Dragon Trailer : "நீ ஒரு Failure.." இது அதுல்ல... டான் பட சாயலில் டிராகன் பட டிரெய்லர்
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்து வரும் டிராகன் படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

பிரதீப் ரங்கநாதன்
கோமாளி , லவ் டுடே என அடுத்தடுத்த இரு பெரிய ஹிட் படங்களைக் கொடுத்த பிரதீப் ரங்கநாதன் . ஓ மை கடவுளே படத்தை இயக்கிய அஸ்வத் மாரிமுத்து டிராகன் படத்தில் நடித்து முடித்துள்ளார்.இந்தப் படத்தை ஏ.ஜி.எஸ் என்டர்டெயின்மெண்ட் தயாரிக்கிறது . கடந்த மே மாதம் இப்படத்தின் டைட்டில் வெளியிடப்பட்டு படப்பிடிப்பு துவங்கி நடந்து முடிந்தது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த அக்டோபர் மாதம் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.
Happy Saraswathi Poojai
Konjam Fire ah#DragonSecondLook#Dragon pic.twitter.com/S0K6h5fxss— Pradeep Ranganathan (@pradeeponelife) October 12, 2024
டிராகன் டிரெய்லர்:
டிராகன் படத்தின் டிரெய்லர் இன்று(10.02.2025) மாலை 05 மணிக்கு வெளியாகியது. காலேஜ் படிக்கும் மாணவனாக பிரதீப் ரங்கநாதன் இப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களிடம் கவனமீர்த்தது. வழக்கமான காலேஜ் கதையாக இல்லாமல் ஃபேண்டஸி கதையாக இப்படம் இருக்கும் எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் டிரெய்லரில் வரும் காட்சிகளை வைத்து பார்க்கும் போது ஒரு கல்லூரி மாணவன் தனது வாழ்க்கையில் எதிர்க்கொள்ளும் கதையாக இருக்கும் என்று தெரிகிறது. இந்த டிரெய்லரை பார்த்த ரசிகர்கள் டான் பட டிரெய்லரை பார்த்தது போன்றே உள்ளது என்றும் அஸ்வத் மாரிமுத்து ஃபேண்டஸி கலந்த எந்த காட்சிகள் இடம் பெறதததால் ரசிகர்கள் சற்று ஏமாற்றம் அடைந்தனர்.
Gumthalakadi gala gala gala 🔥🔥#DragonTrailer OUT NOW! 🐉
— AGS Entertainment (@Ags_production) February 10, 2025
▶️ : https://t.co/AhAYYTCeIv @pradeeponelife in & as #Dragon
A @Dir_Ashwath Araajagam 💥🧨
A @leon_james Musical 🎵#PradeepAshwathCombo#KalpathiSAghoram #KalpathiSGanesh #KalpathiSSuresh@archanakalpathi… pic.twitter.com/n1wyjU5seM
டான் படத்தில் சிவகார்த்திகேயன் பள்ளியில் படிக்கும் மாணவரராக, கல்லூரியில் படிக்கும் இளைஞராக நடித்திருந்தார், அதே போல தான் இந்த டிராகன் படத்தில் டிரெய்லரிலும் நடிகர் பிரதீப் ரங்கநாதன் மூன்று வித கெட்டப்பில் நடித்துள்ளார். இந்த படம் வருகிற பிப்ரவரி 21 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

