Shankar Salary: 'இந்தியன் 2' தோல்வியடைந்தாலும் 'கேம் சேஞ்சர்' படத்திற்கு வெயிட்டாக சம்பளம் வாங்கிய ஷங்கர்!
தெலுங்கில் உருவாகியுள்ள 'கேம் சேஞ்சர்' படத்திற்கு பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் வாங்கியுள்ள சம்பளம் குறித்த தகவல் இப்போது வெளியாகியுள்ளது.
பிரம்மாண்ட இயக்குநர் என்று அழைக்கப்படும், இயக்குனர் ஷங்கர் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக உள்ளார். ஜென்டில்மேன் படம் மூலமாக தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமான இவர், தன்னுடைய முதல் படத்திலேயே வெற்றி பட இயக்குனர் என பெயர் எடுத்தார். இந்தப் படம் கொடுத்த வரவேற்புக்கு பிறகு இந்தியன், ஜீன்ஸ், முதல்வன், அந்நியன், எந்திரன், நண்பன், ஐ என பல படங்களை முன்னணி நடிகைகளை வைத்து இயக்கி சூப்பர் ஹிட் கொடுத்தார்.
ஆனால், 2.0, கலவையான விமர்சனங்களை பெற்றார்களும் வசூல் ரீதியாக வெற்றி பெற்றது. ஆனால் இந்தியன் 2 மோசமான தோல்வியை சந்தித்தது. எனினும் அடுத்ததாக ஷங்கர் இயக்க உள்ள இந்தியன் 3 மிகப்பெரிய ஹிட் அடிக்கும் என படக்குழு தரப்பில் கூறப்படுகிறது. இப்போது ராம் சரணை வைத்து கேம் சேஞ்சர் என்ற படத்தை இயக்கி உள்ளார் ஷங்கர்.
தெலுங்கில் உருவாகியுள்ள இந்தப் படம், பான் இந்தியா திரைப்படமாக மற்ற மொழிகளிலும் வெளியாக உள்ளது. சுமார் ரூ.400 கோடி பட்ஜெட்டில் இந்த திரைப்படம் உருவாகி உள்ள நிலையில், வரும் 10ஆம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கேம் சேஞ்சர் படம் திரைக்கு வர உள்ளது.
இந்தப் படத்தில் ராம் சரண் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். மேலும், கியாரா அத்வானி, அஞ்சலி, சமுத்திரக்கனி, எஸ்.ஜே.சூர்யா, ஸ்ரீகாந்த், சுனில், நாசர், பிரகாஷ் ராஜ், ஜெயராம், பிரவீனா, நவீன் சந்திரா, ஹரிஷ் உத்தமன் ஆகியோர் பலர் நடித்துள்ளனர். கோபக்கார ஐஏஎஸ் அதிகாரியான ராம் நந்தன் (ராம் சரண்) ஊழல் அரசியல்வாதிகளுக்கு எதிராக, ஊழலை ஒழிப்பதன் மூலமாக நியாயமான தேர்தலுக்கு வழிவகை செய்கிறார். இது ஒரு புறம் இருந்தாலும் தனது கிராமத்தின் நீர் வளத்திற்காக போராடும் தந்தை அப்பண்ணாவை பற்றி அறிந்து கொள்கிறார். தந்தை அப்பண்ணாவின் கனவை எப்படி காப்பாற்றுகிறார் என்பது தான் இந்த படத்தின் மீதி கதை என கூறப்படுகிறது.
ஸ்ரீ வெங்கடேஷ்வர கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு, எஸ் தமன் இசையமைத்துள்ளார். இந்த நிலையில் தான் பிரம்மாண்ட இயக்குநர் என்று சொல்லப்படும் ஷங்கர் இந்தப் படத்திற்காக வாங்கிய சம்பளம் எவ்வளவு என்பது குறித்து தகவல் வெளியாகியிருக்கிறது. கேம் சேஞ்சர் படத்திற்கு ஷங்கருக்கு ரூ.50 கோடி சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இந்தியன் 2 படத்திற்கும் ஷங்கர் ரூ.50 கோடி சம்பளம் பெற்றார். சில இயக்குனர்கள் தோல்வி படம் கொடுத்தால் சம்பளத்தை குறைத்து கொள்ளும் நிலையில், இயக்குனர் ஷங்கர் சல்லி பைசா கூட குறைக்காமல் வாங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.