Game Changer First Review: இயக்குநர் ஷங்கரின் கேம் சேஞ்சர் பற்றி வந்த முதல் விமர்சனம்: படம் எப்படி இருக்கு?
Game Changer First Review in Tamil: இந்தியன் 2 படத்தின் தோல்விக்கு பிறகு பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரின் கேம் சேஞ்சர் படம் குறித்த முதல் விமர்சனம் வெளியாகி உள்ளது.
Game Changer First Review: தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக இருப்பவர் இயக்குநர் ஷங்கர். இயக்குநர் மட்டுமின்றி தயாரிப்பாளர் மற்றும் திரைக்கதை எழுத்தாளராக திகழ்கிறார். இவரோட படைப்புகள் எல்லாமே பிரம்மாண்டமாக இருக்கும். ஜென்டில்மேன் முதல் 2.0 வரை எல்லா படமுமே சூப்பர் ஹிட் ஹிட். அப்படிப்பட்ட ஒரு இயக்குநர் தான் ஷங்கர்.
'இந்தியன்' படத்தை இயக்கி சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து ஒட்டுமொத்த சினிமாவும் கொண்டாடும் படி செய்த இயக்குநர் ஷங்கர், அந்த படத்தின் 2ஆம் பாகத்தை கொடுத்து மோசமான விமர்சனத்தை பெற்றார். கதையும் இல்ல, ஒன்னும் இல்ல என்று ஒவ்வொருவரும் விமர்சிக்கும் வகையில் படம் இருந்தது. ஹீரோவையே மக்கள் அடித்து துரத்துவது போல் கிளைமேக்ஸ் இருந்தது.
'இந்தியன் 2' எதிர்மறை விமர்சனத்தை பெற்ற நிலையில், அடுத்து ஹிட் படத்தை கொடுக்க வேண்டிய கட்டாயம் ஷங்கருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக இப்போது இந்தியன் 3 மற்றும் கேம் சேஞ்சர் என்று 2 படங்களை இயக்கி வருகிறார். தெலுங்கு சினிமாவில் உருவாகி வரும் கேம் சேஞ்சர் படத்தில் நடிகர் ராம் சரண், எஸ் ஜே சூர்யா, அஞ்சலி, கீரா அத்வானி, பிரகாஷ் ராஜ், நாசர், சமுத்திரக்கனி, ஜெயராம், சுனில், ஹரிஷ் உத்தமன் என்று ஏராளமான நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். முழுக்க முழுக்க அரசியல் த்ரில்லர் கதையை மையப்படுத்திய இந்தப் படத்தின் பட்ஜெட் ரூ.450 கோடி என்று சொல்லப்படுகிறது. எஸ் தமன் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார்.
எஸ்.ஜே.சூர்யா விமர்சனம்:
சமீபத்தில் கேம் சேஞ்சர் படத்தின் டீசர் வெளியான நிலையில், இப்போது இந்த படத்தின் முதல் விமர்சனம் குறித்து நடிகர் எஸ் ஜே சூர்யா தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், அவர் கூறியிருப்பதாவது, "வணக்கம் நண்பர்களே..கேம் சேஞ்சரில் 2 முக்கியமான காட்சிகளின் டப்பிங் பணிகளை முடித்துவிட்டேன். ஒன்று ராம் சரண், மற்றொன்று ஸ்ரீகாந்த். இந்த இருவருடன் நான் நடித்துள்ள 2 காட்சிகளின் டப்பிங் பேசி முடிப்பதற்கு 3 நாட்கள் ஆனது. மேலும், இந்தப் படம் எப்படி தியேட்டரில் எப்படி க்ளாப்ஸ் அள்ளும் என்று இப்போ தெரிகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்தப் படத்தில் இவர் தான் வில்லனாக நடித்திருக்கிறாராம். ராம் சரண் 3 விதமாக கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். அதில், கே ராம் நந்தன் ஐஏஎஸ் அதிகாரி, அப்பன்னா மற்றும் விஜய் பல்ராம் என்று 3 ரோலில் நடித்துள்ளார். இந்த படம் வரும் 2025 ஆம் ஆண்டு ஜனவரி 10ஆம் தேதி திரைக்கு வர திட்டமிடப்பட்டுள்ளது.