மேலும் அறிய

kia Carens Clavis: 7 சீட்டர் காரென்ஸ்க்கு ப்ளான் போட்றீங்களா? ஈசியா ஓரங்கட்டும் 5 மாடல்கள் - ஜப்பான் டூ கொரியன் கார்கள்

kia Carens Clavis Rivals: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் கியாவின் காரென்ஸ் க்ளாவிஸ் மாடலுக்கு போட்டியாக கிடைக்கும், 5 எம்பிவி கார் மாடல்கள் குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.

kia Carens Clavis Rivals: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் கியாவின் காரென்ஸ் க்ளாவிஸ் மாடலுக்கு போட்டியாக கிடைக்கும், 5 எம்பிவி கார் மாடல்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

கியா காரென்ஸ் க்ளாவிஸ் - எம்பிவி போட்டியாளர்கள்..

கியா காரென்ஸ் மாடலின் மேம்படுத்தப்பட்ட எடிஷனான காரென்ஸ் க்ளாவிஸை வாங்க திட்டமிட்டுள்ளீர்களா? குடும்ப பயன்பாட்டிற்கு ஏதுவான இந்த கார் மாடலானது பல்வேறு விதமான பவர்ட்ரெயின் ஆப்ஷன்கள் மற்றும் இருக்கை அமைப்புகளுடன் கிடைக்கிறது. ரூ.11.08 லட்சத்தில் தொடங்கி ரூ.20.71 லட்சம் வரையிலான விலை வரம்பை கொண்டு, 1.5லிட்டர் நேட்சுரலி ஆஸ்பிரேடட் பெட்ரோல், 1.5 லிட்டர் டர்போ மற்றும் 1.5 லிட்டர் டர்போ டீசல் இன்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இது லிட்டருக்கு சுமார் 20 கிலோ மீட்டர் தூரம் வரை மைலேஜ் வழங்குவதாக கியா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனாலும், இந்த கார் மாடலுக்கு கடும் நெருக்கடி தரக்கூடிய பல்வேறு எம்பிவி கார் மாடல்கள் உள்ளூரில் கிடைக்கின்றன. அதில் மஹிந்த்ராவின் XUV 700,  டொயோட்டாவின் ரூமியன், மாருதி சுசூகி எர்டிகா, ஹுண்டாய் அல்கசார் மற்றும் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்டா ஆகியவை அடங்கும். இந்த மாற்று கார் மாடல்களானது விசாலமான இடவசதி, ப்ரீமியம் அம்சங்கள் மற்றும் வலுவான செயல்திறன்கள் மூலம், நடைமுறைக்கு உகந்த முறையில் காரென்ஸ் க்ளாவிற்கான மாற்றாக திகழ்கின்றன. இதுதொடர்பான விவரங்கள் கீழே வழங்கப்பட்டுள்ளன. 


kia Carens Clavis: 7 சீட்டர் காரென்ஸ்க்கு ப்ளான் போட்றீங்களா? ஈசியா ஓரங்கட்டும் 5 மாடல்கள் - ஜப்பான் டூ கொரியன் கார்கள்

காரென்ஸ் க்ளாவிஸிற்கு மாற்று ஆப்ஷன்கள்

1. மஹிந்த்ரா XUV 700

மஹிந்திரா XUV700 காரின் ஆரம்ப விலை ரூ.13.66 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் 2.0 லிட்டர் TGDi mStallion பெட்ரோல் மற்றும் 2.2 லிட்டர் mHawk டீசல் இன்ஜின் ஆப்ஷன்கள் உள்ளன. லிட்டருக்கு சுமார் 15 முதல் 18 லிட்டர் மைலேஜ் வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முக்கிய சிறப்பம்சங்களில் ஸ்மார்ட் டோர் ஹேண்டில்கள், 7 ஏர்பேக்குகள், எலெக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் மற்றும் டிரைவர் தூக்கக் கலக்கத்தை கண்டறிதல் ஆகியவை அடங்கும். பாதுகாப்பு பரிசோதனையில் 5 ஸ்டார் ரேட்டிங்கை பெற்று அசத்தியுள்ளது.


kia Carens Clavis: 7 சீட்டர் காரென்ஸ்க்கு ப்ளான் போட்றீங்களா? ஈசியா ஓரங்கட்டும் 5 மாடல்கள் - ஜப்பான் டூ கொரியன் கார்கள்

2. மாருதி சுசூகி எர்டிகா

இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள மிகவும் மலிவு விலை கார் மாடலான மாருதி சுசுகி எர்டிகா,  விலை ரூ.8.80 லட்சத்திலிருந்து (எக்ஸ்-ஷோரூம்) கிடைக்கிறது. இது 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜினுடன் வருகிறது மற்றும் CNG விருப்பத்திலும் கிடைக்கிறது. ட்ரான்ஸ்மிஷன் தேர்வுகளை கவனத்தில் கொண்டால்,  5-ஸ்பீட் மேனுவல் மற்றும் 6-ஸ்பீட் ஆட்டோமேட்டிக் (பெட்ரோல்) ஆப்ஷன்கள் வழங்கப்படுகிறது. எர்டிகா ஆட்டோமேடிக் க்ளைமேட் கன்ட்ரோல், பாதி மடிக்கக்கூடிய இருக்கை மற்றும் 6 ஏர்பேக்குகளை நிலையாக பெறுகிறது. பாதுகாப்பு பரிசோதனையில் 3 ஸ்டார் ரேட்டிங்கை பெற்றுள்ள எர்டிகா, அதிகபட்சமாக சிஎன்ஜி எடிஷனில் கிலோவிற்கு 26 கிலோ மீட்டர் தூரம் வரை மைலேஜ் அளிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

kia Carens Clavis: 7 சீட்டர் காரென்ஸ்க்கு ப்ளான் போட்றீங்களா? ஈசியா ஓரங்கட்டும் 5 மாடல்கள் - ஜப்பான் டூ கொரியன் கார்கள்

3. டொயோட்டா ரூமியன்

எர்டிகாவின் ரிபேட்ஜ் வெர்ஷனான டொயோட்டா ரூமியன் ரூ.9.56 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) என்ற தொடக்க விலையை கொண்டுள்ளது. 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷனுடன், CNG விருப்பத்தையும் வழங்குகிறது. 7 பேர் வரை அமரக்கூடிய இடவசதியை கொண்டுள்ளது. பாதுகாப்பு மற்றும் வசதி அம்சங்களில் டயர் பிரஷர் கண்காணிப்பு அமைப்பு, நிலையாக 6 ஏர்பேக்குகள் மற்றும் இன்ஜின் அணைக்கப்பட்டு கார் பூட்டப்பட்ட பிறகு 10 முதல் 60 வினாடிகள் வரை ஹெட்லைட்களை எரிய வைக்கும் ஃபாலோ-மீ-ஹோம் செயல்பாடு கொண்ட ஆட்டோ ஹெட்லேம்ப்கள் ஆகிய வசதிகளும் அடங்கும். இது பாதுகாப்பு பரிசோதனைக்கு உட்படுத்தப்படவில்லை.  அதிகபட்சமாக சிஎன்ஜி எடிஷனில் கிலோவிற்கு 26 கிலோ மீட்டர் தூரம் வரை மைலேஜ் அளிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

4. ஹுண்டாய் அல்கசார்

ஹூண்டாய் அல்கசார் கார் மாடலானது 1.5 லிட்டர் TGDi பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் CRDi டீசல் இன்ஜின் ஆப்ஷன்களை கொண்டுள்ளது. இதன் தொடக்க விலை ரூ.14.49 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மாடல் குறிப்பிடத்தக்க வகையில் 6 ஏர்பேக்குகள், பின்புற பார்க்கிங் சென்சார் மற்றும் வாய்ஸ் கமேண்டிங் ஸ்மார்ட் பனோரமிக் சன்ரூஃப் ஆகிய அம்சங்களை கொண்டுள்ளது. 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் ஆப்ஷன்களை கொண்டு, அதிகபட்சமாக 20 கிலோ மீட்டர் தூரம் வரை மைலேஜ் வழங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு பரிசோதனைக்கு இதுவரை இந்த கார் உட்படுத்தப்படவில்லை.


kia Carens Clavis: 7 சீட்டர் காரென்ஸ்க்கு ப்ளான் போட்றீங்களா? ஈசியா ஓரங்கட்டும் 5 மாடல்கள் - ஜப்பான் டூ கொரியன் கார்கள்

5. டொயோட்டா இன்னோவா க்ரிஸ்டா

டொயோட்டா இன்னோவா கிரிஸ்டாவின் விலை தற்போது GX (7S) வகைக்கு ரூ.18.85 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) தொடங்குகிறது. இந்த MPV 5-ஸ்பீட் மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்ட 2.4 லிட்டர் டீசல் இன்ஜின் மூலம் இயக்கப்படுகிறது. லிட்டருக்கு சுமார் 15 கிலோ மீட்டர் மைலேஜ் அளிக்கிறது. துளையிடன் கூடிய LED ஹெட்லேம்ப்கள், ஆம்பியண்ட் விளக்குகள் மற்றும் 7 ஏர்பேக்குகள் உடன் 7 முதல் 8 பேர் அமரும் வகையிலான இருக்கை வசதிகளுடன் கிடைக்கிறது. பாதுகாப்பு பரிசோதனையில் 5 ஸ்டார் ரேட்டிங்கை பெற்றுள்ளது.

எந்த பிரிவில் எந்த மாடல் பெஸ்ட்?

கார் மாடல்கள் தொடக்க விலை (எக்ஸ் - ஷோரூம்) முக்கிய வித்தியாசங்கள் எரிபொருள் வகைகள்
கியா காரென்ஸ் க்ளாவிஸ் ரூ.11.08 லட்சம் ப்ரீமியம் டெக்: பனோரமிக் சன்ரூஃப், ADAS, 12.3 இன்ச் டூயல் ஸ்க்ரீன்கள் பெட்ரோல், டீசல், மின்சாரம்
மாருதி சுசூகி எர்டிகா ரூ.8.80 லட்சம் பட்ஜெட் & மதிப்பு: மிகவும் மலிவு விலை, அதிக மறுவிற்பனை மதிப்பு, சிஎன்ஜி பயன்பாட்டில் இந்த பிரிவின் அதிகப்படியான மைலேஜ்  பெட்ரோல், சிஎன்ஜி
டொயோட்டா ரூமியன் ரூ.9.55 லட்சம் நம்பகத்தன்மை: எர்டிகாவை போன்றே இருந்தாலும் டொயோட்டா ப்ராண்டின் மீதான நம்பகத்தன்மை, வாரண்டி கூடுதல் பலம் பெட்ரோல், சிஎன்ஜி
மஹிந்த்ரா XUV 700 ரூ.13.66 லட்சம் செயல்திறன் & கட்டமைப்பு: சக்தி வாய்ந்த 2.0 லிட்டர் இன்ஜின், 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங், நம்பகமான எஸ்யுவி தோற்றம் பெட்ரோல், டீசல்
ஹுண்டாய் அல்கசார் ரூ.14.50 லட்சம் சொகுசான உட்புறம்: வழக்கமான எம்பிவியை காட்டிலும் அதிக மதிப்பை கொண்ட உட்புற தோற்றம், க்ளாவிஸில் உள்ள இன்ஜினை பகிர்கிறது பெட்ரோல், டீசல்
இன்னோவா க்ரிஸ்டா ரூ.18.85 லட்சம் நீடித்து உழைக்கும்: நீண்ட தூர நெடுஞ்சாலை பயணத்திற்கு ஏற்றதாகவும் மற்றும் நம்பகத்தன்மைக்கு பெயர் போனதாகவும் உள்ளது டீசல்

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

Hyundai Creta EV On EMI: 475 கிமீ ரேஞ்ச் தரும் ஹூண்டாய் கிரெட்டா EV கார ரூ.2 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
475 கிமீ ரேஞ்ச் தரும் ஹூண்டாய் கிரெட்டா EV கார ரூ.2 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
ஒரே சார்ஜில் 150 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போகிறது Ather Konarc இ ஸ்கூட்டர்! விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 150 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போகிறது Ather Konarc இ ஸ்கூட்டர்! விலை எவ்ளோ?
Maruti Suzuki Celerio on EMI: மைலேஜ்ல இத அடிச்சுக்க காரே கிடையாது.! மாருதி செலரியோ வாங்க முன்பணம், EMI எவ்வளவு.? தெரிஞ்சுக்கோங்க
மைலேஜ்ல இத அடிச்சுக்க காரே கிடையாது.! மாருதி செலரியோ வாங்க முன்பணம், EMI எவ்வளவு.? தெரிஞ்சுக்கோங்க
MG Hector Hawk: 530 கிமீ ரேஞ்ச்.! மஹிந்திரா XUV 7XO-க்கு சங்கு ஊதுமா MG Hector Hawk; பிளக்-இன் ஹைப்ரிட், EV பதிப்புகளில் அறிமுகம்
530 கிமீ ரேஞ்ச்.! மஹிந்திரா XUV 7XO-க்கு சங்கு ஊதுமா MG Hector Hawk; பிளக்-இன் ஹைப்ரிட், EV பதிப்புகளில் அறிமுகம்

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: 12 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை..! 4 மாவட்டங்களில் கனமழை - தமிழக வானிலை அறிக்கை
12 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை..! 4 மாவட்டங்களில் கனமழை - தமிழக வானிலை அறிக்கை
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
MK Stalin on Budget: ‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
Hyundai Creta EV On EMI: 475 கிமீ ரேஞ்ச் தரும் ஹூண்டாய் கிரெட்டா EV கார ரூ.2 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
475 கிமீ ரேஞ்ச் தரும் ஹூண்டாய் கிரெட்டா EV கார ரூ.2 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!
ஒரே சார்ஜில் 150 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போகிறது Ather Konarc இ ஸ்கூட்டர்! விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 150 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போகிறது Ather Konarc இ ஸ்கூட்டர்! விலை எவ்ளோ?
Aadi Krithigai 2026: அரோகரா..! ஆடிக்கிருத்திகை நாளையா? நாளை மறுநாளா? விரதம் இருப்பது எப்படி?
Aadi Krithigai 2026: அரோகரா..! ஆடிக்கிருத்திகை நாளையா? நாளை மறுநாளா? விரதம் இருப்பது எப்படி?
Embed widget