Suriya 42 : சிங்கமும் சிறுத்தையும் இணையும் படத்தின் பூஜை தேதி வெளியானது!
செண்டிமெண்ட் இயக்குநருடன் அடுத்த படத்தின் பூஜையை துவங்கவிருக்கும் சூர்யா
சிறுத்தை சிவாவின் இயக்கத்தில் அடுத்த படத்தை சூர்யா நடிக்கவுள்ளார் என்று பேசப்பட்ட நிலையில், இப்போது அந்த தகவல் உறுதிசெய்யப்பட்டுள்ளது.
முன்னதாக வந்த அப்டேட்களின் படி, சூர்ய 42 படத்தின் பூஜை விரைவில் நடக்க இருப்பதாகவும், இந்தப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை திஷா பதானி கதாநாயகியாக நடிக்க இருப்பதாகவும், இசையமைப்பாளராக தேவி ஸ்ரீ பிரசாத் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியானது.
View this post on Instagram
இப்படத்தின் பூஜையானது, சூர்யா நடித்த சூரரைப்போற்று படத்தின் பூஜை நடந்த அதே இடத்தில் நடக்கவுள்ளது. சூரரைப்போற்று மக்களிடையே பெறும் வரவேற்பை பெற்று தேசிய விருதுகளையும் குவித்தது. செண்டிமென்ட்டாக அந்த படத்தின் பூஜை நடந்த இடத்திலேயே சிறுத்தை சிவா படக்குழுவினர் படத்தை துவங்க திட்டமிட்டுள்ளனர். இந்த பூஜை வளசரவாக்கத்தில் உள்ள சூர்யாவிற்கு சொந்தமான இடத்தில் நடக்கவிருக்கிறது.
After 9Years Tharwatha Vasthunna Combination #SURYA + #DSP
— SivaBhooka (@BhookaSiva) August 19, 2022
Announcement ki Mundhe ee Range Celebrations Ante Announce Ayyaka Mental Ekkinchesthaaru
Thank You Dear all @Suriya_offl AnnA Fans Thanks For The Love #Aaru #Maayavi #Singam1 #Singam2
Now #surya42 pic.twitter.com/BZlycJJ60u
இசையமைப்பாளர் டி.எஸ்.பி உடன் 9 வருடங்களுக்கு பிறகு, இப்படத்தின் மூலம் இணைகிறார் சூர்யா. சூர்யா 42 படத்தை பற்றி மக்கள் அதிக எதிர்ப்பார்ப்புக்களுடன் இருக்கிறார்கள். சிங்கம் படத்தில் இருவரின் காம்போ வேற லெவலில் வர்க்-அவுட்டாகி இருக்கும்.
நடிகர் சூர்யாவின் தம்பி நடிகர் கார்த்தியை வைத்து “சிறுத்தை” படத்தை இயக்கி வெறும் சிவா சிறுத்தை சிவாவாக மாறினார். அப்படிப்பட்ட ப்ளாக் பஸ்டர் கொடுத்தவர் சிறுத்தை சிவா. அதுமட்டுமல்லாமல் நடிகர் அஜித்தை வைத்து இயக்கிய வீரம் மற்றும் விஸ்வாசம் ஆகிய படங்கள் பாக்ஸ் ஆஃபிஸில் நல்ல வசூலை அள்ளியது. கடைசியாக இயக்கிய அண்ணாத்த படம் கொஞ்சம் சுமாராகவே இருந்தது.
இப்போது நடிகர் சூர்யா, இயக்குநர் பாலா இயக்கத்தில் நடித்து வருகிறார். சூர்யாவின் 41 வது படமாக உருவாகி வரும் புதிய திரைப்படத்தில் கீர்த்தி ஷெட்டி நாயகியாக நடிக்க ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இதுமட்டுமல்லாமல் தமிழ் சினிமாவின் மிக முக்கியமான இயக்குநருமான வெற்றிமாறன் சூர்யாவுடன் முதன்முறையாக வாடிவாசல் படத்திலும் இணைந்திருக்கிறார்.