Selvaraghavan Tweet: காலம் வந்துவிட்டது வேந்தே : செல்வராகவன் கொடுத்த அப்டேட்..
காலம் வந்துவிட்டது வேந்தே என இயக்குநர் செல்வராகவன் ட்வீட் செய்துள்ளார்.
தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குநர்களில் செல்வராகவனும் ஒருவர். துள்ளுவதோ இளமை மூலம் தனது திரைப்பயணத்தை தொடங்கிய செல்வராகவன் காதல் கொண்டே, 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தி ஒருவன் உள்ளிட்ட தமிழின் முக்கியமான படங்களை இயக்கியிருக்கிறார்.
குறிப்பாக செல்வராகவனின் ஆயிரத்தில் கடந்த 2009ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. ஆனால் வசூல் ரீதியாக அந்தப் படம் சாதிக்கவில்லை என்றே கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி பல நேர்காணல்களில் அதுகுறித்த ஆதங்கத்தையும் செல்வராகவன் வெளிப்படுத்தியிருப்பார்.
அதனையடுத்து ஆயிரத்தில் ஒருவன் படத்திற்கும், புதுப்பேட்டை படத்திற்கு இரண்டாம் பாகம் எடுக்க வேண்டும் என ரசிகர்கள் தொடர்ந்து வலியுறுத்தினர்.
சூழல் இப்படி இருக்க சில மாதங்களுக்கு முன்பு ஆயிரத்தில் ஒருவன் 2 எடுக்கப்படும் எனவும் அதில் தனுஷ் நடிக்கிறார் எனவும் செல்வராகவன் அறிவித்திருந்தார். இந்தப் படம் 2024ல் திரைக்கு வரவிருக்கிறது. இதனைத் தொடர்ந்து ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள்.
ஆயிரத்தில் ஒருவன் 2 மட்டுமின்றி அவர் தனுஷை வைத்து நானே ஒருவன் என்ற படத்தையும் செல்வராகவன் இயக்கிவருகிறார். செல்வராகவன் மீண்டும் தொடர்ந்து படங்கள் இயக்க ஆரம்பித்திருப்பதால் அவரது ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
காலம் வந்து விட்டது வேந்தே !
— selvaraghavan (@selvaraghavan) November 20, 2021
இந்நிலையில் செல்வராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில், “காலம் வந்துவிட்டது வேந்தே” என்று பதிவிட்டுள்ளார். இந்தப் பதிவு ஆயிரத்தில் ஒருவன் 2 படம் குறித்ததாகத்தான் இருக்கும் என அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அவர் தற்போது இயக்கம் மட்டுமின்றி சாணிக் காயிதம், பீஸ்ட் உள்ளிட்ட படங்களில் நடித்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் வாசிக்க: Watch Video | காதல்.. அரவணைப்பு.. பிறந்தநாள் கொண்டாட்டத்தில் நயன்.. காதலில் உருகிய விக்னேஷ் சிவன் - வீடியோ!
ABP Nadu Impact: 4 ஆண்டுகளாக விடியலுக்கு காத்திருந்த கால்பந்து அணி.. அங்கீகரித்த முதல்வர் ஸ்டாலின்
Dayanidhi Maran: கேட்காமலேயே குஜராத்துக்கு 1000 கோடி ரூபாய் நிவாரணம் கொடுத்தார் மோடி - தயாநிதிமாறன்