மேலும் அறிய

Dhoni Trending | ஆக.. இனி தோனிதான் 'தல'யா? அஜித் அறிக்கையால் ட்ரெண்டாகும் தோனி..

அஜித்தின் அறிக்கை ட்விட்டரில் தோனியை ட்ரெண்டாக்கி வருகிறது.

தல என்ற வார்த்தையை சொன்னால் முதலில் நினைவுக்கு வருபவர் அஜித். அதுவே ஸ்போர்ட்ஸ் பக்கம்  சென்றால் தல என்ற அன்புக்குள் வந்தார் தோனி. குறிப்பாக ஐபிஎல்-க்கு பிறகு தோனியை தல தல என கொண்டாடித் தீர்த்தனர் சென்னை ரசிகர்கள். தல என்ற செல்லப்பெயரை தோனியும் ரொம்பவே விரும்புவார். தன்னை தல தல என்று அழைக்கும்போது ஒரு வித அன்பை உணர்வதாகவும், அது தமிழ்நாட்டின் அன்பு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

பல சமயம் தோனியின் மனைவியே தல தல என தோனியைக் கொஞ்சும் வீடியோக்களும் வைரலாகியுள்ளன. ஆனாலும் இந்த தல பெயரால் ட்விட்டரில் சில சம்பவங்கள் நடப்பதும் உண்டு. தல தல என தோனியை அதிகம் புகழ்வதும், ஒரே தல அது தோனிதான் என சில ரசிகர்கள் பதிவிடுவதும் ரசிகர்கள் சண்டையை உண்டாக்கியது. தல என்றால் அது தோனி என சிலர் பதிவிடுவதும்,  தளபதி என்றால் அது முதலமைச்சர் ஸ்டாலின் தான் என சிலர் பதிவிடும் என ட்விட்டர் சில நேரங்களில் ரத்தக் களறி ஆகும். இது இப்படி இருக்க தல என்ற பட்டம் வேண்டாமென இன்று அறிக்கை விடுத்துள்ளார் அஜித்குமார். 

Dhoni Trending | ஆக.. இனி தோனிதான் 'தல'யா? அஜித் அறிக்கையால் ட்ரெண்டாகும் தோனி..

ரசிகர்களின் சோஷியல் மீடியா சண்டைக்கும் அஜித்தில் அறிக்கைக்கும் தொடர்பு இல்லை என்றாலும் அஜித்தின் அறிக்கை ட்விட்டரில் தோனியை ட்ரெண்டாக்கி வருகிறது. அஜித் தன் தல படத்தை துறந்ததால் இனி தமிழ்நாட்டின் தல தோனிதானா என பலரும் பதிவிட்டு வருகின்றனர். தல என்ற பட்டத்தை திறந்தாலும் அந்த வார்த்தையை என்றுமே நினைவூட்டுபவர் அஜித்தாகத்தான் இருப்பார் என சில ரசிகர்கள் பதிவிட்டும் வருகின்றனர்.

முன்னதாக  தல என்று அழைக்க வேண்டாமென அஜித்குமார் அறிக்கை விடுத்தார். அதில்

பெரும் மரியாதைக்குரிய ஊடக, பொது ஜன மற்றும் என் உண்மையான ரசிகர்களுக்கு,இனி வரும் காலங்களில் என்னை பற்றி எழுதும் போதோ, என்னை பற்றி குறிப்பிட்டு பேசும் போதோ என் இயற் பெயரான அஜித் குமார், மற்றும் அஜித் என்றோ அல்லது ஏ கே என்றோ குறிப்பிட்டால் போதுமானது. தல என்றோ வேறு ஏதாவது பட்ட பெயர்களையோ குறிப்பிட்டு அழைக்க வேண்டாம் என்று அன்போடு வேண்டுகோள் விடுக்கிறேன்.உங்கள் அனைவரின் ஆரோக்கியம், உள்ள உவகை, வெற்றி,மன அமைதி, மன நிறைவு உள்ளிட்ட சகலமும் கிடைக்க வாழ்த்துகிறேன் எனக் குறிப்பிட்டிருந்தார். 

காட்சி ஊடகத்துறையில் 7 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவம் கொண்டவர். சோஷியல் மீடியா இன்சார்ஜ், டிக்கர் இன்சார்ஜ், கன்டண்ட் ரைட்டர், கன்டண்ட் இன் சார்ஜ் என பல்வேறு பிரிவுகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர் / பணியாற்றி வருபவர். அனைத்து பிரிவு செய்திகளையும் திறம்பட கையாளக் கூடிய நபர். குறிப்பாக சினிமா ரிவியூ, டெக்னாலஜி, ஆட்டோமொபைல் பிரிவுகளை அதிகம் பின்பற்றி எழுதுபவர். தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் கதை, கவிதை, கட்டுரை என தொடர்ந்து எழுதி வருபவர்.
Read More

தலைப்பு செய்திகள்

முதலமைச்சருக்கு வேண்டுகோள் வைத்த நடிகர் நானி.. ரசிகர்களுடன் ‘The Paradise’ பார்க்க ஆசை!
முதலமைச்சருக்கு வேண்டுகோள் வைத்த நடிகர் நானி.. ரசிகர்களுடன் ‘The Paradise’ பார்க்க ஆசை!
Jailer 2 VS Om: ரஜினிக்காக ஒதுங்கிக் கொள்கிறாரா தனுஷ்? தள்ளிப்போகிறதா ஓம் ரிலீஸ்?
Jailer 2 VS Om: ரஜினிக்காக ஒதுங்கிக் கொள்கிறாரா தனுஷ்? தள்ளிப்போகிறதா ஓம் ரிலீஸ்?
செப்டம்பர் 25 திரையரங்குகளில் வெளியாகும் தமிழ் படங்கள்
செப்டம்பர் 25 திரையரங்குகளில் வெளியாகும் தமிழ் படங்கள்
சூர்யா நடிக்க இருந்த ‘கர்ணா’ படமா? ராகவா லாரன்ஸின் ‘மஹாவீர் கர்ணா’ அறிவிப்பால் ரசிகர்கள் குழப்பம்!
சூர்யா நடிக்க இருந்த ‘கர்ணா’ படமா? ராகவா லாரன்ஸின் ‘மஹாவீர் கர்ணா’ அறிவிப்பால் ரசிகர்கள் குழப்பம்!

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS ADMK : 5 லட்சம் நெல் மூட்டைகள் போச்சு.! சொல் புத்தியும் இல்ல.. சுய புத்தியும் இல்ல- TVK அரசை விளாசிய இபிஎஸ்
5 லட்சம் நெல் மூட்டைகள் போச்சு.! சொல் புத்தியும் இல்ல.. சுய புத்தியும் இல்ல- TVK அரசை விளாசிய இபிஎஸ்
Gem Veeramani : ‘சிக்கிய வீரமணி - சிக்கப்போகும் பெருந்தலைகள்’ அடுத்த கைது யாருடையது..?
‘சிக்கிய வீரமணி - சிக்கப்போகும் பெருந்தலைகள்’ அடுத்த கைது யாருடையது..?
தமிழ்நாட்டில் பரவும் உன்னிக் காய்ச்சல்: உடலில் இந்த புண்ணா? உயிருக்கே ஆபத்து!
தமிழ்நாட்டில் பரவும் உன்னிக் காய்ச்சல்: உடலில் இந்த புண்ணா? உயிருக்கே ஆபத்து!
ரோட்ல சும்மா ஜம்முனு போனுமா?அறிமுகமாகியது Honda CB 500 பைக்
ரோட்ல சும்மா ஜம்முனு போனுமா?அறிமுகமாகியது Honda CB 500 பைக்
Jailer 2 VS Om: ரஜினிக்காக ஒதுங்கிக் கொள்கிறாரா தனுஷ்? தள்ளிப்போகிறதா ஓம் ரிலீஸ்?
Jailer 2 VS Om: ரஜினிக்காக ஒதுங்கிக் கொள்கிறாரா தனுஷ்? தள்ளிப்போகிறதா ஓம் ரிலீஸ்?
ஒரே சார்ஜில் 145 கி.மீட்டர் மைலேஜ்.. அறிமுகமாகியது Honda QC3 இ ஸ்கூட்டர் - விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 145 கி.மீட்டர் மைலேஜ்.. அறிமுகமாகியது Honda QC3 இ ஸ்கூட்டர் - விலை எவ்ளோ?
Nirmalkumar: ”கேடுகெட்ட கட்சி திமுக” யார் அந்த பவர் செண்டர்? - ஜெம் வீரமணி வழக்கில் அமைச்சர் நிர்மல் குமார் காட்டம்
”கேடுகெட்ட கட்சி திமுக” யார் அந்த பவர் செண்டர்? - ஜெம் வீரமணி வழக்கில் அமைச்சர் நிர்மல் குமார் காட்டம்
Iran Vs America: '7 நாட்களில் ஹார்முஸை திறக்க தயார், ஆனால்...'; நிபந்தனையுடன் அமெரிக்காவிற்கு ஈரான் முன்மொழிவு
'7 நாட்களில் ஹார்முஸை திறக்க தயார், ஆனால்...'; நிபந்தனையுடன் அமெரிக்காவிற்கு ஈரான் முன்மொழிவு
Embed widget