மேலும் அறிய

S.S. Rajamouli documentary : டாக்குமென்டரியாகும் எஸ்.எஸ்.ராஜமௌலி பயணம்... தொடங்கப்பட்ட பணிகள்... சந்தோஷத்தில் ரசிகர்கள்

உலகமெங்கிலும் கொண்டாடப்படும் ஒரு திரைப்பட இயக்குனராக திகழும் எஸ்.எஸ். ராஜமௌலியின் சாதனைகளுக்கு மரியாதை செலுத்தும் வகையில் விரைவில் அவர் பற்றின ஒரு டாக்குமென்டரி திரைப்படம் உருவாக உள்ளது

 

இந்திய சினிமாவை கடந்தும் சர்வதேச அளவில் ஒலிக்கப்படும் ஒரு பெயர் எஸ்.எஸ். ராஜமௌலி. பிரமாண்டத்தை தனது படங்களில் மட்டுமே காட்டாமல் வெற்றியிலும் அதை நிரூபித்த கலைஞன். இவருடன் சேர்த்து ஒட்டுமொத்த தெலுங்கு சினிமா உலகையுமே சர்வதேச அளவில் திரும்பிப் பார்க்க செய்தவர்.  

 

S.S. Rajamouli documentary : டாக்குமென்டரியாகும் எஸ்.எஸ்.ராஜமௌலி பயணம்... தொடங்கப்பட்ட பணிகள்... சந்தோஷத்தில் ரசிகர்கள்

 

விருதுகளை குவித்த ஆர்.ஆர்.ஆர் :

தற்போது எஸ்.எஸ். ராஜமௌலி தனது திரை வாழ்க்கையில் உச்சத்தில் இருக்கிறார் என்றால் அது மிகையல்ல. உலகத்தின் கவனத்தை ஈர்த்த ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் அதன் சிறப்பான திரைக்கதைக்காக மட்டுமின்றி சிறந்த நடிப்பிற்காகவும் ஏராளமான விருதுகளை சர்வதேச அளவில் கைப்பற்றியதோடு சிறந்த வெளிநாட்டு திரைப்படத்திற்கான விருதையும் வென்று சாதனை படைத்தது. 


டாக்குமென்டரியாக உருவாகுவும் ராஜமௌலியின் பயணம் :

அந்த வகையில் உலகமெங்கிலும் கொண்டாடப்படும் ஒரு திரைப்பட இயக்குனராக திகழும் எஸ்.எஸ். ராஜமௌலியின் சாதனைகளுக்கு மரியாதை செலுத்தும் வகையில் விரைவில் அவர் பற்றின ஒரு டாக்குமென்டரி திரைப்படம் உருவாக உள்ளது எனும் தகவல் சினிமா வட்டாரங்கள் மூலம் அறியப்படுகிறது. தயாரிப்பாளர் ராகவ் கண்ணாவின் புதிய தயாரிப்பு நிறுவனமான ரிவர்லேண்ட் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இந்த டாக்குமென்டரி படத்தை தயாரிக்கும் எனவும் கூறப்படுகிறது. 

 


முழுமையான பான் இந்திய படங்கள் :

எஸ்.எஸ். ராஜமௌலி பல வகையிலும் இந்தியாவை உலக வரைபடத்தில் முன்னிலை படுத்தியுள்ளார். அவரின் பல படங்கள் மொழி, ரீஜனல் எல்லைகளுக்கு அப்பாற்பட்ட ஒரு பான் இந்திய திரைப்படங்கள் என்பதை நிரூபித்துள்ளன. இந்த மரியாதைக்குரிய இயக்குனருக்கு  நன்றி தெரிவித்து அவரின் திரையுலக பயணத்தை பெருமைப்படுத்தும் வகையில் அமைக்கப்பட உள்ளது இந்த டாக்குமென்டரி திரைப்படம் எனக் கூறப்படுகிறது. 

 

S.S. Rajamouli documentary : டாக்குமென்டரியாகும் எஸ்.எஸ்.ராஜமௌலி பயணம்... தொடங்கப்பட்ட பணிகள்... சந்தோஷத்தில் ரசிகர்கள்

பணிகள் தொடங்கின :

மேலும் இந்த டாக்குமென்டரி படத்திற்கான பணிகள் இந்த வாரம் ஹைதராபாத்தில் தொடங்கப்பட்டுள்ளது. தற்போது எஸ்.எஸ். ராஜமௌலி அவரின் படப்பிடிப்பு சார்ந்த பணிகளில் மிகவும் பிஸியாக இருப்பதாலும் அவரால் அவரின் பணிகளை உடனே முடிக்க முடியாத காரணத்தாலும் ஒரு சில மாதங்கள் அவருடன் தொடர்பில் இருந்து அவரை பற்றின தகவல்களை சேகரித்த பின்னர் பார்வையாளர்களுக்கும் ரசிகர்களுக்கும் அவரின் வாழ்க்கையை நெருக்கமாக கொண்டு செல்வதற்கான முயற்சிகள் தொடங்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.   

 

 

அடுத்த படத்திற்கு தயார் :

2001ம் ஆண்டு 'ஸ்டூடண்ட் நம்பர் 1' என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் தனது திரை பயணத்தை தொடர்ந்த எஸ்.எஸ். ராஜமௌலி அடுத்ததாக நடிகர் மகேஷ் பாபுவுடன் இணைந்து அட்வென்ச்சர் படம் ஒன்றில் களம் இறங்க உள்ளார் என்ற தகவலை டொராண்டோ சர்வதேச திரைப்பட விழா 2022ல் தெரிவித்தார். ஜேம்ஸ் பாண்ட் மற்றும் இந்தியானா ஜோன்ஸ் போன்றவர்களின் படங்களை மையமாக வைத்து உருவாக்கப்பட உள்ளது எனத் தெரிவித்தார் ராஜமௌலி.  இந்த தகவல் அவரின் ரசிகர்களின் ஆவலையும் எதிர்பார்ப்பையும் இப்போதில் இருந்தே தூண்டியுள்ளது. 

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

விஜய் தேவரகொண்டா vs ரிஷிகாந்த்.. பெண்கள் பார்வையில் யார் Green Flag?
விஜய் தேவரகொண்டா vs ரிஷிகாந்த்.. பெண்கள் பார்வையில் யார் Green Flag?
தனுஷ் படத்தில் போலீஸ் வேடத்தில் சாய் பல்லவி..ஓம் பட க்ளிம்ப்ஸ் வீடியோ வெளியானது
தனுஷ் படத்தில் போலீஸ் வேடத்தில் சாய் பல்லவி..ஓம் பட க்ளிம்ப்ஸ் வீடியோ வெளியானது
ஆபாச வார்த்தையில் திட்டிய விஜய் தேவரகொண்டா...இவருக்கு வாய்ல தான் சனி
ஆபாச வார்த்தையில் திட்டிய விஜய் தேவரகொண்டா...இவருக்கு வாய்ல தான் சனி
" இதில் என்ன தவறு இருக்கிறது ?"கணவர் விஜய் தேவரகொண்டா குறித்த சர்ச்சைக்கு ராஷ்மிகா மந்தனா விளக்கம்!

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Aavin Price: பொதுமக்கள் ஷாக்..! ஆவின் பொருட்களின் விலை உயர்வு - நெய், இனிப்பு - எதற்கு எவ்வளவு தெரியுமா?
பொதுமக்கள் ஷாக்..! ஆவின் பொருட்களின் விலை உயர்வு - நெய், இனிப்பு - எதற்கு எவ்வளவு தெரியுமா?
Anbil Mahesh: அன்பில் மகேஷை விடுவிக்க போராடிய திமுக..! நவ.6 வரை சிறையிலடைக்க நீதிமன்றம் உத்தரவு - காரணம்?
அன்பில் மகேஷை விடுவிக்க போராடிய திமுக..! நவ.6 வரை சிறையிலடைக்க நீதிமன்றம் உத்தரவு - காரணம்?
வலிப்பு வந்தது போல் நடிப்பு.. சிதறி கிடந்த ரத்தம்.. சிறையில் இருந்து கைதிகள் தப்பியது எப்படி? பரபரப்பு தகவல்
வலிப்பு வந்தது போல் நடிப்பு.. சிதறி கிடந்த ரத்தம்.. சிறையில் இருந்து கைதிகள் தப்பியது எப்படி? பரபரப்பு தகவல்
E100 Ethanol: இனி பெட்ரோலே வேண்டாம்..! 100% எத்தனாலில் ஓடும் வாகனங்களுக்கு மத்திய அரசு அனுமதி - புதிய மாற்றம்
இனி பெட்ரோலே வேண்டாம்..! 100% எத்தனாலில் ஓடும் வாகனங்களுக்கு மத்திய அரசு அனுமதி - புதிய மாற்றம்
“யாருக்கு உறுத்தியது எனத் தெரியவில்லை” - லஞ்சப் புகாரில் கைதான அன்பில் மகேஸ் பரபரப்பு பேட்டி
“யாருக்கு உறுத்தியது எனத் தெரியவில்லை” - லஞ்சப் புகாரில் கைதான அன்பில் மகேஸ் பரபரப்பு பேட்டி
செம்பரம்பாக்கம் ஏரி பாதுகாப்பு: நீர் திறக்கும் முன் மக்களுக்கு எச்சரிக்கை - முதலமைச்சர் விஜய் உத்தரவு
செம்பரம்பாக்கம் ஏரி பாதுகாப்பு: நீர் திறக்கும் முன் மக்களுக்கு எச்சரிக்கை - முதலமைச்சர் விஜய் உத்தரவு
கியூபாவை கைப்பற்றப்போவதாக ட்ரம்ப் மிரட்டல் - 67 ஆண்டுகளாக நிறைவேறாத அமெரிக்காவின் ஆசை!
கியூபாவை கைப்பற்றப்போவதாக ட்ரம்ப் மிரட்டல் - 67 ஆண்டுகளாக நிறைவேறாத அமெரிக்காவின் ஆசை!
Anbil Mahesh Arrest: அன்பில் மகேஸ் கைது ஏன்? பின்னணியில் நடந்தது என்ன? பரபரப்பு வீடியோ
அன்பில் மகேஸ் கைது ஏன்? பின்னணியில் நடந்தது என்ன? பரபரப்பு வீடியோ
Embed widget