Selvaraghavan Covid Positive: எனக்கு கொரோனா.. கூட இருந்தவங்க பரிசோதனை பண்ணுங்க - செல்வராகவன் போட்ட ட்வீட்.!
இயக்குநர் செல்வராகவனுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
தமிழில் ‘துள்ளுவதோ இளமை’ படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான செல்வராகன் தொடர்ந்து காதல் கொண்டேன், 7 ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன் உள்ளிட்ட பல படங்களை இயக்கி பிரபலமடைந்தார்.
காதல் கொண்டேன் படத்தில் தனது சகோதரரான தனுஷையும், நடிகை சோனியா அகர்வாலையும் அறிமுகப்படுத்தினார். இதனிடையே சோனியா அகர்வாலுக்கும் செல்வராகவனுக்கு இடையே காதல் ஏற்பட்ட நிலையில், இருவரும் திருமணம் செய்து கொண்டனர். ஆனால் இவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில் இருவரும் விவாகரத்து செய்து கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து செல்வராகவன் தன்னிடம் உதவியாளராக பணியாற்றிய கீதாஞ்சலியை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகன்களும் ஒரு மகளும் இருக்கின்றனர்.
செல்வராகவன் தற்போது தனுஷை வைத்து நானே வருவேன் என்ற படத்தை இயக்கிவருகிறார். இதனை முடித்துவிட்டு தனுஷ் நடிப்பில் ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகத்தையும் எடுக்க இருக்கிறார்.
இந்நிலையில் இயக்குநர் செல்வராகவனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “இன்று செய்யப்பட்ட பரிசோதனையில் கோவிட் தொற்று உறுதியாகியுள்ளது.
🙏🏼🙏🏼 pic.twitter.com/jqqPQVEVOT
— selvaraghavan (@selvaraghavan) January 23, 2022
கடைசி இரண்டிலிருந்து மூன்று நாட்களுக்குள் என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் உடனடியாக மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்துகொள்ளுங்கள். அனைவரும் தயவு செய்து விழிப்புடன் இருங்கள். முகக்கவசம் அணியுங்கள். பாதுகாப்புடன் இருங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, நடிகைகள் மீனா, திரிஷா, லட்சுமி மஞ்சு, செரீன், கீர்த்தி சுரேஷ் ஆகியோரும், நடிகர்கள் மகேஷ் பாபு, அருண் விஜய், சத்யராஜ், விஷ்ணு விஷால், இயக்குனர் பிரியதர்ஷன், இசையமைப்பாளர் தமன் உள்ளிட்ட பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் வாசிக்க: Cryptocurrency Malware: படம் டவுன்லோடில் அபாயம்! புதிய வைரஸை களமிறக்கும் மோசடி கும்பல் - கிரிப்டோ கரன்சிக்கும் குறி!!