மேலும் அறிய

Ameer: எப்போது அழைத்தாலும் விசாரணைக்கு தயார்.. ஜாஃபர் சாதிக் விவகாரத்தில் அமீர் அறிவிப்பு

சமீபத்தில் டெல்லியில் ரூ.75 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவினரும், டெல்லி போலீசாரும்  மேற்கொண்ட சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது.

தயாரிப்பாளர் ஜாஃபர் சாதிக் விவகாரத்தில் எப்போது அழைத்தாலும் விசாரணைக்கு ஆஜராக தயாராக இருக்கிறேன் என இயக்குநர் அமீர் தெரிவித்துள்ளார். 

சிக்கிய தயாரிப்பாளர் ஜாஃபர் சாதிக் 

சமீபத்தில் டெல்லியில் ரூ.75 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவினரும், டெல்லி போலீசாரும்  மேற்கொண்ட சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பான விசாரணையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். கடந்த 3 ஆண்டுகளாகவே இவர்கள் ரூ.2 ஆயிரம் கோடி மதிப்புக் கொண்ட போதைப் பொருளை உணவுப்பொருள் என்ற பெயரில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற நாடுகளுக்கு கடத்தியுள்ளது விசாரணையில் தெரிய வந்தது. 

இந்த கும்பலுக்கு தலைவனாக தமிழ்நாட்டைச் சேர்ந்த சினிமா தயாரிப்பாளர் ஜாஃபர் சாதிக் செயல்பட்டதும் போலீசார் நடத்திய விசாரணையில் கண்டறியப்பட்டது. இந்த ஜாஃபர் சாதிக் கயல் ஆனந்தி நடித்துள்ள மங்கை படத்தின் தயாரிப்பாளர் ஆவார். அதேபோல் அமீர் நடித்து வரும் இறைவன் மிகப்பெரியவன் என்ற படத்தையும் தயாரித்து வருகிறார். இப்படியான நிலையில் சில தினங்களுக்கு முன் அமீர் அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.  

கண்டித்த அமீர் 

அதில், "ஜாஃபர் சாதிக் பற்றி செய்திகளில் வரும் குற்றச்சாட்டுகளில் உண்மை இருக்குமேயானால் அது கண்டிக்கப்பட வேண்டியதும், தண்டிக்கப்பட வேண்டியவையும் தான். சமரசங்களுக்கு உட்பட்டால் நிறைய பணம் சம்பாதிக்கலாம் என்ற கொள்கைக்கு நான் எப்போதும் எதிரானவன். ஜாஃபர் சாதிக் உடன் நான் தொடர்ந்து பணியாற்றப் போவதில்லை" என தெரிவித்திருந்தார். ஆனால் தொடர்ச்சியாக அமீரை சம்பந்தப்படுத்தி சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் எழுந்த வண்ணம் இருந்தது. 

வீடியோ மூலம் விளக்கம்

இந்நிலையில் அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “என்னுடைய இறைவன் மிகப்பெரியவன் படத்தின் தயாரிப்பாளரான ஜாஃபர் சாதிக் குறித்த என்னுடைய நிலைப்பாட்டை தெள்ளத் தெளிவாக விளக்கி விட்டேன். அதன்பிறகும் என் மீது பேரன்பு கொண்ட கொண்ட ஊடகவியலாளர்களும், நண்பர்களும் தொடர்ச்சியாக சமூக வலைத்தளங்களிலும் ஊடகங்களிலும் என்னை தொடர்புபடுத்தி வீடியோ வெளியிடுவதை பார்க்க முடிகிறது. அவர்களுக்கு நான் உன்னை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். அடிப்படையாக மது, விபச்சாரம், வட்டி இதுபோன்ற விஷயங்களுக்கு எதிரான சித்தாந்தத்தை பின்பற்றக்கூடிய மார்க்கத்தைச் சேர்ந்தவன் நான்.

அப்படி இருக்கையில், இதுபோன்ற குற்றச்செய்தியில் என்னை தொடர்புபடுத்தி பேசுவது என்பது என் பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முடியுமே தவிர, என்னுடைய குடும்பத்தினருக்கு மன உளைச்சலை ஏற்படுத்த முடியுமே தவிர, வேறு எந்த பயனையும் அடைந்து விட முடியாது. நீங்கள் சொல்கிற எந்த குற்றச்சாட்டுகளையும் விசாரிப்பதற்கு காவல்துறை மற்றும் பல்வேறு சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகள் இருக்கிறார்கள். அவர்கள் எப்போது என்னை அழைத்தாலும் விசாரணைக்கு தயாராக இருக்கிறேன். இந்த சோதனையான காலக்கட்டத்தில் என் மீது அன்பு கொண்டு ஆதரவு தெரிவித்த அனைத்து உள்ளங்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என கூறியுள்ளார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
China Virus: கொரோனாவை மிஞ்சும்HMPV வைரஸ்? கதிகலக்கத்தில் சீனா: அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது? முழு விபரம்!
China Virus: கொரோனாவை மிஞ்சும்HMPV வைரஸ்? கதிகலக்கத்தில் சீனா: அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது? முழு விபரம்!
Kushboo :
Kushboo : "தந்தையால் பாலியல் தொந்தரவுக்கு ஆளானேன்"..நடிகை குஷ்பு ஓப்பன் டாக்
Madurai: அக்னி சட்டி, மிளகாய் அரைத்து போராட்டம் ; மதுரையில் குஷ்பு கைது
அக்னி சட்டி, மிளகாய் அரைத்து போராட்டம் ; மதுரையில் குஷ்பு கைது
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Yescon 2025 : சென்னையில் நாளை முதல்.. YESCON - 2025 மாநாடு துவக்கி வைக்கும் நிதியமைச்சர்செ.பாலாஜி..பொன்முடி வரிசையில்..  துரைமுருகன் வீட்டில் ED ரெய்டு!  பரபரக்கும் வேலூர்ஸ்டாலின் vs இபிஎஸ் vs விஜய் ! களமிறங்கிய MASTER MINDS ! 2026-ல் அரியணை யாருக்கு?FORM-க்கு வரும் அதிமுக : வழிகாட்டும் MASTERMIND : திமுகவுக்கு பக்கா ஸ்கெட்ச்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
China Virus: கொரோனாவை மிஞ்சும்HMPV வைரஸ்? கதிகலக்கத்தில் சீனா: அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது? முழு விபரம்!
China Virus: கொரோனாவை மிஞ்சும்HMPV வைரஸ்? கதிகலக்கத்தில் சீனா: அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது? முழு விபரம்!
Kushboo :
Kushboo : "தந்தையால் பாலியல் தொந்தரவுக்கு ஆளானேன்"..நடிகை குஷ்பு ஓப்பன் டாக்
Madurai: அக்னி சட்டி, மிளகாய் அரைத்து போராட்டம் ; மதுரையில் குஷ்பு கைது
அக்னி சட்டி, மிளகாய் அரைத்து போராட்டம் ; மதுரையில் குஷ்பு கைது
அடிமை விலங்கை உடைத்தெறிந்த கைத்தடி! இன்னும் ஏன் பெரியார் புகழ்? இளைஞர்களைக் கவரும் 100 நொடி!
அடிமை விலங்கை உடைத்தெறிந்த கைத்தடி! இன்னும் ஏன் பெரியார் புகழ்? இளைஞர்களைக் கவரும் 100 நொடி!
Minister ponmudi: அமலாக்கத்துறை சோதனை... நழுவி சென்ற அமைச்சர் பொன்முடி
Minister ponmudi: அமலாக்கத்துறை சோதனை... நழுவி சென்ற அமைச்சர் பொன்முடி
Coimbatore: 8 மணி நேர போராட்டம்! தூக்கி நிறுத்தப்பட்ட டேங்கர் லாரி.. மக்கள் நிம்மதி பெருமூச்சு
Coimbatore: 8 மணி நேர போராட்டம்! தூக்கி நிறுத்தப்பட்ட டேங்கர் லாரி.. மக்கள் நிம்மதி பெருமூச்சு
யார் அந்த சார்? ‘இனி இதுதான் நடக்கும்’ - நேரடியாக இபிஎஸ்க்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர் சேகர் பாபு 
யார் அந்த சார்? ‘இனி இதுதான் நடக்கும்’ - நேரடியாக இபிஎஸ்க்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர் சேகர் பாபு 
Embed widget