Shreya Ghoshal: "பாட்டு சரியில்லைங்க'' ஸ்ரேயா கோஷலை அழ வைத்த இயக்குநர் அமீர்!
"அதன் பிறகு நான் அந்த பெண்கிட்ட பணத்தையும் தர்றேன். வீட்டுக்கு போகட்டும் வேற யாரையாவது வச்சு பாட வைக்குறேன்னு சொன்னேன்."
பருத்தி வீரன் :
கடந்த 2007 ஆம் ஆண்டு அமீர் இயக்கத்தில் கார்த்தி மற்றும் பிரியாமணி நடிப்பில் வெளியான திரைப்படம் பருத்தி வீரன் . இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். இந்த படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களுமே சூப்பர் ஹிட் . குறிப்பாக ஸ்ரேயா கோஷல் குரலில் ஒலிக்கும் "அய்யய்யோ.... என் உசுருக்குள்ள தீய வச்சான் அய்யய்யோ " என்னும் பாடல் இன்றைக்கும் பலரின் காலர் டியூனாக ஒலித்துக்கொண்டிருக்கிறது. இந்த பாடல் உருவான பின்னணி குறித்து இயக்குநர் அமீர் நேர்காணல் ஒன்றில் மனம் திறந்திருக்கிறார்.
View this post on Instagram
பிகைண்ட் தி சாங்:
அதில் " அய்யய்யோ பாடல் ரெக்கார்ட் செய்துக்கொண்டிருந்தோம். ஸ்ரேயா கோஷல் பாடிட்டு இருந்தாங்க. அவங்களுக்கு தமிழ் தெரியாது. இங்கிலிஷ்தான் தெரியும்னுதான் சொன்னாங்க. அதனால வேறு இயக்குநர் நண்பரை அழைத்து சாங் மிக்ஸிங் இருக்கு வாங்கன்னு சொல்லி அழைச்சுட்டு போயிட்டேன் . அப்போ ஸ்ரேயா கோஷல் அவங்க ஸ்டைல்ல பாடிட்டு இருந்தாங்க. நான் வேற ஸ்டைல்ல பாட சொல்லுறேன் அவங்க அதே ஸ்டைல்லதான் பாடுறாங்க. எனக்கு இது வேலைக்கு ஆகுற மாதிரி தெரியல. நான் சொல்லுறதை புரிஞ்சுட்டு பாடுங்க அப்படினு சொன்னேன். வெளியில அவங்க அம்மா உட்காந்திருந்தாங்க. அவங்க என்னிடம் வந்து என் பொண்ணு ரொம்ப டயர்ட்டாகிட்டா , ஒரு பாட்டுக்கு இவ்வளவு நேரமா எடுத்துப்பீங்கன்னு கேட்டாங்க.எனக்கு ஸ்ரேயா கோஷல்தான் பாடனும்னு இரண்டு வாரமா வெயிட் பண்ணினேன்.ஆனால் அவங்க வேறு சில இசையமைப்பாளருக்கு முன்னுரிமை கொடுத்து மூன்று பாடல்களோட ரெக்கார்டிங் முடிச்சுட்டு வந்துருக்காங்க. ஸ்ரேயா கோஷல் பாடல, முத்தழகு பாடுறா.. அதனால எனக்கு இந்த மாதிரி வேண்டாம்னு சொல்லிட்டேன். ஒரு கட்டத்துல அந்த பெண் அழுதுட்டாங்க. அதன் பிறகு நான் அந்த பெண்கிட்ட பணத்தையும் தற்றேன். வீட்டுக்கு போகட்டும் வேற யாரையாவது வச்சு பாட வைக்குறேன்னு சொன்னேன். அது அவங்களுக்கு ட்ரிகர் ஆகியிருக்கும் போல அதனால அடுத்த நாள் இங்கயே தங்கி அந்த பாடலை சிறப்பா பாடிக்கொடுத்துட்டு போனாங்க " என்றார் அமீர் .