Ajithkumar: அஜித் கதையே கேட்க மாட்டார்.. அடுக்கடுக்காக புட்டு புட்டு வைத்த இயக்குநர் கரு.பழனியப்பன்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் அஜித்குமார். கடைசியாக இவர் துணிவு படத்தில் நடித்திருந்தார். இப்படம் 2023 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாக ரூ.250 கோடிக்கும் மேல் வசூலை ஈட்டியது.
நடிகர் அஜித் தான் நடிக்கும் படங்களின் கதையே கேட்க மாட்டார் என இயக்குநர் கரு.பழனியப்பன் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் அஜித்குமார். கடைசியாக இவர் துணிவு படத்தில் நடித்திருந்தார். இப்படம் 2023 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாக ரூ.250 கோடிக்கும் மேல் வசூலை ஈட்டியது. இதனைத் தொடர்ந்து மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித் “விடா முயற்சி” என்ர படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மே மாதம் விடா முயற்சி படம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படியான நிலையில் இயக்குநர் கரு.பழனியப்பன் அஜித் பற்றிய சுவாரஸ்ய தகவல்களை ஊடகம் ஒன்றிற்கு தெரிவித்துள்ளார். அதில், “திரையில் மட்டுமல்ல திரைக்கு பின்னாலும் அஜித்தை ரசிப்பவன் நான். கதையை விட ஹீரோ பிம்பம் தான் முக்கியம் என முன்னிறுத்தியவர் நீங்கள். 1997 ஆம் ஆண்டு என்னுடைய கதை ஒன்றை இயக்குநர் தரணி இயக்குவதாக இருந்தது. ரெட்டை ஜடை வயசு ஷூட்டிங்கில் இருந்த உங்களிடம் கதை சொல்ல இருவரும் வந்தோம். ஆனால் ஷூட்டிங் ஸ்பாட்டில் உங்களை காணவில்லை. எங்கே என தேடிய போது அங்கு கடைநிலை ஊழியர் போல திண்ணையில் படுத்து தூங்கி கொண்டிருந்தீர்கள்.
நீங்கள் எங்களிடம் கதையெல்லாம் வேண்டாம். என்னோட சம்பளம் ரூ.25 லட்சம். அதில் ரூ.15 லட்சம் அட்வான்ஸ் கொடுத்தால் அடுத்த மாதமே ஷூட்டிங்கிற்கு வந்துடுவேன் என சொன்னீர்கள். ஒரு வரி கதையாவது கேளுங்கள் என தரணி சொல்லியும், இந்த படம் உங்களுக்கு வாழ்க்கை கொடுக்கும். அதனால் கதை சிறப்பாக பண்ணியிருப்பீர்கள். இதேபோல் பூவெல்லாம் உன் வாசம் படத்தில் நான் உதவி இயக்குநராக பணியாற்றிக் கொண்டிருந்தேன். அந்த படத்தின் நீங்கள் பெரிதாக கதையை பற்றி இயக்குநரோடு பேசியதாக நினைவில்லை. எப்போது கதையை இயக்குநரோடு முடிவுக்கு விட்டு விடுபவர் என கேள்விப்பட்டுள்ளேன்” என கரு.பழனியப்பன் தெரிவித்துள்ளார்.
இயக்குநர்கள் பார்த்திபன், தரணி மற்றும் கரு.பழனியப்பன் ஆகியோரிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய கரு.பழனியப்பன் ஸ்ரீகாந்த், சினேகா நடித்த பார்த்திபன் கனவு படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநரானார். தொடர்ந்து சிவப்பதிகாரம், பிரிவோம் சந்திப்போம், சதுரங்கம், மந்திர புன்னகை, ஜன்னல் ஓரம் என சில படங்களை இயக்கினார். தொடர்ந்து நட்பே துணை படம் மூலம் நடிகராக அறிமுகமான கரு.பழனியப்பன் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.