(Source: ECI/ABP News/ABP Majha)
பரதேசி பட ஷூட்டிங்கில் பாலா அடித்தாரா? கோணிப்பை காஸ்ட்யூம் பிரச்சனை… உண்மையை கூறிய அதர்வா!
பல செய்முறைகளுக்கு பிறகுதான் அந்த இரும்பு ஸ்ட்ராங்கா இருக்கும். அது மாதிரிதான் பாலா சார் பட்டறையும். அவர் அடிக்கிற மாதிரி போட்டோஸ் வந்தது உண்மையாவே ஒரு ஷாட் எடுக்கும்போது நடந்தது.
பரதேசி திரைப்படம் நடிகர் அதர்வாவுக்கு இன்றும் பெயர் சொல்லும் திரைப்படமாக அமைந்துள்ளது. நடிகர் முரளியின் மகனான இவர் பாணா காத்தாடி திரைப்படம் மூலம் அறிமுகமாகி, முப்பொழுதும் உன் கற்பனைகள், இமைக்கா நொடிகள் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.
பரதேசி திரைப்படம்
அவர் பரதேசி படத்தில் நடித்த அனுபவம் குறித்து பேசுகையில், "பாலா ஒரு நாள் போன் செய்து ஒரு கான்செப்ட் இருக்குன்னு ஒரு சின்ன லைன் மட்டும் சொன்னார். அதுல நான் என்ன பண்ண போறேன் எதுவும் சொல்லல. ஒரு 2 வாரமா எந்த தகவலும் இல்லை, ஆனா நான் ரொம்ப எதிர்பார்போட இருந்தேன், கால் எதுவும் வரலன்றதால அப்டியே விட்டுட்டேன்.
ஹேர் கட்
காஸ்ட்யூம் குறித்து பேசிய அவர், "ஆனா பாலா சார் மறுபடி கால் பண்ணி லுக் டெஸ்ட் பண்ணனும் வா'ன்னு கூப்பிட்டார். போனேன், காலைல 8 மணிக்கு எனக்கு முடி வெட்ட ஆரம்பிச்சாங்க. மதியம் லஞ்ச் வரைக்கும் முடிதான் வெட்டிட்டு இருந்தாங்க. ஏன்னா படத்துல எல்லாருக்கும் அதுதான் ஹேர் ஸ்டைல். எனக்கு செட் ஆனாதான் அவங்களுக்கும் வெட்டலாம். அதுவரைக்கும் நான் கண்ணாடி பாக்கல. பாத்ததும் பயந்து போய்ட்டேன். காஸ்ட்யூம் ன்னு சொல்லி ஒரு கோணிப்பை எடுத்துட்டு வந்தாங்க", என்றார்.
கோணிப்பை காஸ்ட்யூம்
மேலும் பேசிய அவர், "நான் நல்ல ராஜா காஸ்ட்யூம் எல்லாம் உள்ள இருக்கும்ன்னு நெனச்சு பாத்தேன். உள்ள இருந்து இன்னொரு கோணிப்பை எடுத்தாங்க. அதுதான் காஸ்ட்யூம்ன்னு சொன்னாங்க. எனக்கு அதிர்ச்சு ஆகிடுச்சு அதை எதிர்பார்க்கவே இல்ல. அந்த டீ எஸ்டேட்ல ஒரு ஓரத்துல உக்கார சொல்லி போட்டோ எடுத்தாங்க. பாலா சார் சுத்தி சுத்தி பாத்துட்டு ஓகேன்னு சொல்லி அனுப்பிட்டாரு. அப்புறம் எனக்கு அந்த போட்டோ அனுப்புனாங்க, சுத்தமா வேற ஒரு ஆளா இருந்தேன்" என்றார்.
பாலா அடிப்பாரா?
ஷூட்டிங்ல அடிக்குற மாதிரி போட்டோஸ் எல்லாம் வந்ததே என்ற கேள்விக்கு, "ஒரு இரும்ப தயாரிக்கணும்ன்னா முதல்ல அதை ஹீட் பண்ணனும், அப்புறம் கூல் பண்ணனும். இப்படி பல செய்முறைகளுக்கு பிறகுதான் அந்த இரும்பு ஸ்ட்ராங்கா இருக்கும். அது மாதிரிதான் பாலா சார் பட்டறையும். அவர் அடிக்கிற மாதிரி போட்டோஸ் வந்தது உண்மையாவே ஒரு ஷாட் எடுக்கும்போது நடந்தது. அந்த ஷாட்ல உண்மையாவே அந்த கேரக்டர் என்னை அடிக்கிற மாதிரி இருக்கும். அதை எப்படி பண்ணனும்னு சொல்லி கொடுத்துட்டி இருந்த ஷாட் அது. அதை தான் மேக்கிங் வீடியோல போட அது பெரிய விஷயம் ஆகிடுச்சு", என்று குறிப்பிட்டார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்