இந்த பிரபலங்களுக்கு காளை தான் செல்லப்பிராணியா?

Published by: ABP NADU

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு என்றாலே மக்கள் பெருமையாகவும் பூரிப்பாகவும் மாறிவிடுவர்.

ஜல்லிக்கட்டு காளைகளை வளர்ப்பது என்றாலே தனி கெத்துதான்.

தமிழக இளைஞர்கள் ஜல்லிக்கட்டில் கலந்துகொள்வதிலும் காளைகளை வளர்ப்பதிலும் பெரிதும் ஆர்வம் காட்டுவர்.

அதுபோல சில பிரபலங்களும் ஜல்லிக்கட்டு காளை வளர்ப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர்.

அதில் சிலரது காளைகள் ஜல்லிக்கட்டில் கலந்துகொள்கின்றன.

சூரி

தமிழ் சினிமா நடிகர் சூரி வளர்க்கும் காளை ஜல்லிக்கட்டில் கலந்துகொள்கிறது. தன் காளையுடன் நிற்கும் புகைப்படம் மற்றும் வீடியோவை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

ஓ.பன்னீர் செல்வம்

முன்னால் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஜல்லிக்கட்டு காளை வளர்க்கிறார்.

விஜயபாஸ்கர்

முன்னால் அமைச்சர் சி.விஜயபாஸ்கரின் காளை ஜல்லிக்கட்டில் கலந்துகொள்கிறது.

ஜீவன் தொண்டமான்

இலங்கையின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் ஜல்லிக்கட்டு காளை வளர்க்கிறார். அவரின் காளையும் ஜல்லிக்கட்டில் கலந்துகொள்கிறது.