Edirneechal yesterday episode : பிளானை மாற்றிய ஜனனி... அசால்ட் செய்த விசாலாட்சி... எதிர்நீச்சல் சீரியலில் நேற்று!
பரபரப்பான கட்டத்தில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் நேற்று என்ன நடந்தது.
சின்னத்திரை ரசிகர்களின் பேராதரவை பெற்ற தொடர் சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் தொடர். அதிரை திருமணம் தான் கடந்த சில நாட்களாக மிகவும் பரபரப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. மிகவும் ஸ்வாரஸ்யமான கட்டத்தில் இருக்கும் எதிர்நீச்சல் சீரியலில் நேற்றைய எபிசோடில் என்ன நடந்தது?
குணசேகரன் குடும்பத்தார் மற்றும் ஜான்சி ராணி குடும்பத்தார் திருமணத்திற்கு தயாராக இருக்கிறார்கள். அந்த வேளையில் திடீரென விசாலாட்சி, அதிரையின் திருமணத்திற்கு முன்னர் குலசாமி கோயிலுக்கு அழைத்து வருகிறோம் என பிராத்தனை செய்து கொண்டதாக கூறுகிறார். குணசேகரன் புரியாமல் பார்க்க ரேணுகா ஏதோ வேண்டுதல் இருக்காம் அதனால் கோயிலுக்கு போக வேண்டும் என கூப்பிடுறாங்க என கூற கடுப்பான குணசேகரன் எப்போ கல்யாண நாள் அன்னைக்கா என கேட்கிறார். குலசாமி கோயிலுக்கு போயிட்டு வரணும் என்றால் இரண்டு மணிநேரம் ஆகும். முகூர்த்த நேரம் வேற நெருங்குது அதெல்லாம் தேவையில்லை என சொல்கிறார்.
ஜான்சி ராணி இது என்ன புது கதையா இருக்கு என சொல்ல விசாலாட்சி ஜான்சி ராணியை பார்த்து உன்னோடு சம்பந்தம் பண்ணா எங்களுக்கு சரிசமமானவளா மாறிடுவியா. என்னோட மகன் தான் உன்ன தலையில தூக்கி வச்சுக்கிட்டு ஆடுறான். நான் அப்படி இல்ல. அவனை பெத்தவ நான். அவனுக்கு மேல எனக்கு கோபம் வரும். வாயை மூடு என சத்தம் போடுகிறார்.
குணசேகரனுடம், விசாலாட்சி சண்டையிட சரி வாங்க கோயிலுக்கு போய்விட்டு வந்து விடலாம் என கூறுகிறார். எல்லாரும் போன எப்படி ரேணுகா, நந்தினி, ஜனனி மட்டும் அதிரையை கூட்டிகிட்டு கோயிலுக்கு போயிட்டு வரட்டும் என்கிறார் விசாலாட்சி. அப்போ நான் போக வேண்டாமா என சொன்னதும் மாமாகாரர் ஒருவர் நீ போன எப்படி பா. கல்யாணத்துக்கு வர சொந்தபந்தங்களை எல்லாம் யார் வரவேற்கிறது என சொல்கிறார். அவர் சொல்வதும் நியாயம் தானே என சொல்ல அவர்களுடன் கதிரை அனுப்பி வைக்கிறார். அடம் பிடித்து அவர்களுடன் கரிகாலனும் செல்கிறான்.
ஆதிரை அம்மா மற்றும் அண்ணன்களிடம் ஆசீர்வாதம் வாங்கி கொள்கிறாள். குணசேகரன் இப்போ எதுக்கு இதெல்லாம் கல்யாணம் முடியட்டும் அப்புறமா ஆசீர்வாதம் பண்ணிக்கலாம் என சொல்கிறார். அம்மாவிடம் சொல்லிக்கொண்டு ஆதிரை கிளப்புகிறாள். அனைவரும் ஒரே காரில் செல்கிறாள். அடுத்து என்ன பிளான் என ஜனனியிடம் மாமியார் கேட்க, தெரியல அத்தை போகும் போது அதை பத்தி யோசிச்சுக்கலாம் என சொல்லிவிட்டு அனைவரும் கிளப்புகிறார்கள்.
காரில் செல்லும் வழியில் கரிகாலன் ஆதிரையிடம் சில்மிஷம் செய்து கொண்டே வருகிறார். கூடவே நந்தினியும் கமெண்ட் அடித்து கொண்டே வருகிறாள். கரிகாலனுக்கும், ஆதிரைக்கும் நடுவில் ரேணுகா மாட்டிக்கொண்டு திண்டாடுகிறார். அதனுடன் நேற்றைய எபிசோட் முடிவடைந்தது.
இன்று என்ன நடக்கபோகிறது என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம். எப்படி ஆதிரை திருமணத்தை ஜனனி செய்து முடிக்கப்போகிறாள் என்ற சஸ்பென்ஸை தான் ரசிகர்களால் தாங்க முடியவில்லை.