சூர்யா மேல இவ்வளவு கோபமா...எமோஷனலான கெளதம் மேனன்
துருவ நட்சத்திரம் படத்தின் கதை சொன்னபோது சூர்யா தன்னை நம்பாமல் அந்த படத்தில் நடிக்காதது குறித்து கெளதம் மேனன் அதிருபதியை வெளிப்படுத்தியுள்ளார்

கெளதம் மேனன்
மின்னலே படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் கெளதம் மேனன். காக்க காக்க , வேட்டையாடு விளையாடு , வாரணம் ஆயிரம் , விண்ணைத்தாண்டி வருவாயா உள்ளிட்ட ஹிட் படங்களை இயக்கியுள்ளார். இயக்குநர் கெளதம் மேனன் தற்போது மலையாளத்தில் மம்மூட்டி நடித்துள்ள Dominic and the Ladies Purse' படத்தில் நடித்துள்ளார். தமிழில் அவர் விக்ரம் வைத்து இயக்கியுள்ள துருவ நட்சத்திரம் திரைப்படம் ரிலீஸ் வரை வந்து பின் மீண்டும் நிலுவையில் நின்றது.
சூர்யா மீது கோபத்தை வெளிப்படுத்திய கெளதம் மேனன்
துருவ நட்சத்திரம் படம் பற்றி கோபிநாத் உடனான நிகழ்ச்சியில் கெளதம் மேனன் பேசினார். " நான் இதை சொன்னால் அவநம்பிக்கையாக தெரியலாம். என்ன இவர் எப்போ பார்த்தாலும் கரிச்சு கொட்டிட்டே இருக்கான்னு தோனலாம். ஒரு படத்தில் நடிக்காமல் போவதற்கு அவர்களூக்கு நிறைய காரணங்கள் இருக்கலாம். ஆனான் என்னைப் பொறுத்தவரை துருவ நட்சத்திரம் படம் பண்ணுவதற்கு சூர்யா யோசித்திருக்க கூடாது என்பது தான் என்னுடைய எண்ணம். நாங்கள் இருவரும் சேர்ந்து காக்க காக்க படத்தில் பணியாற்றினோம். என்னிடம் ஒரு ஐடியா இருந்தது. ஒரு திரைக்கதை இருந்தது. இருவரும் சேர்ந்து அதில் பணியாற்றினோம் . வாரணம் ஆயிரம் படத்தில் சூர்யாவுக்கு அப்பாவாக நடிக்க மோகன்லான் மற்றும் இந்தியில் நானா பட்டேக்கர் ஆகிய இருவரிடம் கேட்டோம். அவர்களால் நடிக்க முடியவில்லை என்றது. சூர்யா தான் தானே அப்பா மகன் இரு கதாபாத்திரத்திலும் நடிப்பதாக கூறினார். ஆனால் துருவ நட்சத்திரம் கதை கேட்டு நிறைய பேசினோம். ஆனாலும் அந்த கதையில் அவருக்கு நம்பிக்கை வரவில்லை. ஏதாவது ரெஃபரன்ஸ் இருக்கிறதா என்று கேட்டார். என்னிடம் ரெஃபரன்ஸ் எல்லாம் இல்லை. நீங்கள் இருந்தால் நான் வேற மாதிரி ஒன்னு பண்ண முடியும் சொன்னேன். காக்க காக்க , வாரணம் ஆயிரன் எடுத்த இயக்குநர் இந்த படத்தையும் எடுக்க முடியும் என்று சூர்யா நம்பியிருக்க வேண்டும் . நான் உதவியாக எல்லாம் கேட்கவில்லை . நாங்கள் இருவரும் சேர்ந்து இரண்டு படங்கள் பண்ணிர்யிருக்கோம். அந்த நம்பிக்கையில் இந்த படத்திற்கு ஓக்கே சொல்லியிருக்கலாம். என்ன தப்பா போயிருக்கும் ? " என கெளதம் மேனன் கேள்வி எழுப்பியுள்ளார்