மேலும் அறிய

வடக்கன் என்று பார்க்கும் மனநிலை ஆபத்தானது..திருத்தணி இளைஞர் தாக்குதல் பற்றி பா ரஞ்சித்

திருத்தணியில் வடமாநில இளைஞர் தாக்குதலுக்கு உள்ளானதை கண்டித்து திரைப்பட இயக்குநர் பா ரஞ்சித் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்

திருத்தணியில் வடமாநில இளைஞர் நான்கு சிறுவர்களால் தாக்குதலுக்கு உள்ளானது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பத்திற்கு திரைத்துறையினர் பலர் தங்கள் கண்டனத்தை தெரிவித்து வருகிறார்கள். இப்படியான நிலையில் திரைப்பட இயக்குநர் பா ரஞ்சித் திருத்தணி தாக்குதல் குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்

திருத்தணி தாக்குதல் குறித்து பா ரஞ்சித்

 பா ரஞ்சித் தனது எக்ஸ் பதிவில் "திருவள்ளுர் மாவட்டம், திருத்தணியில் நடந்த மனிதமற்ற கொடூர செயலை கண்டு நெஞ்சம் பதறுகிறது! அண்மைக்காலமாகத் தமிழகத்தில் அதிகரித்துவரக்கூடிய போதைப் பொருள் கலாச்சாரத்தைத் தடுக்கத் தவறிய ஆட்சியாளர்களுடைய மெத்தனப் போக்கே இதுபோன்ற சம்பவங்களுக்கு முக்கிய காரணம். இத்தகைய குற்றச் செயல்கள் பள்ளி,கல்லூரிகளிலும் தலைவிரித்து ஆடுவதை அலட்சியமாகப் பார்த்ததன் விளைவுதான் இன்றைக்குப் பொதுவெளியில் எந்தவோர் அச்சமுமின்றி வெளிப்படும் கும்பல் மனநிலைக்குக் காரணம். இந்நிலைக்கு நாமும் பொறுப்பேற்க வேண்டும் என்பதை உணர்ந்து செயல்படக்கூடிய தருணமிது.சுதந்திரம்,சமத்துவம், சகோதரத்துவம் என்பதுதான் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தினுடைய அடிநாதம். அதை எவ்வகையிலும் நாம் சிதைத்துவிடக் கூடாது.நமக்குள் இருக்கிற வேறுபாடுகளைக் களைந்தெரிந்து, சகோதரத்துவத்தைப் பேண வேண்டும்.அதைவிடுத்து வடக்கன் என்கிற வெறுப்பு மனநிலையில் செயல்படுவது சமூக சீர்குலைவிற்கே வழிவகுக்கும். இந்த வடக்கன் என்ற மனநிலை மிகவும் ஆபத்தான போக்காகும். 'நகைச்சுவை' பதிவுகள் தொடங்கி கடுமையான சொல்லாடல்கள் வரை சமூக வலைதளங்களிலும் நம் அன்றாடப் பேச்சுகளிலும் இந்த மனநிலை வெளிப்பட்டுக்கொண்டே இருக்கிறது. நம் இடத்திற்குப் பிழைக்க வந்தவர்களை, நம் வாய்ப்புகளைப் பறித்துக்கொண்டவர்களாகக் கருதும் மோசமான மனநிலை உலகம் முழுவதுமே இருக்கிறது. இதைக் களைவதற்கான ஒரே வழி, மக்களுக்கிடையேயான சகோதரத்துவத்தை வளர்த்தெடுப்பதுதான்.இந்திய அரசியலமைப்புச் சட்டம் உறுதிப்படுத்தியுள்ள தனிநபர் சுதந்திரத்தையும் உரிமையையும் சக மனிதர்கள் ஏற்க வேண்டும், அதுவே அறமும் கூட. மேலும், பொதுவெளியில் கும்பலாகச் சேர்ந்துகொண்டு ஓர் அப்பாவி இளைஞனைக் கொடூரமான ஆயுதங்களால் தாக்குவதை வீடியோ எடுத்து அதைத் தற்பெருமையாகக் கருதி, சமூக வலைதளத்தில் பகிர்வோர்களைக் காவல்துறை இனங்கண்டு கைது செய்து அவர்களுக்கு அதிகபட்ச தண்டனை பெற்று தர வேண்டும். மேலும், சமூக வலைதள மோகத்தில் சிறார்களும் இளைஞர்களும் சமூகத்தில் பதற்றத்தை ஏற்படுத்தும் விதத்திலும், வன்முறை தூண்டும் வகையிலும் கும்பலாகச் சேர்ந்துகொண்டு ரீல்ஸ் பதிவிடுவதைத் தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையினை ஆட்சியாளர்களும் காவல்துறையினரும் தாமதிக்காமல் முன்னெடுக்க வேண்டும். போதை, ஆயுதக் கலாச்சாரம், சமூகப் பிரிவினை எனத் தனித்தனி காரணிகளைக் கொண்டு இப்பிரச்சினைகளை அணுகக் கூடாது. இவை எல்லாமே ஒன்றுக்கு ஒன்று தொடர்புடையவை. இனி இதுபோன்ற சம்பவங்கள் நிகழ எந்தவகையிலும் நாம் அனுமதிக்கக் கூடாது என்று தமிழக அரசை வலியுறுத்துகின்றோம்! " என கூறியுள்ளார்

தலைப்பு செய்திகள்

செப்டம்பர் 25 திரையரங்குகளில் வெளியாகும் தமிழ் படங்கள்
செப்டம்பர் 25 திரையரங்குகளில் வெளியாகும் தமிழ் படங்கள்
சூர்யா நடிக்க இருந்த ‘கர்ணா’ படமா? ராகவா லாரன்ஸின் ‘மஹாவீர் கர்ணா’ அறிவிப்பால் ரசிகர்கள் குழப்பம்!
சூர்யா நடிக்க இருந்த ‘கர்ணா’ படமா? ராகவா லாரன்ஸின் ‘மஹாவீர் கர்ணா’ அறிவிப்பால் ரசிகர்கள் குழப்பம்!
படப்பிடிப்பில் தனியாக உட்கார்ந்து அழுவேன்...ஸ்டண்ட் மாஸ்டர் பீட்டர் ஹைன் பகிர்வு
படப்பிடிப்பில் தனியாக உட்கார்ந்து அழுவேன்...ஸ்டண்ட் மாஸ்டர் பீட்டர் ஹைன் பகிர்வு
Karthigai Deepam Serial: அம்மா வீட்டுக்குப் போகப்போகும் மனைவி.. சோகத்தில் உறைந்த கணவன் - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam Serial: அம்மா வீட்டுக்குப் போகப்போகும் மனைவி.. சோகத்தில் உறைந்த கணவன் - கார்த்திகை தீபத்தில் இன்று

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS ADMK : 5 லட்சம் நெல் மூட்டைகள் போச்சு.! சொல் புத்தியும் இல்ல.. சுய புத்தியும் இல்ல- TVK அரசை விளாசிய இபிஎஸ்
5 லட்சம் நெல் மூட்டைகள் போச்சு.! சொல் புத்தியும் இல்ல.. சுய புத்தியும் இல்ல- TVK அரசை விளாசிய இபிஎஸ்
Gem Veeramani : ‘சிக்கிய வீரமணி - சிக்கப்போகும் பெருந்தலைகள்’ அடுத்த கைது யாருடையது..?
‘சிக்கிய வீரமணி - சிக்கப்போகும் பெருந்தலைகள்’ அடுத்த கைது யாருடையது..?
தமிழ்நாட்டில் பரவும் உன்னிக் காய்ச்சல்: உடலில் இந்த புண்ணா? உயிருக்கே ஆபத்து!
தமிழ்நாட்டில் பரவும் உன்னிக் காய்ச்சல்: உடலில் இந்த புண்ணா? உயிருக்கே ஆபத்து!
Nirmalkumar: ”கேடுகெட்ட கட்சி திமுக” யார் அந்த பவர் செண்டர்? - ஜெம் வீரமணி வழக்கில் அமைச்சர் நிர்மல் குமார் காட்டம்
”கேடுகெட்ட கட்சி திமுக” யார் அந்த பவர் செண்டர்? - ஜெம் வீரமணி வழக்கில் அமைச்சர் நிர்மல் குமார் காட்டம்
125 ஆண்டுகள் கொண்டாட்டம்.. 60 நாடுகளில் களைகட்டிய Royal Enfield One Ride
125 ஆண்டுகள் கொண்டாட்டம்.. 60 நாடுகளில் களைகட்டிய Royal Enfield One Ride
”பெண்களை பீரியட்ஸ்க்குள் அடைக்காதீர்கள்” அமைச்சர் கீர்த்தனாவிற்கு என்ன ஆச்சு? TVK கனிமொழி விளக்கம்
”பெண்களை பீரியட்ஸ்க்குள் அடைக்காதீர்கள்” அமைச்சர் கீர்த்தனாவிற்கு என்ன ஆச்சு? TVK கனிமொழி விளக்கம்
Russia Ukraine War: மாஸ்கோவை சுத்துபோட்டு தாக்கிய உக்ரைன்.! ஏவுகணைகளால் பதிலடி கொடுத்த ரஷ்யா; தீவிரமடையும் போர்.!
மாஸ்கோவை சுத்துபோட்டு தாக்கிய உக்ரைன்.! ஏவுகணைகளால் பதிலடி கொடுத்த ரஷ்யா; தீவிரமடையும் போர்.!
Trump Rating Drops: ட்ரம்ப்புக்கு ஆப்பு வைத்த ஈரான் போர்.! தேர்தல் கருத்துக்கணிப்பில் அதிர்ச்சி; என்ன நடந்தது.?
ட்ரம்ப்புக்கு ஆப்பு வைத்த ஈரான் போர்.! தேர்தல் கருத்துக்கணிப்பில் அதிர்ச்சி; என்ன நடந்தது.?
Embed widget