மேலும் அறிய

Farhana Movie Review: ஐஸ்வர்யா ராஜேஷ் படத்தில் சர்ப்ரைஸ் கொடுத்த செல்வராகவன்…! எப்படி இருக்கு ஃபர்ஹானா..?

Farhana Movie Review in Tamil: ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் ஹீரோயின் சென்ரிக் படமான ஃபர்ஹானா திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாகவும் வேற்றுகிரக வாசிகள் போலவும் சித்தரித்து வரும் சினிமாக்களுக்கு மத்தியில் இஸ்லாமிய குடும்பப்  பின்னணியைக் கொண்ட நாயகியை மையப்படுத்தி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் ஹீரோயின் சென்ரிக் படமான ஃபர்ஹானா திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

ஒரு நாள் கூத்து, மான்ஸ்டர் படங்களின் வரிசையில் இந்தப் படத்தை இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் இயக்கியுள்ளார். இஸ்லாமிய அமைப்புகள் படத்துக்கு தடை கோரி குரல்கள் எழுப்பிய நிலையில் இப்படம் எப்படி இருக்கிறது? இஸ்லாமியர்களை சரியாக திரையில் சித்தரித்துள்ளதா? 

ஃபர்ஹானா திரைப்பட விமர்சனம்

Farhana Movie Review: ஐஸ்வர்யா ராஜேஷ் படத்தில் சர்ப்ரைஸ் கொடுத்த செல்வராகவன்…! எப்படி இருக்கு ஃபர்ஹானா..?

கட்டுக்கோப்பான இஸ்லாமிய தந்தை, அன்பான கணவர், மூன்று குழந்தைகளை கொண்டு, ஐந்து வேளை தொழுகை உடன்  கூடுதலாக ஆறாவது வேளை தொழுகை செய்து வாழும் சராசரி இஸ்லாமிய குடும்பப் பெண் 'ஃபர்ஹானா' ஐஸ்வர்யா ராஜேஷ். படித்த பெண்ணான ஃபர்ஹானா, குழந்தைகளுக்கு ஸ்கூல் பீஸ் கட்ட முடியாமல், மருத்துவ செலவை ஏற்க முடியாமல் திணறும் குடும்பத்துக்கு உதவ தன் மன, குடும்ப தடைகளை உடைத்து, வீட்டினரை சம்மதிக்க வைத்து வேலைக்கு செல்கிறார்.

வங்கிக் கடனுக்காக கஸ்டமரிடம் பேசும் கஸ்டமர் கால் சர்வீஸ் வேலையில் சேரும் ஃபர்ஹானா தன் அலுவலகத்தில் மற்றொரு துறையில் அதிக சன்மானம் கிடைப்பதைப் பார்த்து அங்கு மாற்றலாகி செல்லக் கேட்கிறார். அங்கு வற்புறுத்தி மாற்றலாகி அவர் சென்ற பின் தான் தெரிகிறது அது ஃப்ரெண்ட்ஷிப் கால் எனப்படும் நட்புலகம் கால் சேவை.

தனியாக உணர்பவர்கள் முகம் தெரியாத எதிரில் இருப்பவர்களிடம் பெரும்பான்மை உரையாடலில் ஆபாசத்தை அள்ளி வீச, இவர்களுக்கு மத்தியில், கனிவான குரலில் தன் உணர்வறிந்து பேசும் மற்றொரு குரலை ஐஸ்வர்யா ராஜேஷ் சந்திக்கிறார். அந்த நபர் ஃபர்ஹானாவின் ரெகுலர் அழைப்பாக மாற ஒரு கட்டத்தில், அந்நபருடன் தனி பிணைப்பைக் கொள்ளும் ஃபர்ஹானா அந்த நபரை நேரில் சந்திக்க எண்ணி அழைக்கிறார். 

ஐஸ்வர்யா ராஜேஷின் நடிப்பு

Farhana Movie Review: ஐஸ்வர்யா ராஜேஷ் படத்தில் சர்ப்ரைஸ் கொடுத்த செல்வராகவன்…! எப்படி இருக்கு ஃபர்ஹானா..?

ஆனால் தொடர்ந்து நிகழும் ஒரு அசம்பாவித சம்பவத்தால் தன்நிலை உணர்ந்து தன் முடிவை மாற்றிக் கொண்டு தன பணியைத்  தொடர்கிறார். இந்நிலையில் போனில் பேசிய நபரை ஃபர்ஹானா நேரில் சந்தித்தாரா? கணவர், குடும்பம் என பலகட்ட சிக்கல்களை தாண்டி வேலைக்கு வந்த ஃபர்ஹானாவின் நிலை என்ன? என்பதை சுவாரஸ்யம் கூட்டி சன்பென்ஸ் கலந்து கொடுத்திருக்கிறார்கள்.

அன்பான கணவர், ஸ்ட்ரிக்ட்டான இஸ்லாமிய தந்தை ஆகியோருக்கு இடையே ஹேண்ட்பேக் சுமந்து வேலைக்கு செல்லும் பெண்ணைப் பார்த்து ஏங்கும் பக்கத்து வீட்டு இஸ்லாமிய பெண் ஃபர்ஹானாவாக ஐஸ்வர்யா ராஜேஷின் நடிப்பு மிகச்சிறப்பு!

தடைகளை உடைத்து வேலைக்குச் செல்வது, காலருடன் ஏற்பட்ட பிணைப்பை பதின்ம வயது சிறுமியைப் போல் மாறி வெளிப்படுத்துவது, அந்த நபரின் உண்மை நோக்கம் அறிந்து குடும்பத்திடம் பகிர முடியாமல் திணறுவது என ஹை வோல்டேஜ் பர்ஃபாமன்ஸ் கொடுத்து கம் பேக் தந்துள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

அவரது கண்களே பாதிக் காட்சிகளில் நடித்து விடுகின்றன. வாரம் ஒரு படத்தில் நடிக்கிறார் எனும் கிண்டல் மீம்களுக்கு தன் நடிப்பால் பதிலடி கொடுத்துள்ள ஐஸ்வர்யா ராஜேஷுக்கு பூச்செண்டுகள்..!

சர்ப்ரைஸ் தந்த செல்வராகவன்:

வேலைக்குச் செல்லும் தன் மனைவிக்கு நல்ல செருப்பு அணிவித்து தயங்கித் தயங்கி அன்பை வெளிப்படுத்தும் இஸ்லாமிய கணவராக ஜித்தன் ரமேஷ். அப்பாவி கணவராக வலம் வந்தாலும், சந்தேகங்கள் தாண்டி மனைவிக்கு பக்கபலமாக நிற்பது என வெகு நாட்களுக்குப் பிறகு கவனம் ஈர்த்து ஸ்கோர் செய்துள்ளார்.

ரசிகர்களுக்கு மிகப்பெரிய சர்ப்ரைஸ் எண்ட்ரியாக செல்வராகவன்! முதல் பாதி முழுக்க குரலாலேயே நடித்து பார்வையாளர்களை காதலில் விழ வைக்கும் செல்வராகவன், இரண்டாம் பாதியில் செய்வது அதகளத்தின் உச்சம்! நடிகராக செல்வா மிரட்டி ஸ்கோர் செய்திருக்கும் முதல் படம், நெட்டிசன்களின் ஆதர்ச மீம் கன்டென்ட் பாத்திரமாக இனி ஒரு ரவுண்டு வருவார். செல்வராகவனின் வசனங்களை இரவல் வாங்கிப் பேசி ஸ்கோர் செய்து, கால் அழைப்பை கண்காணித்து எமோஷனல் ஆகும் இளைஞர் அப்லாஸ் அள்ளுகிறார்.  

கட்டுக்கோப்பான அப்பாவாக  கிட்டு,  ஃப்ரி ஸ்பிரிட் மாடர்ன் பெண்ணாக ஐஸ்வர்யா தத்தா, தோழிக்கு ஆறுதல் கூறும் அனுமோல் என அனைவரும் தங்கள் கதாபாத்திரங்களை சரியாக செய்துள்ளனர்.

நிறை, குறைகள்

Farhana Movie Review: ஐஸ்வர்யா ராஜேஷ் படத்தில் சர்ப்ரைஸ் கொடுத்த செல்வராகவன்…! எப்படி இருக்கு ஃபர்ஹானா..?

லக்ஷ்மி குறும்படத்தை நினைவூட்டி ரசிகர்களை புன்முறுவல் பூக்க வைக்கும் முதல் பாதிக்கு நேர் எதிர் துருவத்தில் சஸ்பென்ஸ் கூட்டி  விறுவிறுப்பாக பயணிக்கிறது  இரண்டாம் பாதி. மனுஷ்யபுத்திரன் - சங்கர் தாஸ் - நெல்சன் கூட்டணியில் வசனங்கள் ஈர்க்கின்றன. குறிப்பாக செல்வராகவன் பிக் அப் லைன்களை அள்ளித் தெளிக்கும் முதல் பத்தி வசனங்கள் பெரும் பலம்.

“வேலைக்கு போற படித்த பெண் கர்வமா இருக்கணும்” என ஜித்தன் ரமேஷ் ஃபர்ஹானாவிடம் சொல்லும் காட்சி, கட்டுக்கோப்பான தந்தை கிட்டுவுக்கு பக்கத்து கடை பெண் அறிவுரை சொல்லும் காட்சிகள் நச் ரகம்!

ஜஸ்டின் பிரபாகரனின் இசை முதல் பாதியில் கவிதையாகவும், இரண்டாம் பாதி சேஸிங் காட்சிகளுக்கு பலம் சேர்த்தும் படத்துக்கு பக்கபலமாக அமைந்துள்ளது. முதல் பாதிக்கு நேர் எதிரே பயணிக்கும் இரண்டாம் பாதி இரு வேறு படங்களை பார்க்கும் உணர்வைத் தந்தாலும் விறுவிறுப்பு குறையாமல் இறுதி வரை பயணிக்கிறது.

நெற்றித்தடம் இருக்கும் 'பாய்', புகை போடும் 'பாய்', செல்ஃபோன் பயன்படுத்தாத இஸ்லாமிய பெண் என சில ஸ்டீரியோடைப் காட்சிகள் இருந்தாலும், தீவிரவாதியாகவோ, வேற்றுகிரக வாசி போலவோ இஸ்லாமியரை சித்தரிக்காமல், அவர்கள் வாழ்வியல் பின்னணியில் வெகு நாட்களுக்குப் பின் ஒரு தமிழ்  கமர்ஷியல் திரைப்படம் வெளியாகியுள்ளது ஆறுதலான விஷயம். 

இஸ்லாமிய பின்னணி என்றாலே சர்சசை எனும் முள் மேல் நடப்பது போன்ற சூழலில்,  வேலைக்குச் செல்லும் இஸ்லாமிய பெண்ணை சுற்றிய கமர்ஷியல் கதையை முதிர்ச்சியாக கையாண்டு, முத்திரை பதித்திருக்கும் இயக்குநர் நெல்சன் வெங்கடேசனுக்கு வாழ்த்துகள். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

CM MK Stalin:
CM MK Stalin: "அதானியைச் சந்தித்தேனா?" சட்டசபையில் போட்டு உடைத்த மு.க.ஸ்டாலின்!
UGC NET 2024: இன்றே கடைசி: ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியாமல் தேர்வர்கள் அவதி!
UGC NET 2024: இன்றே கடைசி: ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியாமல் தேர்வர்கள் அவதி!
Chennai Safety: என்கவுன்டர்னா பயந்துருவோமா? அடங்காத ரவுடிகள் - தொடரும் கொலைகள், சென்னை பாதுகாப்பானதா?
Chennai Safety: என்கவுன்டர்னா பயந்துருவோமா? அடங்காத ரவுடிகள் - தொடரும் கொலைகள், சென்னை பாதுகாப்பானதா?
"குறையே சொல்ல மாட்டேன்" EPS கொண்டு வந்த திட்டத்தை புகழ்ந்து தள்ளிய துரைமுருகன் - எந்த திட்டம்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Aadhav Join TVK  IT Wing : ஆதவ் கையில் IT WING.. விஜய் மாஸ்டர் ப்ளான்! திமுகவுக்கு ஸ்கெட்ச்ADMK Support Mining Bill : டங்ஸ்டன் சுரங்கம் தம்பிதுரை பேசியது என்ன? ஆதரித்த அதிமுக?MK Stalin slams Intelligence IG: ''கோட்டை விட்ட உளவுத்துறை! கடுப்பான முதல்வர் ஸ்டாலின்!High Court Judge Controversy Speech: ”இது இந்துஸ்தான்!இந்துக்கள் தான் ஆளனும்” நீதிபதி சர்ச்சை கருத்து

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM MK Stalin:
CM MK Stalin: "அதானியைச் சந்தித்தேனா?" சட்டசபையில் போட்டு உடைத்த மு.க.ஸ்டாலின்!
UGC NET 2024: இன்றே கடைசி: ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியாமல் தேர்வர்கள் அவதி!
UGC NET 2024: இன்றே கடைசி: ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியாமல் தேர்வர்கள் அவதி!
Chennai Safety: என்கவுன்டர்னா பயந்துருவோமா? அடங்காத ரவுடிகள் - தொடரும் கொலைகள், சென்னை பாதுகாப்பானதா?
Chennai Safety: என்கவுன்டர்னா பயந்துருவோமா? அடங்காத ரவுடிகள் - தொடரும் கொலைகள், சென்னை பாதுகாப்பானதா?
"குறையே சொல்ல மாட்டேன்" EPS கொண்டு வந்த திட்டத்தை புகழ்ந்து தள்ளிய துரைமுருகன் - எந்த திட்டம்?
Teachers Protest: படையெடுத்த பகுதிநேர ஆசிரியர்கள்; சென்னையில் தொடங்கிய போராட்டம்- கைது செய்யும் காவல்துறை!
Teachers Protest: படையெடுத்த பகுதிநேர ஆசிரியர்கள்; சென்னையில் தொடங்கிய போராட்டம்- கைது செய்யும் காவல்துறை!
RBI Governor Role: ஆர்பிஐ ஆளுநருக்கு என்ன அதிகாரம் இருக்கு? முக்கிய வேலை, சம்பளம், வசதிகள் இவ்வளவா?
RBI Governor Role: ஆர்பிஐ ஆளுநருக்கு என்ன அதிகாரம் இருக்கு? முக்கிய வேலை, சம்பளம், வசதிகள் இவ்வளவா?
SM Krishna Death: காலையிலே சோகம்! காலமானார் முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா - வேதனையில் மக்கள்
SM Krishna Death: காலையிலே சோகம்! காலமானார் முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா - வேதனையில் மக்கள்
New RBI Governor: இனிமே இவர் தான்.. வட்டி குறையுமா? இந்திய ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநர், யார் இந்த சஞ்சய் மல்ஹோத்ரா?
New RBI Governor: இனிமே இவர் தான்.. வட்டி குறையுமா? இந்திய ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநர், யார் இந்த சஞ்சய் மல்ஹோத்ரா?
Embed widget