‛விஜய் சாருக்கு கதை சொன்னேன்... அவருக்கு பிடிக்கவில்லை’ -கார்த்திக் சுப்பராஜ் பேட்டி!
Director Karthik Subbaraj: மஹானும் சரி, ஜகமே தந்திரமும் சரி இரு படங்களையும் ஓடிடியில் வெளியிட வேண்டும் என்பதே தயாரிப்பாளரின் முடிவுதான். தனுஷ் சாராக இருக்கட்டும் விக்ரமாக சாராக இருக்கட்டும் எல்லாரும் ஃபீல் பண்ணாங்க.
பஃபூன் பட வெளியீட்டையொட்டி தயாரிப்பாளர் எனும் முறையில், தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு, இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் பேட்டி கொடுத்து இருந்தார். அவர் பதிலளித்த சுவாரஸ்யமான பதில்களை பார்க்கலாம்.
கேள்வி : ஸ்டோன் பெஞ்சு தயாரிப்பு நிறுவனம் புதுமுக ஆர்டிஸ்ட்களுக்கு வாய்ப்பு தந்து வருகிறது. பஃபூன் படம் எப்படி வந்து இருக்கிறது?
இந்த தயாரிப்பு நிறுவனம் சின்ன படங்கள் முதல் பெரிய படங்கள் வரை அனைத்தையும் தயாரிக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. முக்கியமாக, அறிமுக இயக்குநர்களுக்கும், நடிகர்களும் வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்பதில் கவனமாக இருந்தோம். பெண்குயின், மேயாத மான் பூமிகா போன்ற படங்களை தயாரித்தோம். இப்படத்தின் இயக்குநர் அசோக்,
என்னுடன் பீட்சா, ஜிகிர்தண்டா போன்ற படங்களில் பணிபுரிந்தார். விஜய் சேதுபதி மூலமாகதான் அசோக் அறிமுகமானார். டைரக்டராக இருக்கும் அனைத்து தகுதிகளும் அவருக்கு உள்ளது. முதல் படத்திற்கு பெரிய பட்ஜெட் கிடைக்காது, முதல் படத்தில் நல்ல முத்திரையை பதிக்க வேண்டும் என்று அவரிடன் சொன்னேன். அவரும் நல்ல கதை எழுதி கொண்டுவந்தார்.
கேள்வி : பஃபூன் படம் நல்ல வந்து இருக்கா?
ஊரில் நடக்கும் கூத்து நிகழ்சிகளில், பங்கு பெறும் கலைஞர்களின் வாழ்க்கைதான் இப்படம். 6 மாதம் சீசன் டைம் முடிந்தவுடன் அவர்கள் வாழ்வில் என்ன நடக்கிறது என்பதை நோக்கி இப்படத்தின் கதை நகரும். ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய இடங்களின் அண்டர் கிரவுண்ட் வாழ்க்கையும் அங்கு நடக்கும் அரசியல் பற்றியும் இப்படத்தின் கதை பேசும்.
கேள்வி : நாடகங்கள் பார்த்து உள்ளீர்களா.. படத்தில் காட்சிகள் எப்படி அமைந்தது?
நான் பார்த்திருக்கிறேன். வைபவின் அப்பா கதாபாத்திரத்தில் நடித்து உள்ளவர், ஒரு உண்மையான நாடக கலைஞர்.
கேள்வி : தயாரிப்பாளராக உங்களுக்கு என்ன மென்கெடல் இருந்தது?
கொரோனாவால் கஷ்டப்பட்டோம், படத்தின் இயக்குநருக்கும் கொரோனா தொற்று வந்தது.பட்ஜெட்டுக்குள் படத்தை எடுத்து முடித்து விட்டோம்.
கேள்வி : ஸ்டோன் பெஞ்ச் துவங்கிய போது ஒரு நோக்கம் இருந்து இருக்கும், இப்போ வரை அது கடைப்பிடிக்கப்படுகிறதா?
கதைகளை தேர்ந்து எடுப்பதில் நாங்கள் தெளிவாக இருந்தோம், அதுதான் எங்கள் நோக்கம். எங்கள் குழுவினர் அனைவரும் சேர்ந்துதான் முடிவெடுப்போம்.
கேள்வி : நீங்கள் சமீபத்தில் எடுத்த 2 படங்களும் ஓடிடியில் வெளியானது இதை நீங்கள் எதிர்ப்பார்த்தீர்களா?
எனக்கு இது ஷாக், ஜகமே தந்திரம் படத்தை ஷூட் செய்யும் போது, கொரோனா என ஒன்று வரும் என எதிர்ப்பார்க்கவில்லை. மஹானும் சரி, ஜகமே தந்திரமும் சரி இரு படங்களையும் ஓடிடியில் வெளியிட வேண்டும் என்பதே தயாரிப்பாளரின் முடிவுதான். தனுஷ் சாராக இருக்கட்டும் விக்ரமாக சாராக இருக்கட்டும் எல்லாரும் ஃபீல் பண்ணாங்க.
கேள்வி : அடுத்த படம் தியேட்டரில் வெளியாகுமா ?
அடுத்த படம் , ஜிகிர்தண்டா 2தான் இப்படத்தை, நிச்சயமாக தியேட்டரில் பார்க்கலாம். ஒரு படத்தின் கதை எழுதும் போதே, அப்படம் தியேட்டருக்கான படமாக எழுதப்படும். ஆனால், அது ஓடிடியில் வெளியாகும் போது கஷ்டமாக இருக்கும்.
கேள்வி : ஜகமே தந்திரம் படத்தை பார்த்த ரூசோ ப்ரதர்ஸ், தனுஷுக்கு க்ரே மேன் வாய்ப்பை கொடுத்தார்கள் என்ற செய்தியை கேட்ட போது எப்படி இருந்தது?
க்ரே மேன் பார்க்கும் போது, பெரிய ஹாலிவுட் நட்சத்திரங்களுடன் நடிப்பதை பார்த்து பெருமையாகவும் சந்தோஷமாகவும் இருந்தேன்.
கேள்வி : ஜிகிர்தண்டா 2 எப்படி போயிட்டு இருக்கு?
முதல் படத்திற்கும் இதுக்கும் எந்த சமந்தமும் இல்லை.அதற்கான கதையை எழுதி வருகிறேன். இறைவி முடிக்கும் போது ஜிகர்தணடா 2 எடுக்கலாம் என்ற எண்ணம் வந்தது. அதுவும், மஹான் முடிந்தவுடன் இந்த படத்தை கையில் எடுத்தேன்.முக்கியமாக, இப்படத்தின் முதல் பாகம் அனைவருக்கும் பிடித்தது. அதனால் மக்களிடம் பெரும் எதிர்ப்பார்ப்பு இருக்கும்.
கேள்வி : எஸ்.ஜே சூர்யா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறாரா?
கதை எழுதி வருகிறேன். படத்தில் முக்கியமான வேடத்தில் அவர் நடிப்பார். படத்தின் ஷுட்டிங் இந்த ஆண்டின் இறுதியில் துவங்கும்.
கேள்வி : சேது கதாப்பாத்திரத்தை நான் நடித்திருப்பேன் என்று நடிகர் ரஜினி கூறியிருந்தார். ஜிகிர்தண்டா 2 படத்தில் அவர் உள்ளாரா?
ஜிகிர்தண்டா படம் முடிந்தவுடன் என்னை ஊக்குவிக்கும் வகையில் ரஜினி பேசினார்.ஜகமே தந்திரம், மஹான் ஆகிய படங்களை பார்த்து பாராட்டினார். இப்படத்தில் நடிப்பதை பற்றி அவரிடம் நானும் எதுவும் கேட்கவில்லை. அவரும் எதுவும் பேசவில்லை.
தல தளபதி வைத்து ஏதாவது படம் இயக்க யோசனை இருக்க ?
விஜய் சாருக்கு ஒரு கதை சொன்னேன். அவர் எதிர்ப்பார்த்த அளவுக்கு அது அமையாததால் அந்த கதையை அவர் ஏற்றுக் கொள்ளவில்லை