நல்ல மனிதர் என புகழ்ந்து தள்ளிய துல்கர் சல்மான் - உடனடியாக ரியாக்ட் செய்த யோகிபாபு...!
'யோகி பாபு நல்ல நடிகர் மட்டும் இல்லாமல் சிறந்த மனிதர். அவர் பழகுவதற்கு ஜாலியான மற்றும் சுலபமான மனிதர்'
தனக்கு மிகவும் பிடித்த காமெடி நடிகர் யோகிதான் என்றும், தனக்கு பிடித்த சிறந்த மனிதர்களில் அவரும் ஒருவர் என்றும் துல்கர் சல்மான் தெரிவித்துள்ளார்.
துல்கர் சல்மானின் நடிப்பில் வெளியாக இருக்கும் கிங் ஆஃப் கோதா படத்தின் இரண்டாவது பாடல் நேற்று வெளியானது. 1980ம் ஆண்டுகளில் நடைபெறும் கதையாக எடுக்கப்பட்டுள்ள கிங் ஆஃப் கோதாவில் கேங்ஸ்டராக துல்கர் சல்மான் நடித்துள்ளார். இதில், ஐஸ்வர்யா லக்ஷ்மி, செம்பன் வினோத் ஜோஸ், பிரசன்னா, அனிகா சுரேந்திரன், சாந்தி கிருஷ்ணா, சரண் சக்தி, ராஜேஷ் சர்மா, சார்பட்டா பரம்பரையில் டான்ஸிங் ரோசாக இருந்த சபீர், ரித்திகா சிங் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பெரிய அளவில் எதிர்பார்க்கும் இந்த படம் வரும் ஓணம் பண்டிகையை ஒட்டி ரிலீசாக உள்ளது.
இந்த நிலையில் தனியார் ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த துல்கர் சல்மான் தனக்கு மிகவும் பிடித்த நகைச்சுவை நடிகர் யோகி பாபு எனக் கூறியுள்ளார். யோகி பாபு நல்ல நடிகர் மட்டும் இல்லாமல் சிறந்த மனிதர் என்ற துல்கர் சல்மான், அவர் பழகுவதற்கு ஜாலியான மற்றும் சுலபமான மனிதர் என கூறியுள்ளார். துல்கர் சல்மானின் இந்த பேச்சை கேட்டு நெகிழ்ந்த யோகி பாபு தனது டிவிட்டர் பக்கத்தில், ‘உங்களின் கனிவான வார்த்தைக்கு நன்றி துல்கர் சார். உங்களுடன் இணைந்து நடிக்கவும், காமெடி செய்யவும் காத்திருக்கிறேன்’ என கூறியுள்ளார்.
யோகிபாபுவின் பதிவுக்கு பதிலளித்துள்ள துல்கர் சல்மான், காமெடி மட்டும் இல்லாமல் உங்களால் எதுவும் சாதிக்க முடியும். உங்களுடன் இணைந்து நடிக்க விரும்புகிறேன். நீங்கள் எனக்கு பிடித்த மிகவும் சிறந்த மனிதர்களில் ஒருவர் என கூறியுள்ளார்.
Waiting sir ! Not just comedy. You can do anything. Would love to just act along side you in any genre. You are one of my favourite human beings 🤗🤗❤️❤️
— Dulquer Salmaan (@dulQuer) August 21, 2023
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான லொள்ளு சபா மூலம் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த யோகி பாபு, அமீர் நடிப்பில் வெளிவந்த யோகி படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். தொடர்ந்து பையா, அட்டக்கத்தி, பட்டத்து யானை, சூது கவ்வும், மான் கராத்தே, பரியேறும் பெரிமாள், கோலமாவு கோகிலா, ஜெயிலர், பொம்மை நாயகி, மாவீரன், டக்கர், துணிவு, அயலான், ஜவான், ஓ மை கோஸ்ட், லவ் டுடே, கூகுள் குட்டப்பா, டாக்டர், பீஸ்ட் உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்து தவிர்க்க முடியாத நகைச்சுவை நடிகராக வலம் வருகிறார்.
மேலும் படிக்க: Bhumika Chawla: ‘ரோஜா கூட்டம்' ஆப்பிள் பெண்... 'சில்லுனு ஒரு காதல்' ஐஸ்... 90ஸ் கிட்ஸ் கொண்டாடிய க்யூட் நாயகி பூமிகா பிறந்தநாள்!