Nelson - Udhayanidhi : உதயநிதியின் புதன்கிழமை சஸ்பென்ஸ்! நெல்சன் போட்ட ’நாளை'.. பரபரக்கும் சோஷியல் மீடியா!
படத்தின் ப்ரொமோஷன் வேலைகளில் ஒரு பகுதியாக, முதல் பாடல் கடந்த மாதம் 14-ம் தேதி காதலர் தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்டது.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் விஜய். மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் விஜய், இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் (Beast) படத்தில் நடித்துள்ளார். பீஸ்ட் படம் வரும் ஏப்ரல் மாதம் 13-ம் தேதி வெளியாக உள்ளது. திரையரங்குகளில் காண ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
படத்தின் ப்ரொமோஷன் வேலைகளில் ஒரு பகுதியாக, முதல் பாடல் கடந்த மாதம் 14-ம் தேதி காதலர் தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்டது. சிவகார்த்திகேயன் பாடல் வரிகள் எழுதி அனிருத் இசையமைத்துள்ள அரபிக்குத்து பாடல் பல மில்லியன் பார்வையாளர்களை கடந்து ஹிட் அடித்து இருக்கிறது.
இந்நிலையில், படத்தின் புதிய போஸ்டர் வெளியாகி பட்டையைக் கிளப்பியது. அதில் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடா மொழிகளில் பீஸ்ட் படம் வெளியாக இருப்பதாக அப்டேட் வந்தது. ஆனால் அதன்பின்னர் எந்த அப்டேட்டும் வெளிவரவில்லை. இந்நிலையில் படத்தின் இயக்குநர் நெல்சன் ட்விட்டரில் நாளை என்ற ஒரு ட்வீட்டை பதிவிட்டுள்ளார். ஒற்றை ட்வீட் பீஸ்ட் அப்டேட் குறித்துதான் என விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். ஆடியோ லாஞ்ச் அல்லது பீஸ்ட் படம் தொடர்பாக விஜய் கலந்துகொண்ட டிவி நிகழ்ச்சி என பலரும் பதிவிட்டு வருகின்றனர்.
நாளை…
— Nelson Dilipkumar (@Nelsondilpkumar) March 29, 2022
இது ஒருபுறமிருக்க ஏற்கெனவே உதயநிதி போட்ட ஒரு ட்வீட்டும் நெல்சனின் ட்வீட்டோடு இணைத்து பேசப்படுகிறது. ரெட் ஜெயண்ட் சார்பாக மிகப்பெரிய அறிவிப்பை நாளை வெளியிடப்போவதாக நேற்று அறிவித்திருந்தார். எனவே இது பீஸ்ட் படத்தின் தொலைக்காட்சி உரிமமாக இருக்கலாம் என்றும் ரஜினி படம் தொடர்பான அடுத்த அப்டேட் என்றும் சிலர் பதிவிட்டு வருகின்றனர்.
Big and exciting announcement from @RedGiantMovies_ on Wednesday !
— Udhay (@Udhaystalin) March 28, 2022
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்