மேலும் அறிய

ஓடிடி.,யில் வெளியாகிறதா விடுதலை? பிரபல நிறுவனம் வெளியிட்ட பரபரப்பு பதிவு!

Director Vetimaara: ரெட்ஜெய்ண்ட் நிறுவனம் வினியோக உரிமையை பெற்ற நிலையில், பிரபல ஓடிடி தளம், இந்த அறிவிப்பை வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் கதையை தழுவி, விடுதலை என்கிற படத்தை இயக்குனர் வெற்றிமாறன் இயக்கி வருவது நாம் அனைவரும் அறிந்ததே. கதையின் நாயகனாக காமெடி நடிகர் சூரியும், கதாநாயகனாக விஜய் சேதுபதியும் நடித்திருக்கும் இத்திரைப்படத்தின் கொடைக்கானல் படப்பிடிப்பு சமீபத்தில் தான் முடிவடைந்தது. 

அத்தோடு அந்த நிகழ்வை தன் சக கலைஞர்களுடன் கொண்டாடி மகிழ்ந்தார் இயக்குனர் வெற்றிமாறன். காமெடி நடிகர் சூரி, கதையின் நாயகனாக அறிமுகமாகும் முதல் படம் என்பதாலும், வெற்றிமாறனின் இயக்கம் என்பதால், படம் தொடர்பான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. இந்நிலையில் தான் படத்தின் வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெய்ண்ட் மூவிஸ் நிறுவனம் பெற்றது. 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by 𝐕𝐢𝐣𝐚𝐲 𝐒𝐞𝐭𝐡𝐮𝐩𝐚𝐭𝐡𝐢 (@vijay_sethupathi__offical)

விரைவில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படும் விடுதலை படத்தில், சூரி காவலராக நடித்துள்ளார். படத்தின் போஸ்டர்களே பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், எதிர்பார்ப்புக்கும் அதற்கு கொஞ்சமும் குறையாமல் உள்ளது. இந்நிலையில், ஆஹா தமிழ் ஓடிடி நிறுவனம், நேற்று இரவு 12 மணியளவில் ஒரு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளனர். 

அதில், வெற்றிமாறனின் மிகப்பெரிய அப்டேட் இன்று வரவிருப்பதாக அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளது ஆஹா நிறுவனம். வெற்றிமாறன், இரு படங்களை தற்போது கையாண்டு வருகிறார். ஒன்று, சூரி நடிக்கும் விடுதலை. மற்றொன்று சூர்யா நடிக்கும் வாடிவாசல். வாடிவாசல் இன்னும் தொடங்கவே இல்லை. விடுதலை கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. அப்படி இருக்கும் போது, அது விடுதலை பற்றிய அப்டேட்டாக தான் இருக்க கூடும். 

ஓடிடி தளம் அதை அறிவித்திருப்பதை வைத்து பார்க்கும் போது, அது கட்டாயம் ஓடிடி வெளியீடு தொடர்பானதாக தான் இருக்க வேண்டும். படத்திற்கான வினியோக தியேட்டர் வினியோக உரிமையை ரெட் ஜெய்ண்ட் மூவிஸ் நிறுவனம் பெற்ற நிலையில், எதற்காக ஆஹா இந்த மாதிரி அப்டேட் கொடுத்தது என தெரியவில்லை. சமீபத்தில், தியேட்டருக்கு பொருத்தமான படங்களை தியேட்டரிலும், ஓடிடிக்கு பொருத்தமான படங்களை ஓடிடியிலும் வெளியிடுங்கள் என பலரும் வெளிப்படையாக பேசி வருகின்றனர். 

அந்த வகையில், விடுதலை படத்தை தியேட்டரில் ரிலீஸ் செய்வதற்கு பதில், ஓடிடி.,யில் வெளியிட தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்திருக்குமோ எனத் தோன்றுகிறது. அதே நேரத்தில், வினியோக உரிமையை பெற்ற உதயநிதிக்கு, படத்தின் சாட்டிலைட் உரிமத்தை கலைஞர் டிவிக்கு வழங்கி சரிகட்டலாம் என்று யோசித்திருக்கலாம். இது எல்லாமே யூகம் தான், ஆனால், ஏதோ ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாகப் போவது மட்டும் உண்மை. 

 

 

 

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

விஜய் தேவரகொண்டா vs ரிஷிகாந்த்.. பெண்கள் பார்வையில் யார் Green Flag?
விஜய் தேவரகொண்டா vs ரிஷிகாந்த்.. பெண்கள் பார்வையில் யார் Green Flag?
தனுஷ் படத்தில் போலீஸ் வேடத்தில் சாய் பல்லவி..ஓம் பட க்ளிம்ப்ஸ் வீடியோ வெளியானது
தனுஷ் படத்தில் போலீஸ் வேடத்தில் சாய் பல்லவி..ஓம் பட க்ளிம்ப்ஸ் வீடியோ வெளியானது
ஆபாச வார்த்தையில் திட்டிய விஜய் தேவரகொண்டா...இவருக்கு வாய்ல தான் சனி
ஆபாச வார்த்தையில் திட்டிய விஜய் தேவரகொண்டா...இவருக்கு வாய்ல தான் சனி
" இதில் என்ன தவறு இருக்கிறது ?"கணவர் விஜய் தேவரகொண்டா குறித்த சர்ச்சைக்கு ராஷ்மிகா மந்தனா விளக்கம்!

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
“யாருக்கு உறுத்தியது எனத் தெரியவில்லை” - லஞ்சப் புகாரில் கைதான அன்பில் மகேஸ் பரபரப்பு பேட்டி
“யாருக்கு உறுத்தியது எனத் தெரியவில்லை” - லஞ்சப் புகாரில் கைதான அன்பில் மகேஸ் பரபரப்பு பேட்டி
செம்பரம்பாக்கம் ஏரி பாதுகாப்பு: நீர் திறக்கும் முன் மக்களுக்கு எச்சரிக்கை - முதலமைச்சர் விஜய் உத்தரவு
செம்பரம்பாக்கம் ஏரி பாதுகாப்பு: நீர் திறக்கும் முன் மக்களுக்கு எச்சரிக்கை - முதலமைச்சர் விஜய் உத்தரவு
கியூபாவை கைப்பற்றப்போவதாக ட்ரம்ப் மிரட்டல் - 67 ஆண்டுகளாக நிறைவேறாத அமெரிக்காவின் ஆசை!
கியூபாவை கைப்பற்றப்போவதாக ட்ரம்ப் மிரட்டல் - 67 ஆண்டுகளாக நிறைவேறாத அமெரிக்காவின் ஆசை!
Anbil Mahesh Arrest: அன்பில் மகேஸ் கைது ஏன்? பின்னணியில் நடந்தது என்ன? பரபரப்பு வீடியோ
அன்பில் மகேஸ் கைது ஏன்? பின்னணியில் நடந்தது என்ன? பரபரப்பு வீடியோ
MK Stalin: அன்பில் மகேஸ் கைது ஏன்? - மு.க.ஸ்டாலின் சொன்ன பரபரப்பு காரணம்!
MK Stalin: அன்பில் மகேஸ் கைது ஏன்? - மு.க.ஸ்டாலின் சொன்ன பரபரப்பு காரணம்!
அக்.31 இல் தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் அறிவித்த திமுக! - எதற்காக தெரியுமா?
அக்.31 இல் தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் அறிவித்த திமுக! - எதற்காக தெரியுமா?
நாகை மாவட்டத்துக்கு ஆரஞ்சு அலர்ட் - எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை?
நாகை மாவட்டத்துக்கு ஆரஞ்சு அலர்ட் - எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை?
பட்டப்பகலில் திமுக பிரமுகர் ஓட ஓட வெட்டிக் கொலை.. சினிமாவை மிஞ்சிய சம்பவம் - பின்னணியில் என்ன நடந்தது?
பட்டப்பகலில் திமுக பிரமுகர் ஓட ஓட வெட்டிக் கொலை.. சினிமாவை மிஞ்சிய சம்பவம் - பின்னணியில் என்ன நடந்தது?
Embed widget