Divya bharathi : என்னை நானே வெறுத்தேன்; இது தவறு அல்ல என உணர்ந்தேன்: மனம் திறந்த திவ்ய பாரதி
விமர்சனங்களை மனதில் கொள்ளாத வரையிலும், பாராட்டுக்களை நம் தலையில் சுமக்காத வரையிலும், நாம் எப்போதும் வலிமையுடனும் அன்புடனும் இருப்போம் என திவ்ய பாரதி பதிவிட்டுள்ளார்.
மாடலிங் துறையில் தன் பயணத்தை துவங்கிய திவ்ய பாரதி, “ஃபேரி டேல்” என்ற குறும் படத்தில் நடித்து இருந்தார். பின் முன்னணி இசையமைப்பாளர் மற்றும் நடிகருமான ஜி.வி பிரகாஷிற்கு பேச்சுலர் படத்தில் ஜோடியாக நடித்து பிரபலமானார். அன்றிலிருந்து இன்று வரை அவருக்கு பல ரசிகர்கள் கூடி கொண்டே போகின்றனர். 2 மில்லியனிற்க்கும் மேற்ப்பட்ட ஃபாலோவர்ஸ்களை கொண்ட இவர், அடிக்கடி விதவிதமான பதிவுகளை ஷேர் செய்து வருவார். அந்த வகையில், உருவ கேலி குறித்து பேசியுள்ளார்.
இந்த பதிவு நிச்சயமாக எதையும் விளக்கவோ அல்லது நிரூபிக்கவோ அல்ல, ஆனால் இது உங்களின் அனைத்து குறைபாடுகளை நேசிப்பதற்காக. சமீப நாட்களில், எனது உடல் வடிவம் போலியானது, நான் ஹிப் பேட்களைப் பயன்படுத்துகிறேன் அல்லது என் இடுப்புக்கு அறுவை சிகிச்சை செய்து கொண்டேன் என்று மக்கள் குறிப்பிடும் சில கருத்துகளைப் பார்க்கிறேன்! அந்த நாட்களில், "ஃபாண்டா பாட்டில் " "எலும்புக்கூடு" மற்றும் பல மோசமான கருத்துக்களை கேட்டுள்ளேன். எனது கல்லூரி நாட்களில் எனது ஸ்லாம் புத்தகத்திலிருந்து ஒரு பக்கத்தை இணைத்துள்ளேன், அங்கு எனது வகுப்புத் தோழி ஒருவர் எனது உடல் அமைப்பைக் கேலி செய்து வரைந்திருப்பதை நீங்கள் பார்க்கலாம்.
இவை அனைத்தும் என்னைக் கடுமையாகப் பாதித்து, என் உடலை வெறுக்கும் அளவுக்கு என்னைத் தள்ளியது; மக்கள் முன் நடக்க கூட பயமாக இருந்தது. இது தவறு அல்ல; என் இடுப்பு எலும்பு அமைப்பு இயற்கையிலேயே இப்படிதான் உள்ளது என்பதை நான் எனக்கே சொல்லிக்கொண்டேன்.
View this post on Instagram
பின்னர் 2015 இல், நான் ஒரு இன்ஸ்டாகிராம் பக்கத்தை திறந்து எனது மாடலிங் பயணத்தைத் தொடங்கினேன். நான் பதிவிடும் ஒவ்வொரு புதிய படத்திலும், என் உடல் அமைப்புக்காக நான் பாராட்டுகளைப் பெற ஆரம்பித்தேன். நான் ஜிம்மிற்கு செல்லாத காலத்தில், பலர் எனது வொர்க்-அவுட் பற்றி கேட்க தொடங்கினர். எனது உடல் அமைப்பை பலரும் ரசித்ததை அறிந்து வியந்தேன். எல்லாவற்றிற்கும் எப்போதும் வெறுப்பவர்களும் காதலர்களும் இருக்கிறார்கள் என்பதையும், நம் குறைகளை நாம் எப்படிப் பறைசாற்றுகிறோம் என்ற சக்தி நமக்குள்ளேயே இருக்கிறது என்பதையும் உணர்ந்தேன்.
அப்போதிருந்து நான் என் உடலை நன்றாக பார்த்துக்கொள்ள ஆரம்பித்தேன், அது என் நம்பிக்கையை வளர்த்தது. வித்தியாசமான உடல் அமைப்புடன் இருப்பது பரவாயில்லை, அந்த விமர்சனங்களுக்கு மத்தியில் நீங்கள் உங்களை எப்படி நேசிக்கிறீர்கள் என்பது மிக முக்கியம். அந்த நாட்களில் என்னை தைரியப்படுத்துவதற்கக யாராவது இருந்திருந்தால் நன்றாக இருந்து இருக்கும் விரும்புகிறேன்!
அன்பான சக பெண்களே, விமர்சனங்களை மனதில் கொள்ளாத வரையிலும், பாராட்டுக்களை நம் தலையில் சுமக்காத வரையிலும், நாம் எப்போதும் வலிமையுடனும் அன்புடனும் இருப்போம். இந்த பயணத்தில் நான் உங்களுடன் இருக்கிறேன் என்று உறுதியளிக்கிறேன்.” என்ற கேப்ஷனுடன் ஒரு பதிவை ஷேர் செய்துள்ளார்.