By: ராகேஷ் தாரா | Updated at : 01 Nov 2023 04:42 PM (IST)
லியோ, விஜய். (image source: twitter)
லோகேஷ் கனகராஜ் இயக்கிய லியோ திரைப்படம் கடந்த அக்டோபர் 19ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகியாகி வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் தயாரித்திருக்கும் இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். த்ரிஷா, கெளதம் மேனன், பிரியா ஆனந்த், அர்ஜூன், சஞ்சய் தத், மடோனா செபாஸ்டியன், மிஸ்கின் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளார்கள். லியோ (Leo Film) திரைப்படம் இதுவரை 500 கோடிகளுக்கு மேலாக உலக அளவில் வசூலித்துள்ளது.
லியோ திரைப்படத்தில் வன்முறைக் காட்சிகள் இடம்பெற்றிருந்த காரணத்தினால் இந்தப் படத்துக்கு யு / ஏ சான்றிதழ் வழங்கியது சென்சார் வாரியம். மேலும் படக்குழுவின் ஒப்புதலோடு ஒரு சில காட்சிகள் படத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. மேலும் படத்தின் கெட்ட வார்த்தைகள் ஒரு சில இடங்களில் ஒலிநீக்கம் செய்யப்பட்டன. என்னதான் ஆக்சன் காட்சிகள் ரசிகர்களைக் கொண்டாட வைத்திருந்தாலும் தங்களுக்கு பிடித்த நடிகரின் படத்தை முழுமையாக பார்க்க முடியாத அதிருப்தி ரசிகர்களிடம் இருந்து வருகிறது.
ஒரு சில காரணங்களுக்காக சில காட்சிகள் லியோ படத்தில் இருந்து நீக்க வேண்டிய சூழல் ஏற்பட்டதாக சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் குறிப்பிட்டிருந்தார். லியோ படத்தில் ஓடிடி உரிமத்தை நெட்ஃப்ளிக்ஸ் வாங்கியுள்ளது. திரையரங்குகளைத் தொடர்ந்து நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகும்போது லியோ படத்தில் இருந்து நீக்கப்பட்ட காட்சிகள் சேர்க்கப்படுமா என்று ரசிகர்கள் இணையதளத்தில் கேள்வி எழுப்பி இருந்தார்கள்.
By popular demand, #LEO uncut (strictly for ages 18+) is coming to @cineworld cinemas from Friday. The first Tamil film in UK to release with an 18 classification.. 💣🔪🔥🧨🩸
Round two, are you ready? Ticket sales open TOMORROW! 🤜 pic.twitter.com/DfF0FpgkbO— Ahimsa Entertainment (@ahimsafilms) October 31, 2023
இந்நிலையில் ரசிகர்களின் வேண்டுகோளின்படி லியோ படத்தின் அன்கட் அதாவது சென்சார் வாரியத்தால் நீக்கப்பட்ட காட்சிகள் இணைக்கப்பட்ட பிரதியை பிரிட்டனில் வெளியிடத் திட்டமிட்டப்பட்டுள்ளது. படத்தின் இந்தப் பிரதிக்கு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
18 வயதுக்கு மேற்பட்டவர்களே இந்தப் படத்தை பார்க்க அனுமதி உள்ளது. ஏ சான்றிதழ் பெற்று பிரிட்டனில் வெளியாகும் முதல் தமிழ் படம் லியோ என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள். இதனைத் தொடர்ந்து லியோ படம் ஓடிடியில் வெளியாகும்போதும் இதே மாதிரி காட்சிகள் நீக்கப்படாத பிரதி வெளியாகும் என ரசிகர்களுக்கு கொஞ்சம் நம்பிக்கை வந்திருக்கிறது.
அமரன் படத்திற்கு ரொம்ப யோசித்தேன்...பாலா கொடுத்த தைரியம்..ஓப்பனா பேசிய எஸ்.கே
ரீ-ரிலீஸ் கில்லி vs தளபதி; வசூலில் கெத்து காட்டியது தலைவரா - தளபதியா?
இன்னும் ஆரம்பிக்கவே இல்ல அதற்குள் 'எதிர்நீச்சல் 2' சீரியலை விட்டு எகிறிய 4 பிரபலங்கள்!
Suriya : பாலா இல்லனா சூர்யா இல்ல...வணங்கான் இசைவெளியீட்டில் எமோஷனலான சூர்யா
Suriya : பாலா படத்திற்காக 300 முறை சிக்ரெட் அடிச்சேன்...வணங்கான் ஆடியோ லாஞ்சில் சூர்யா
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
TVK Vijay: அமித்சாவை கண்டித்த விஜய்.! எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்ததை கண்டிக்கிறேன்.!
Ashwin Vihari Partnership: முதுகுவலியுடன் அஷ்வின் செய்த சம்பவம்! மறக்க முடியாத சிட்னி டெஸ்ட்!
PM Modi on Ambedkar: அம்பேத்கரை பழித்தோமா? காங்கிரஸ் மீது பழியை போட்ட பிரதமர் மோடி - என்னெல்லாம் செஞ்சீங்க?