Director Vetrimaaran: தியேட்டர்தான் பெஸ்ட்... ஓடிடியில் சுதந்திரமே இல்லை.. கொந்தளித்த வெற்றிமாறன்..
சென்னை இலக்கிய திருவிழாவில் இயக்குநர் வெற்றி மாறன் ஓடிடி மற்றும் திரையரங்குகள் வெளியீடு குறித்து தனது கருத்தை முன்வைத்துள்ளார்.
சென்னை இலக்கிய திருவிழாவில் இயக்குநர் வெற்றி மாறன் ஓடிடி மற்றும் திரையரங்குகள் வெளியீடு குறித்து தனது கருத்தை முன்வைத்துள்ளார்.
தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பில் சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் சென்னை இலக்கியத் திருவிழா 2023 நடைபெற்றது. கடந்த ஜனவரி 6 ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த விழாவினை தொடங்கி வைத்த நிலையில் நேற்று நிறைவடைந்தது. இதில் நேற்று முன்தினம் நடந்த நிகழ்வில் தமிழ் சினிமாவின் குறிப்பிடத்தகுந்த இயக்குநர்களில் ஒருவரான வெற்றி மாறன் பங்கேற்றார்.
அவரிடம் ஏராளமான கேள்விகள் கேட்கப்பட்ட நிலையில் ஓடிடி ஓடிடி வருகைக்குப் பின் நாம நினைச்ச மாதிரி படம் எடுக்கக்கூடிய சுதந்திரம் இருக்கிறது என நீங்கள் உணர்கிறீர்களா என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அதற்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் ஓடிடியில் படங்களை வெளியிடுவதில் அதிக சுதந்திரம் காணப்பட்டது போல தோன்றியது. ஆனால் நான் இப்போ சொல்றேன். தியேட்டர்களில் படம் வெளியிடுவதில் உள்ள சுதந்திரம் எதிலும் இல்லை என வெற்றிமாறன் தெரிவித்துள்ளார்.
View this post on Instagram
ஓடிடியில் படத்தை கொடுப்பதால் நாம் செலவிட்ட பணம் திரும்ப கிடைத்து விடும். அதேசமயம் ஒரு படத்தை தியேட்டரில் வெளியிட்டால் அந்த படம் முதலீடு செய்ததற்கு அதிகமாகவோ அல்லது குறைவாகவோ பணம் கிடைக்க வழி செய்யும். இன்னும் கொஞ்சநாள் கழித்து ஓடிடி தளங்கள் நம்மிடம் இப்படித்தான் படம் வேண்டுமென நிபந்தனை விதித்தால், நாம் அதை நோக்கி நகர்வோம். இதனால் நமது படைப்பு சுதந்திரம் பறிக்கப்படும். அந்த மாதிரி நிலை வரக்கூடாது என நினைக்கிறேன் என தெரிவித்துள்ளார்.
விடுதலை ரிலீஸ் பணிகள் தீவிரம்
அசுரன் படத்திற்குப் பிறகு இயக்குநர் வெற்றிமாறன் சூரி மற்றும் விஜய் சேதுபதி முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் விடுதலை படத்தை இயக்கியுள்ளார். இளையராஜா இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. முதல் முறையாக வெற்றிமாறன் - இளையராஜா கூட்டணி இணைந்துள்ளதால் படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இப்படத்தில் நடிகர் சூரி போலீஸ் வேடத்தில் நடிக்க,விஜய் சேதுபது போராளியாக நடித்து வருகிறார். மேலும் முக்கிய கேரக்டரில் ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான ராஜீவ் மேனன், இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.