Aneethi Trailer: ‘எளிய மனிதர்களுக்கு இழைக்கப்படும் துன்பம்’ ... கவனம் பெறும் வசந்தபாலனின் ’அநீதி’ பட ட்ரெய்லர்..!
இயக்குநர் வசந்தபாலன் இயக்கத்தில் உருவாகியுள்ள அநீதி படத்தின் டீசர் வெளியாகி இணையத்தில் வைரலாகியுள்ளது.
இயக்குநர் வசந்தபாலன் இயக்கத்தில் உருவாகியுள்ள அநீதி படத்தின் டீசர் வெளியாகி இணையத்தில் வைரலாகியுள்ளது.
2002 ஆம் ஆண்டு வெளியான ஆல்பம் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் வசந்தபாலன். அந்த படம் தோல்வியடைய, 4 ஆண்டுகள் கழித்து வெயில் படத்தின் மூலம் மீண்டும் வந்தார் வசந்தபாலன். இந்த படம் சூப்பர் ஹிட்டானது. இதனைத் தொடர்ந்து அங்காடி தெரு, அரவான், காவியத்தலைவன் உள்ளிட்ட படங்களை இயக்கி ரசிகர்களிடையே கவனம் பெற்றார். கடைசியாக 2021 ஆம் ஆண்டு இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி.பிரகாஷை வைத்து ‘ஜெயில்’ படத்தை இயக்கினார். இந்த படம் தோல்வியை சந்தித்த்து.
எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள அநீதி படம்
இந்த நிலையில் தான் அடுத்ததாக வசந்தபாலன் இயக்கத்தில் ‘அநீதி’ படம் உருவாகியுள்ளது. அர்ஜூன் தாஸ், துஷாரா விஜயன், அர்ஜூன் சிதம்பரம், வனிதா விஜயகுமார் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தின் அறிவிப்பு 2021 ஆம் ஆண்டு வெளியான நிலையில், நீண்ட இடைவெளிக்குப் பின் படம் ரிலீசுக்கு தயாராகியுள்ளது. ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ள அநீதி படம் ஜூலை 21 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது.
இதற்கிடையில் கடந்த ஜூலை 10 ஆம் தேதி அநீதி படத்தின் டீசர் வெளியானது. ரத்தம், சண்டை, கோபம், வலி என வசனங்களே இல்லாமல் வெறும் உணர்ச்சிகளால் காட்சிகள் நகரும் படி டீசர் வெளியாகியிருந்தது. இப்படியான நிலையில் அநீதி படம், ‘மறுக்கப்பட்ட எளிய மனிதர்களுக்கான நீதியின் குரலை வெளிப்படுத்தும்’ என வசந்தபாலன் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் அநீதி படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. இதில், டெலிவரி பாயாக வேலை செய்யும் அர்ஜூன் தாஸூக்கு, சரியாக இருக்கும் எளிய மனிதர்களின் வாழ்க்கையில் ஏற்படும் அநீதி ஏற்படுகிறது. அதற்கு அவர்களின் எதிர்வினை என்னவாக இருக்கிறது என்பதை அடிப்படையாக கொண்ட காட்சிகள் இடம் பெற்றுள்ளது, மேலும் உணவு டெலிவரி செய்யும் ஊழியர்கள் படும் அவமானங்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது கவனத்தைப் பெற்றுள்ளது.