சூர்யாவை வைத்து ஸ்கெட்ச் போடும் திமுக?.. வடிவேலு கதிதான்.. ரெட் அலர்ட் கொடுக்கும் பிரபலம்
வரும் சட்டமன்ற தேர்தலில் நடிகர் சூர்யா போட்டியிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது

அரசியலுக்கு வருவேன், நிச்சயம் கட்சி தொடங்குவேன் என அறிவித்த ரஜினி திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் ஜகா வாங்கிவிட்டார். அருணாச்சலம் படம் வெளியான சமயத்திலும் ரஜினி அரசியலுக்கு வருவார் என்றே செய்திகள் வெளியானது. தமிழக மக்களை விட அதிகம் ஏமாற்றம் அடைந்தது அவரது ரசிகர்கள் தான். ரஜினி வருவார் என்று எதிர்பார்த்த நிலையில் கமல் திடீரென மக்கள் நீதி மய்யம் கட்சி தொடங்கினார். கட்சி பெயர் மட்டுமே இருக்கிறது தொண்டர்களைத்தான் காணவில்லை.
விஜய் அரசியல் என்ட்ரி
இந்நிலையில், தமிழ் திரையுலகில் இருந்து நடிகர் விஜய் தவெக கட்சியை தொடங்கி தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். தற்போது மதுரையில் தவெக கட்சியின் இரண்டாவது மாநாடு நடைபெற இருக்கிறது. இந்நிலையில் பிரபல சினிமா விமர்சகரும், பத்திரிகையாளருமான அந்தணன் அளித்த பேட்டிதான் சூர்யாவின் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. 2026 சட்டமன்ற தேர்தலில் கொங்கு பகுதியில் சூர்யாவை போட்டியிட வைக்க திமுக திட்டமிட்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.
விஜயை எதிர்த்து சூர்யா போட்டி
இதுகுறித்து அந்தணன் பேசியதாவது, "கொங்கு மண்டலத்தில் பாஜக மற்றும் அதிமுகவிற்கு சாதகமான இடமாக இருக்கிறது. எனவே சூர்யாவை அங்கு களமிறக்கினால் திமுகவின் பலம் கூட வாய்ப்பு இருப்பதாக பேச்சு அடிபடுகிறது. சமீபத்தில் நடந்த அகரம் விழாவில் திமுக பிரமுகர்கள் அதிகம் கலந்துகொண்டு சூர்யாவை வாழ்த்தியது எடுத்துக்காட்டு. சூர்யாவின் விழாவில் திமுகவினரே அதிகம் காணப்பட்டனர். அது மட்டும் இல்லாமல் நடிகர் சூர்யா தனது ரசிகர்களை சந்திக்கும் போதெல்லாம் உங்களுக்கு சிறப்பான எதிர்காலம் காத்துக் கொண்டிருக்கிறது என்று கூறி வருகிறார்.
திமுக திட்டம் பலிக்குமா?
விஜய்யை எதிர்க்க சரியான ஆளாக சூர்யா இருப்பார் என்பதே திமுகவின் கணிப்பு. விஜய் கட்சி தொடங்கிய நாளில் இருந்து திமுக தான் என் எதிரி எனக்கூறி திமுகவை கடுமையாக விமர்சித்து வருகிறார். ஆனால், சூர்யா தனிக்கட்சி தொடங்கவும் வாய்ப்பு இருக்கிறது. திமுகவில் இணைவது அல்லது தேசிய கட்சியோடு சேர்ந்து களம் காண்பதை விட அதைத்தான் அவரும் செய்வார் என எதிர்பார்க்கலாம். ஆனால், சூர்யா இல்லை என்றால் அவரது குடும்பத்தை சேர்ந்த கார்த்தி, சிவகுமாரை களமிறக்க திமுக தயாராக இருக்கிறதாகக் கூறப்படுகிறது. அது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை.
காணாமல் போன வடிவேலு
சூர்யாவிற்கு அரசியலை பற்றி நான் சொல்லி தெரிய வேண்டியது இல்லை. நம் கண் முன்பே வடிவேலு இருக்கிறார். திமுகவிற்கு ஆதரவாக நட்சத்திர பேச்சாளராக வலம் வந்து தமிழ் சினிமாவில் தூக்கி எறியப்பட்டவர். சூர்யா அரசியலுக்கு வருகிறாரா வரவில்லையா என்பதை விட ஒரு பத்திரிகை எழுதிய தகவலை பேசிப் பேசி அதை உண்மையாக்க முயற்சித்து வருகிறார்கள் என்று அந்தணன் தெரிவித்துள்ளார்.





















