Farhana Movie: 'இஸ்லாமியர்களை தவறாக காட்டவில்லை’ .. தயவுசெய்து படம் பாருங்கள்.. உருக்கமாக பேசிய ‘ஃபர்ஹானா’ இயக்குநர்..!
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து வெளியாகியுள்ள ஃபர்ஹானா படம் இஸ்லாமிர்யர்களுக்கு எதிரான படம் இல்லை என அப்படத்தின் இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து வெளியாகியுள்ள ஃபர்ஹானா படம் இஸ்லாமிர்யர்களுக்கு எதிரான படம் இல்லை என அப்படத்தின் இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
இயக்குனர் நெல்சன் வெங்கடேசன் கடந்த மே 12 ஆம் தேதி ஃபர்ஹானா படம் வெளியானது. இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் கதையின் நாயகியாக நடித்துள்ளார். மேலும் செல்வராகவன், ஜித்தன் ரமேஷ், ஐஸ்வர்யா தத்தா, அனுமோல் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ள இப்படம், அதன் ட்ரெய்லர் வெளியான போதே கடும் சர்ச்சைகளை சந்தித்தது.
இந்த படம் இஸ்லாமியர்களுக்கு எதிராக இருப்பதாக கூறியும், படத்துக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்தது. ஆனால் பல்வேறு தடைகளை தாண்டி ஃபர்ஹானா படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. படம் பார்த்தவர்கள் இஸ்லாமிய மக்களை எந்த இடத்திலும் தவறாக காட்டவில்லை என சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்துள்ளனர். ஆனால் படம் குறித்து எழுந்த கருத்தால் திருவாரூரில் ஃபர்ஹானா வெளியான தியேட்டரில் பிரச்சினை எழுந்ததால் காட்சிகள் ரத்து செய்யப்பட்டது.
இந்த நிலையில், தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு, இயக்குநர் நெல்சன் வெங்கடேசன்,எழுத்தாளர் வசனகர்த்தா மனுஷ்யபுத்திரன் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய நெல்சன், “நல்ல படங்களை மட்டும் தான் இயக்குவேன் என்ற வைராக்கியத்தோடு இருக்கிறேன். படத்தை பார்த்தவர்கள் யாரும் படத்தை பற்றி தவறாக சொல்லவில்லை. படத்தை பார்க்காதவர்கள் தான் தவறாக சொல்கிறார்கள். இந்த படம் ஒரு உளவியல் சார்ந்த படம் எல்லோரும் பார்க்க வேண்டிய படம். ஃபர்ஹானா படம் சில இடங்களில் தடைபட்டு நிறுத்தப்பட்டாதாக செய்திகள் பரவி வருகிறது. அதை நம்ப வேண்டாம்” என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு, “ஒரு திரையரங்கில் மட்டும் தான் படம் ரத்து செய்யப்பட்டு இருக்கிறது.ஆனால் நிறைய திரையரங்குகளில் ரத்து என தவறான தகவல் பரவி வருகிறது.இது அனைவருக்குமான படமாகவும் குடும்ப படமாகவும் இருப்பதாக பார்வையாளர்கள் கூறுகிறார்கள். அது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இது இஸ்லாமியர்களுக்கான எதிரான படம் இல்லை என்றும் தெரிவித்தார்.
மேலும் மனுஷ்யபுத்திரன் பேசும் போது, “இந்தப் படம் இஸ்லாமியர்களுக்கு ஆதரவான படம் தான்.ஒரு தவறான வார்த்தையோ சிந்தனையோ இந்த படத்தில் இல்லை. காஷ்மீர் பைல்ஸ் தொடங்கி தி கேரளா ஸ்டோரி போன்ற படங்கள் தான் சிறுபான்மை சமூகத்தினரை இழிவுபடுத்தியிருக்கிற படத்தை தான் நாங்கள் எதிர்த்தோம். இந்த படம் கேரளா ஸ்டோரிக்கு எதிரான படமென்று கூட சொல்லலாம்.
மேலும் படிக்க: Farhana Movie Review: ஐஸ்வர்யா ராஜேஷ் படத்தில் சர்ப்ரைஸ் கொடுத்த செல்வராகவன்…! எப்படி இருக்கு ஃபர்ஹானா..?