புரொடெக்‌ஷன் சார்பில் பா.ரஞ்சித் இயக்கி இருக்கும் படம் தங்கலான். இதில் விக்ரம், மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மேலும் படிக்க

ஏ சான்றிதழுடன் வெளியாகும் ‘லியோ’ அன்கட் வெர்ஷன்.. எந்த ஊரில் தெரியுமா?

லோகேஷ் கனகராஜ் இயக்கிய லியோ திரைப்படம் கடந்த அக்டோபர் 19ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகியாகி வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் தயாரித்திருக்கும் இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். த்ரிஷா, கெளதம் மேனன், பிரியா ஆனந்த், அர்ஜூன், சஞ்சய் தத், மடோனா செபாஸ்டியன், மிஸ்கின் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளார்கள். லியோ (Leo Film) திரைப்படம் இதுவரை 500 கோடிகளுக்கு மேலாக உலக அளவில் வசூலித்துள்ளது. மேலும் படிக்க

லியோ படத்தின் வெற்றி விழா.. முன்கூட்டியே வந்த விஜய்? ... உற்சாகத்தில் ரசிகர்கள்..!

லியோ படம் வெளியாகி நல்ல வசூலைக் குவித்துள்ளதால் வெற்றி விழா(LEO Success Meet) நடைபெறும் என கோலிவுட் வட்டாரங்களில் கடந்த சில நாள்களாக தகவல்கள் வெளியாகி வந்தன. அதன்படி, செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம், வெற்றி விழா நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், இதற்காக தமிழ்நாடு காவல்துறையிடம் அனுமதி கேட்டதாகவும் சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் தெரிவித்தார். தொடர்ந்து, லியோ படத்தின் வெற்றிவிழாவுக்கு காவல் துறை பல்வேறு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியது. மேலும் படிக்க

மேடையை தெறிக்கவிட்ட மூன்று ஸ்டார்கள்... கேரளீயம் 2023 நிகழ்ச்சியில்  கமல், மம்மூட்டி, மோகன்லால்...

கேரளா மாநிலத்தின் மிகப்பெரிய கொண்டாட்டங்களில் ஒன்றாக கருதப்படுகிறது 'கேரளீயம் 2023' (Keraleeyam 2023) நிகழ்ச்சி. திருவனந்தபுரத்தில் நடைபெறும் இந்த நிகழ்ச்சி நவம்பர் 1ம் தேதி முதல் 7ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த நிகழ்ச்சியில் கேரளா மாநிலத்தின் முன்னேற்றங்கள், சாதனைகள், கலாச்சாரம், பாரம்பரியத்தை உலகிற்கு எடுத்துக்காட்டும் விதமாக நடைபெற உள்ளது. மேலும் படிக்க

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Bussy Anand Angry |கறார் காட்டிய புஸ்ஸி ஆனந்த்..முகம்சுழித்த தவெக நிர்வாகிகள்!Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
Embed widget