மேலும் அறிய

Dhruva Natchathiram: தூசிதட்டி எடுக்கப்பட்ட துருவ நட்சத்திரம்... அப்டேட் கொடுத்த படக்குழுவினர்!

'துருவ நட்சத்திரம்' திரைப்படம் எதிர்பாராதவிதமாக நிதிப் பற்றாக்குறையால் முடங்கிய நிலையில் விக்ரம், கௌதம் மேனன் இருவரும் தங்கள் வெவ்வேறு படங்களில் பிசியாகினர்.

தமிழ் சினிமாவின் ஸ்டைலிஷ் இயக்குநர்களில் ஒருவரான கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவாகி வந்த ஸ்பை த்ரில்லர் படமான 'துருவ நட்சத்திரம்' திரைப்படம் ஒரு முடிவுக்கே வராமல் நீண்ட நாட்களாக தள்ளிப்போய் கொண்டே இருந்தது.

2016இல் தொடங்கிய படம்

சீயான் விக்ரம் சீக்ரெட் ஏஜென்ட் கதாபாத்திரத்தை ஏற்றிருந்த இந்தப் படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகளுக்கு முன் 2016ஆம் ஆண்டு தொடங்கியது.

ரிது வர்மா, சிம்ரன், ஐஸ்வர்யா ராஜேஷ், ராதிகா, திவ்யதர்ஷினி, பார்த்திபன், விநாயகன் என பெரும் நட்சத்திரப் பட்டாளமே இணைந்த இப்படம்,  கிட்டத்தட்ட ஏழு நாடுகளில் படமாக்கப்பட்டது.

ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க படத்தொகுப்பு பணிகளை ஆண்டனி மேற்கொண்டார். இந்நிலையில், 'துருவ நட்சத்திரம்' திரைப்படம் எதிர்பாராதவிதமாக நிதிப் பற்றாக்குறையால் முடங்கியது.

வரவேற்பு பெற்ற பாடல்

இப்படத்தின் டீசர், படத்தில் இடம்பெற்ற 'ஒரு மனம் விட்டுச் செல்லுதே...' பாடல் ஆகியவை வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றன. ஆனால் அதன் பிறகு எந்தத் தகவலும் இல்லாமல் படம் முடங்கியது.

தொடர்ந்து விக்ரம், கௌதம் மேனன் இருவரும் தங்கள் வெவ்வேறு படங்களில் பிசியாகினர். இந்நிலையில், இருவரும் இணைந்து பேசி இப்படத்தின் அடுத்தக்கட்ட பணிகளைத் தொடங்கியதாவும், டப்பிங் பணிகள் தொடங்கி நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகின.

தொடர்ந்து நேர்காணல் ஒன்றில் பேசிய கௌதம் மேனன், படத்தின் பணிகளை மீண்டும் தொடங்கியதாகவும், திரைப்படம் தியேட்டர்களில் வெளியாகும் நிலைக்கு முன்னேறிவிட்டதாகவும், ரிலீஸ் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருவதாகவும் தெரிவித்திருந்தார். மேலும்  VFX பணிகளை மேற்கொள்ள உள்ளதாவும் தானும் பட ரிலீசுக்கு ஆர்வமாகக் காத்திருப்பதாகவும் கௌதம் தெரிவித்திருந்தார்.

விரைவில் ரிலீஸ்

இந்நிலையில், ‘ஜான் வில் மீட் யூ சூன்’ எனக் குறிப்பிட்டு அப்டேட் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

முன்னதாக நடிகர் பார்த்திபனின் இறுதிக்கட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகின. எனினும் பட ரிலீஸ் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. 

ஏற்கெனவே துருவ நட்சத்திரம் படம் வரும் ஜனவரி மாதம் வெளியாகும் எனவும் தகவல்கள் வெளிவந்தன.

இதேபோல் முன்னதாக விக்ரமின் கோப்ரா படமும் சிறிது காலம் கிடப்பில் போடப்பட்டு சென்ற ஆண்டு இறுதியாக வெளியானது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: Prakash Raj Video : "காரி துப்பினாலும் கூட புத்திவரவில்லையே.. ஆஸ்கர் இல்லை என குமுறுகிறார்கள்" : தலையில் அடித்துக்கொண்ட பிரகாஷ்ராஜ்

தலைப்பு செய்திகள்

சூர்யாவின் விஸ்வநாத் & சன்ஸ்' திரைப்படத்தின் கதை இதுவா!
சூர்யாவின் விஸ்வநாத் & சன்ஸ்' திரைப்படத்தின் கதை இதுவா!
திரையரங்கிலும் ஓடிடியிலும் நாளை வெளியாகும் முக்கிய படங்கள், வெப் சீரிஸ்கள்
திரையரங்கிலும் ஓடிடியிலும் நாளை வெளியாகும் முக்கிய படங்கள், வெப் சீரிஸ்கள்
'துரந்தர்' உலக சாதனை... இந்த ஆண்டில் நெட்ஃப்ளிக்ஸில் அதிகம் பார்க்கப்பட்ட Non-English திரைப்படம்!
'துரந்தர்' உலக சாதனை... இந்த ஆண்டில் நெட்ஃப்ளிக்ஸில் அதிகம் பார்க்கப்பட்ட Non-English திரைப்படம்!
"கருத்து சுதந்திரத்திற்கு எல்லை உண்டு" – உதயநிதி கைது விவகாரத்தில் நடிகர் விஷால் கருத்து

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
Sekar Babu: ”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
Indias Best SUV: இங்க எஸ்யுவி-னாலே நாங்க தான்..! உள்ளூரில் கோலோச்சும் டாப் 5 கார் மாடல்கள் - விலையும், வசதிகளும்..
இங்க SUV-னாலே நாங்க தான்..! உள்ளூரில் கோலோச்சும் டாப் 5 கார் மாடல்கள் - விலையும், வசதிகளும்..
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
Embed widget