வடசென்னை 2 அப்டேட் தந்த வெற்றிமாறன்.. அன்புவின் எழுச்சிக்கு முன்பு அந்த படம்.. ரசிகர்கள் செம ஹேப்பி!
வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் வடசென்னை 2 குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.

இயக்குநர் வெற்றிமாறன் உருவான வடசென்னை திரைப்படம் கடந்த 2018ஆம் ஆண்டு வெளியானது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அன்புவின் எழுச்சி ஒரு பக்கம், ராஜனாக நடித்த அமீரின் கதாப்பாத்திரத்தை ரசிகர்கள் கொண்டாடினர். இப்படத்தின் ராஜன் மனைவியாக நடித்த சந்திராவின் பழிவாங்கும் நிகழ்வையும் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக்காெண்டிருக்கின்றனர். படத்தின் கதை 1980ல் நடப்பது போல் இயக்குநர் வெற்றிமாறன் உருவாக்கியிருந்தார். அப்போது இருந்த புழல் சிறை காட்சிகளும் பிரம்மிக்க வைத்தது.
இந்நிலையில், படம் வெளியாகி 5 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், வடசென்னை 2 எப்போது என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. மேலும், வெற்றிமாறன் - சூர்யா கூட்டணியில் வாடிவாசல் படம் குறித்த அறிவிப்பு வெளியானது. ஆனால், இன்னும் படப்பிடிப்பு தொடங்கப்படவில்லை. விடுதலை படம் முடிந்த பிறகு இப்படம் தொடங்கும் என வெற்றிமாறன் தெரிவித்திருந்தார். யாரும் எதிர்பாராத நிலையில் வெற்றிமாறன் - சிம்பு கூட்டணியில் புதிய படம் தொடர்பான புரோமோ வீீடியோவுக்கான படப்பிடிப்பை நடத்தினார் வெற்றிமாறன். ஏற்கனவே சிம்பு - வெற்றிமாறன் காம்போவில் உருவான திரைப்படம் ட்ராப் ஆனது.
மீண்டும் இணைந்திருப்பதால் ரசிகர்கள் செம குஷியடைந்துள்ளனர். ஆனால், இப்படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்பது குறித்த தகவலும் முழுமையாக வெளியாகவில்லை. இப்படத்தை தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பதாகவும் செய்திகள் வெளியானது. மேலும், வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படம் ட்ராப் ஆனதாகவும், தயாரிப்பாளர் பிரச்னை என்றும் கூறப்பட்டது. இதற்கு விளக்கம் தரும் விதமாக இயக்குநர் வெற்றிமாறன் பட விழா ஒன்றில் வடசென்னை 2 படப்பிடிப்பு நிச்சயம் தொடங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். அதற்கு முன்பாக எஸ்டிஆர் 49 படத்தை இயக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இப்படம் குறித்த அறிவிப்பு இன்னும் 15 நாளில் வரும் எனவும் அவர் கூறியுள்ளார். இப்படம் ரிலீஸ் ஆன பிறகு வடசென்னை 2வில் அன்புவின் எழுச்சி தொடரும் என ஹின்ட் கொடுத்திருக்கிறார். இந்த செய்தியறிந்து திரை ரசிகர்கள் குதூகலமடைந்துள்ளனர்.





















