‛ஏவிஎம்மில் செக்யூரிட்டி வேலை பார்த்து உள்ளே நுழைந்தேன்’ -இயக்குனர் பாண்டிராஜ் உருக்கம்!
அவர் மூலம் பாக்கியராஜ் அவர்கள் நடத்தி வந்த ‘பாக்கியா’ பத்திரிக்கையில் ஆஃபிஸ் பாயாக சில காலம் வேலை பார்த்து வந்திருக்கிறார்.
2009 ஆம் ஆண்டு பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான பசங்க திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் பாண்டிராஜ். முதல் படமே அவருக்கு மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. சிவகார்த்திகேயனின் கெரியரில் பாண்டிராஜ் தவிர்க்க முடியாத இயக்குநர். தொகுப்பாளராக இருந்த சிவகார்த்திகேயனுக்கு மெரினா படம் மூல கதாநாயகன் அந்தஸ்து கொடுத்தவர் பாண்டிராஜ்தான். 2009 முதல் 2014 வரை படு பிஸியாக படங்களை அடுத்தடுத்து வெளியிட்ட பாண்டிராஜ் ,சூர்யா நடிப்பில் சமீபத்தில் எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தை இயக்கியிருந்தார் பாண்டிராஜ். அந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. வசூல் ரீதியில் வெற்றிப்பெற்றது.
View this post on Instagram
செக்யூரிட்டியாக சில காலம்
பாண்டிராஜ் ஆரம்ப காலத்தில் வாய்ப்பு தேடி அலைந்த பொழுது எல்லா இயக்குநர்களை போலவும் ஏ.வி.எம் ஸ்டூடியோவிற்கு சென்றிருக்கிறார். அங்கு வாசலில் இருக்கும் செக்யூரிட்டி பாண்டிராஜ் வாய்ப்பு தேடி வருகிறார் என அறிந்து அவரை அங்கிருந்து வெளியேற்றியிருக்கிறார்கள் . அதன் பிறகு துவண்டு போகாத பாண்டிராஜ், இயக்குநர்களின் கார் வரும் பொழுது அதனை மறைத்தாவது வாய்ப்பு தேடிவிடலாம் என காத்திருந்திருக்கிறார். ஆனால் அப்போதும் செக்யூரிட்டிஸ் அவரை மடக்கி பிடித்துவிடுவார்களாம். இப்படியே நாட்கள் சென்றுகொண்டிருக்க செக்யூரிட்டியுடன் போராடுவதைவிட நாமே ஏ.வி.எம்மில் செக்யூரிட்டியாக மாறிவிட்டால் , எளிமையாக ஸ்டூடியோ உள்ளே நுழையலாமே என அந்த வேலையை முயற்சித்து பெற்றுவிட்டார்.
ஆஃபிஸ் பாயாக சில காலம்
கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்கள் அங்கு செக்யூரிட்டி வேலை அதன் பிறகு இயக்குநர் பாக்கியராஜ் அவர்களின் ஓட்டுநர் சீனு என்பவரின் நட்பு கிடைத்திருக்கிறது. அவர் மூலம் பாக்கியராஜ் அவர்கள் நடத்தி வந்த ‘பாக்கியா’ பத்திரிக்கையில் ஆஃபிஸ் பாயாக சில காலம் வேலை பார்த்து வந்திருக்கிறார். அந்த சமயத்திலும் தனது இயக்குநர் கனவை சுமந்துக்கொண்டு ஒயிட் போர்ட் அரசு பேருந்தில் ஏறி , தி.நகர் நோக்கி வாய்ப்பிற்காக படையெடுத்திருக்கிறார். தான் ஆஃபிஸ் பாயாக வேலை பார்த்த சமயத்தில்தான் இயக்குநர் சேரன் அவர்களிடம் உதவி இயக்குநராக பணியாற்ற வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதன் பின்னர் தனது சொந்த தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் மெரினா திரைப்படத்தை இயக்கி , அந்த படமும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.