Director Ameer: ஜாஃபர் சாதிக் போதைப்பொருள் கடத்தல் வழக்கு: விசாரணைக்கு ஆஜரான இயக்குநர் அமீர்!
போதைப்பொருள் கடத்தியதாக தயாரிப்பாளர் ஜாஃபர் சாதிக் கைது செய்யப்பட்ட வழக்கில் விசாரணைக்காக இயக்குநர் அமீர் இன்று ஆஜரானார்.
![Director Ameer: ஜாஃபர் சாதிக் போதைப்பொருள் கடத்தல் வழக்கு: விசாரணைக்கு ஆஜரான இயக்குநர் அமீர்! director ameer appear drug trafficking case in delhi Director Ameer: ஜாஃபர் சாதிக் போதைப்பொருள் கடத்தல் வழக்கு: விசாரணைக்கு ஆஜரான இயக்குநர் அமீர்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/04/02/8bfb244e72ded18af6a942b72e73fea91712046286285572_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
போதைப்பொருள் கடத்தியதாக தயாரிப்பாளர் ஜாஃபர் சாதிக் கைது செய்யப்பட்ட வழக்கில் விசாரணைக்காக இயக்குநர் அமீர் இன்று ஆஜரானார்.
கடந்த பிப்ரவரி மாதம் டெல்லியில் ரூ.75 கோடி மதிப்பு கொண்ட போதைப்பொருள் த்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவினரும், டெல்லி போலீசாரும் நடத்திய சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அதாவது கடந்த 3 ஆண்டுகளாகவே இந்த கும்பல் ரூ.2 ஆயிரம் கோடி மதிப்புள்ள போதைப் பொருளை கடத்தியதும், இதற்கு தலைவனாக தமிழ்நாட்டைச் சேர்ந்த சினிமா தயாரிப்பாளர் ஜாஃபர் சாதிக் இருப்பதும் கண்டறியப்பட்டது.
இதற்கிடையில் ஜாபர் சாதிக் தலைமறைவானார். தீவிர தேடுதல் வேட்டைக்குப் பின் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் கடந்த மார்ச் 9 ஆம் தேதி போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் அவர் கைது செய்யப்பட்டார். ஜாஃபர் சாதிக்கிடம் நடத்தப்பட்ட விசாரணையில் போதைப்பொருட்கள் மூலம் கிடைத்த பணத்தில் திரைப்படங்கள் தயாரித்தது தெரிய வந்தது. கயல் ஆனந்தி நடித்த மங்கை படம் ரிலீசுக்கு தயாராக இருந்த நிலையில், இயக்குநர் அமீர் நடித்த இறைவன் மிகப்பெரியவன் என்ற படத்தையும் ஜாஃபர் சாதிக் தயாரித்துள்ளார்.
இதனிடையே ஜாஃபர் சாதிக்கிற்கும், இயக்குநர் அமீருக்கும் தொடர்பு இருப்பதாக தகவல் வெளியானது. இதனைத் தொடர்ந்து இயக்குநர் அமீர் காட்டமான அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், இந்த விவகாரத்தில் காவல்துறை மற்றும் துறை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எப்போது அழைத்தாலும் விசாரணைக்கு ஆஜராக தயாராக இருக்கிறேன் என வீடியோ மூலம் தெரிவித்திருந்தார்.
இதற்கிடையில் ஜாஃபர் சாதிக் குறித்து இயக்குநர் அமீரிடம் விசாரணை நடத்த மத்திய போதைப் பொருள் பிரிவு அதிகாரிகள் ஏப்ரல் 2 ஆம் தேதி டெல்லியில் உள்ள அலுவலகத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பினர். இஸ்லாமியரான அமீர் நோன்பு இருப்பதால் ரமலான் பண்டிகை முடிந்ததும் ஆஜராக அவகாசம் கேட்டதாக தகவல் வெளியானது. இந்நிலையில் டெல்லியில் உள்ள மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் அவர் ஆஜரானார். அவரிடம் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த விவகாரத்தில் சினிமா உலகைச் சேர்ந்த பலருக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படும் நிலையில் விரைவில் அவர்களுக்கும் சம்மன் அனுப்பப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)