மேலும் அறிய

Selvaraghavan: ரொம்ப ஈஸி நடிப்பா? டைரக்ஷனா? உண்மையை உடைத்த செல்வராகவன்!

படத்தில் நடிப்பது எளிதா? அல்லது படம் இயக்குவது எளிதா? என்பதற்கு செல்வராகவன் பதில் அளித்துள்ளார்.

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் செல்வராகவன். இவர் தற்போது நடிப்பதில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாக உள்ள ஆர்யன் படத்தில் இவர் வில்லனாக நடிக்கிறார்.

நடிப்பா? இயக்கமா?

இதுதொடர்பாக, அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது, இதில் என்ன வில்லன்? எல்லாம் கதாபாத்திரங்கள்தான்.  ஒவ்வொரு படமும் சந்தோஷமாக பண்ணுகிறோம். கூடிய சீக்கிரம் வேற கதாபாத்திரம் பண்ணுறோம். வெயிட் பண்றோம். இன்னமும் நான் இயக்குனர்தான். நடிப்பு என்பது ஜஸ்ட். சாணிக்காயிதம் ரொம்ப ஃபோர்ஸ் பண்ணி பண்ணதாலதான் பண்ணேன். 

நடிப்பு கஷ்டமா? இயக்கம் கஷ்டமா? என்ற கேள்வி இருந்தது. 5, 6 நாள் கழித்துதான் நடிப்பில் இவ்வளவு பொறுப்பு இருக்கிறதா? கையை பார்த்துக் கொள்ளனும், காலைப் பார்த்துக்கனும், முகத்தைப் பார்த்துக்கனும். அங்கிட்டு இங்கிட்டு திரிஞ்சு படம் எடுக்குறது வேற, நடிப்பு எல்லாம் ரொம்ப யோசிச்சு யோசிச்சு பண்ணனும். 

விஷ்ணு விஷால் அர்ப்பணிப்பு:

விஷ்ணு விஷாலை நான் சந்தித்து வேலை பார்த்தது இல்லை. நல்லவொரு கதை எடுத்து பண்ணனும். இந்த டீம், விஷ்ணு விஷால் வீட்டுக்கே போகமாட்டாங்க. ஷுட்டிங் போயிட்டே இருப்பாங்க. ஒரு ஹீரோ இங்கயே கிடக்குறாரு. இந்த படம் நல்லா வரனும். அந்த ஷாட் நல்லா வரனும். அந்த விஷயம் நல்லா வரனும். ஒரு சினிமாவை நேசிக்குற, சினிமாவை காதலிக்குற அந்த மாதிரி இருக்கவங்க ரொம்ப கஷ்டம். 

சில பேர் பணத்துக்கு வருவான், சில பேர் வேலை. ஆனால், அவருக்கு இதுதான் எல்லாமே. சுவாசிக்குற ஒரு ஹீரோ. மனசுக்கு ரொம்ப சந்தோஷமா இருந்தது. இயக்குனர் ப்ரவீன் சின்ன விஷயத்தையும் சரியா சொல்ல சொல்லுவாரு. சினிமாவையும் இவ்வளவு தூரம் நேசிக்குறவங்களுக்கு. நல்லதே நடக்கும்.

இவ்வாறு அவர் பேசினார்.

அறிமுக இயக்குனர் ப்ரவீன் இயக்கியுள்ள இந்த படம் ராட்சசன் படம் போல சைகோ த்ரில்லர் படமாக உருவாகியுள்ளது. இந்த படம் வரும் 31ம் தேதி ரிலீசாகிறது. 48 வயதான செல்வராகவன் துள்ளுவதோ இளமை படம் மூலமாக இயக்குனராக அறிமுகமானார். அவரது காதல் கொண்டேன் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தது.

7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன்,  மயக்கம் என்ன என இவர் இயக்கிய ஒவ்வொரு படமும் புதுமையான படமாகவே அமைந்தது. கடைசியாக நானே வருவேன் படத்தை இயக்கிய செல்வராகவன் தற்போது 7ஜி ரெயின்போ காலனி பாகம் 2 படத்தை இயக்கி வருகிறார். மேலும், விரைவில் ஆயிரத்தில் ஒருவன் பாகம் 2-ஐ இயக்க உள்ளார்.

தலைப்பு செய்திகள்

ரஜினியின் அந்த ஒரு குணம் தான் 'ஜெயிலர் 2' மாஸ் வெற்றிக்கு காரணம்: சூப்பர் ஸ்டாரைப் புகழ்ந்து தள்ளிய சீமான்
ரஜினியின் அந்த ஒரு குணம் தான் 'ஜெயிலர் 2' மாஸ் வெற்றிக்கு காரணம்: சூப்பர் ஸ்டாரைப் புகழ்ந்து தள்ளிய சீமான்
Jailer 2: ரஜினியின் ஜெயிலர் 2 Secret Of Success என்ன தெரியுமா? இதுதான் காரணமா?
Jailer 2: ரஜினியின் ஜெயிலர் 2 Secret Of Success என்ன தெரியுமா? இதுதான் காரணமா?
புஷ்பா 2, துரந்தர் 2 படங்களுக்கு அடுத்து ஜெயிலர் 2.. டிக்கெட் புக்கிங்கில் ரஜினி படைத்த சாதனை!
புஷ்பா 2, துரந்தர் 2 படங்களுக்கு அடுத்து ஜெயிலர் 2.. டிக்கெட் புக்கிங்கில் ரஜினி படைத்த சாதனை!
TCS வேலையை உதறிவிட்டு வந்த நடிகர்.. 75 படங்களுக்குப் பிறகு ஜெயிலர் 2 கொடுத்த அங்கீகாரம்!
TCS வேலையை உதறிவிட்டு வந்த நடிகர்.. 75 படங்களுக்குப் பிறகு ஜெயிலர் 2 கொடுத்த அங்கீகாரம்!

வீடியோ

Odisha Lorry Accident : அதிவேகமாக வந்த லாரி.. அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்! பகீர் சிசிடிவி காட்சி
Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
யாரும் அச்சப்பட தேவையில்லை! வி.எஸ்.பாபு உடல் நிலை குறித்து சபாநாயகர் முக்கிய அப்டேட்!
யாரும் அச்சப்பட தேவையில்லை! வி.எஸ்.பாபு உடல் நிலை குறித்து சபாநாயகர் முக்கிய அப்டேட்!
School Teachers: பள்ளி ஆசிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது!
School Teachers: பள்ளி ஆசிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது!
‘தவெக ஆட்சியை கழுவி ஊற்றுவதை கிளாம்பாக்கத்தில் பார்க்கலாம்’ ஆம்னி பஸ் கட்டணக் கொள்ளை - கொதிக்கும் கே.என்.நேரு
‘தவெக ஆட்சியை கழுவி ஊற்றுவதை கிளாம்பாக்கத்தில் பார்க்கலாம்’ ஆம்னி பஸ் கட்டணக் கொள்ளை - கொதிக்கும் கே.என்.நேரு
TVK Vs DMK: டம்மி அரசு! உளறிக் கொட்டும் உளறல்நிதி! உதயநிதிக்கு தவெக ஐடி விங் பதிலடி!
TVK Vs DMK: டம்மி அரசு! உளறிக் கொட்டும் உளறல்நிதி! உதயநிதிக்கு தவெக ஐடி விங் பதிலடி!
Parliament Session: அக்., சிறப்பு கூட்டத்தொடர் - தொகுதி மறுவரயறை மசோதாவை கையிலெடுக்கும் பாஜக, கரம் தரும் திமுக?
அக்., சிறப்பு கூட்டத்தொடர் - தொகுதி மறுவரயறை மசோதாவை கையிலெடுக்கும் பாஜக, கரம் தரும் திமுக?
Cauvery Issue: ”முதலமைச்சர் விஜய் உடனே இதை செய்ய வேண்டும்” - அரசுக்கு காங்., செல்வப்பெருந்தகை கோரிக்கை
”முதலமைச்சர் விஜய் உடனே இதை செய்ய வேண்டும்” - அரசுக்கு காங்., செல்வப்பெருந்தகை கோரிக்கை
TVK:
TVK: "டம்மி டாடி.. சாப்பிட்டு ஓய்வெடுங்கள்.." மு.க.ஸ்டாலினை தாறுமாறாக விமர்சித்த தவெக
Jailer 2: ரஜினியின் ஜெயிலர் 2 Secret Of Success என்ன தெரியுமா? இதுதான் காரணமா?
Jailer 2: ரஜினியின் ஜெயிலர் 2 Secret Of Success என்ன தெரியுமா? இதுதான் காரணமா?
Embed widget