சிலை செதுக்குற மாதிரி செதுக்கனும்...கேம் சேஞ்சர் படம் பற்றி ஷங்கர் உருட்டு
கேம் சேஞ்சர் படத்தில் தனக்கு முழு திருப்தி ஏற்படவில்லை என்றும் படத்தின் நிறைய காட்சிகளை நீக்க வேண்டியதாக இருந்ததாகவும் இயக்குநர் ஷங்கர் தெரிவித்துள்ளார்
கேம் சேஞ்சர்
ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடித்துள்ள கேம் சேஞ்சர் படம் கடந்த ஜனவரி 10 ஆம் தேதி வெளியானது. இந்தியன் 2 படத்தைத் தொடர்ந்து இப்படமும் ரசிகர்களிடம் செம அடியை சமாளித்து வருகிறது என்று சொல்லலாம். ஜெண்டில்மேன் , காதலன் , இந்தியன் , அந்நியன் போன்ற படங்களில் மக்களை மிரள வைத்த ஷங்கர் தற்போது ரசிகர்களின் ரசனைக்கு செட் ஆகாத இயக்குநராக மாறியிருக்கிறார் என்றால் மிகையாகாது. பாகுபலி , கே.ஜி.எஃப் போன்ற படங்களில் உள்ள பிரம்மாண்டமும் திரைக்கதை நேர்த்தியும் பார்த்த ரசிகர்களுக்கு ஷங்கரின் படங்களில் திரைக்கதையும் காட்சிகளும் சலிப்பையே ஏற்படுத்துகின்றன.
இந்தியன் 2 படத்திற்கு பின் கேம் சேஞ்சர் படத்தில் ஷங்கர் தனது தவறை சரி செய்துகொள்வார் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு கேம் சேஞ்சர் படம் ஏமாற்றத்தையே கொடுத்தது. கேம் சேஞ்சர் படம் குறித்து ஷங்கர் சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பேசியுள்ளார்
5 மணி நேரம் படம்
" கேம் சேஞ்சர் படத்தின் இறுதி ஆவுட்புட்டில் எனக்கு பெரியளவில் திருப்தி இல்லை. நேரத்திற்காக நிறைய காட்சிகளை படத்தில் இருந்து நீக்க வேண்டியதாகிவிட்டது. நான் 5 மணி நேரத்திற்கு ஃபுட்டேஜ் எடுத்து வைத்திருந்தேன். கதையோடு சேர்ந்து இருந்த பல நல்ல காட்சிகளை இதனால் நிக்கினோம். படம் எடுப்பது என்பது சிலை செதுக்குவது தான். மார்பிள் என்பதால் அதை செதுக்காமல் அப்படியே வைத்திருக்க முடியுமா. " என ஷங்கர் தெரிவித்துள்ளார்.
"I am not completely satisfied with the output of #GameChanger, I should have done better. Many good scenes have been trimmed due to time constraints. Total duration came more than 5 Hours...we have cut down a few things to acquire a sculpture"
— AmuthaBharathi (@CinemaWithAB) January 14, 2025
- Shankar pic.twitter.com/AUagxeTr5r
சமீப காலங்கள் இயக்குநர்கள் மீது தொடர்ச்சியாக வைக்கப்படும் குற்றச்சாட்டு சொன்ன நேரத்தில் சொன்ன பட்ஜெட்டில் படத்தை எடுத்து கொடுப்பதில்லை என்பது. மேலும் பேப்பரில் எழுதியதை விட்டுவிட்டு நிறைய காட்சிகளை எடுத்து கடைசியில் அதை படத்திலும் பயண்படுத்தாமல் போவது. சீனியர் இயக்குநரான ஷங்கரே இந்த மாதிரி தயாரிப்பு நிறுவனத்தின் பணத்தை வீணடிப்பதா என சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.