AL Vijay: பிரபல இயக்குநர் ஏ.எல்.விஜய்யின் தாயார் மறைவு.. திரையுலகத்தினர் அஞ்சலி..!
பிரபல இயக்குநரான ஏ.எல். விஜயின் தாயார் உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளார்.
பிரபல இயக்குநரான ஏ.எல். விஜய்யின் தாயார் உடல்நலக்குறைவால் காலமானார்.
இயக்குநர் ஏ.எல். விஜய்யின் தாயாரான ஏ எல் வள்ளியம்மை இன்று சென்னையில் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 67. அஜித் நடித்த ‘கீரிடம்’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் இயக்குநர் ஏ.எல்.விஜய். இவர் பிரபல தயாரிப்பாளரான ஏ.எல். அழகப்பனின் மகன் ஆவார்.
View this post on Instagram
அந்தப் படத்தை தொடர்ந்து மதராசப்பட்டினம், தெய்வத்திருமகள், தாண்டவம், தலைவா, தேவி, தலைவி உள்ளிட்ட படங்களை இயக்கி பிரபலமானார். ‘தெய்வத்திருமகள்’ படத்தின் போது அந்தப்படத்தில் நடித்த நடிகை அமலாபாலுக்கும் இவருக்கும் இடையே காதல் ஏற்பட்டது.
View this post on Instagram
இதனையடுத்து இவரும் திருமணம் செய்து கொண்ட நிலையில், கருத்துவேறுபாடு காரணமாக விவாகரத்து செய்து கொண்டனர். அதன்பின்னர் ஐஸ்வர்யா என்பவரை ஏ.எல்.விஜய் திருமணம் செய்து கொண்டார். இந்தத்தம்பதிக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது.
இவரின் சகோதரர் ஏ.எல்.உதயா “ திருநெல்வேலி, தலைவா. ஆவிகுமார், உத்தரவு மகாராஜா உள்ளிட்ட படங்களில் நடித்தார். இவர்களது தாயாரின் இழப்புக்கு ரசிகர்கள் பலர் சமூக வலைதளங்களின் மூலமாக, தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.