மேலும் அறிய

Actor Dhanush: ரஜினி வெளியே.. தனுஷ் உள்ளே... வைரலான புகைப்படம்.. என்ன நடந்துச்சு தெரியுமா?

தனுஷ்  போயஸ் கார்டனில் வீடு ஒன்றை வாங்க கட்ட விரும்பினார். இதற்காக இடம் வாங்கி 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பூமி பூஜை நடைபெற்றது.

மகாசிவராத்திரி தினத்தன்று நடிகர் தனுஷ்  போயஸ் கார்டனில் கட்டிய புது வீட்டுக்கு குடியேறிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது. 

துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் தனுஷ். தொடர்ந்து காதல் கொண்டேன், புதுப்பேட்டை, யாரடி நீ மோகினி, பொல்லாதவன், ஆடுகளம், 3, அசுரன்,வடசென்னை, கர்ணன் என நடிப்பை அனைத்து தரப்பினரும் பாராட்டும் வகையிலான படங்களில் நடித்தார்.  நடிகர், பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர், இயக்குநர் என தமிழ் சினிமாவின் பன்முக கலைஞராக திகழும் தனுஷ், பாலிவுட், ஹாலிவுட் என எதையும் விட்டுவைக்காமல் தனது முத்திரையை பதித்துள்ளார். 

இதனிடையே 2004 ஆம் ஆண்டு ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை காதல் திருமணம் செய்து கொண்ட தனுஷ். 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் விவாகரத்து செய்வதாக அறிவித்தார். இந்த தம்பதியினருக்கு இரு மகன்கள் உள்ள நிலையில், தனுஷ் -ஐஸ்வர்யா இருவரும் குழந்தைகளிடம் மிகுந்த அன்பு காட்டி வருகின்றனர். இருவரது சமூக வலைத்தளப்பக்கத்திலும் மகன்களோடு இருக்கும் புகைப்படங்களை அடிக்கடி நாம் காணலாம். 

அப்படியான தனுஷ்  போயஸ் கார்டனில் வீடு ஒன்றை வாங்க கட்ட விரும்பினார். இதற்காக இடம் வாங்கி 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பூமி பூஜை நடைபெற்றது. இந்த பூமி பூஜையில் தனுஷ் -ஐஸ்வர்யா தம்பதியினர் சகிதம் கலந்து கொண்டனர். அதேசமயம் நடிகர் ரஜினிகாந்த், மனைவி லதாவுடன் பங்கேற்றார். இதன்  புகைப்படம் அன்றைய தேதியில் செம ட்ரெண்டானது. 

இதற்கிடையில் விவாகரத்துக்குப் பின் படங்களில் கவனம் செலுத்தி வரும் தனுஷ் நடிப்பில், நேற்று முன்தினம் (பிப்ரவரி 17) வாத்தி படம் வெளியானது. கலவையான விமர்சனங்களை பெற்றுள்ள இப்படம் அனைத்து இடங்களிலும் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கிறது. இதனிடையே கேப்டன் மில்லர் படத்தில் கவனம் செலுத்தி வரும் தனுஷ் தற்போது கெட்டப்பை மாற்றியுள்ளார். நீண்ட தாடியுடன் அவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் அனைவரையும் கவர்ந்தது. 

இந்நிலையில், போயஸ் கார்டனில் உள்ள வீட்டில் நடிகர் தனுஷ் குடும்பத்துடன் குடியேறியுள்ளார். பல வசதிகளுடன் கூடிய இந்த வீட்டைப் பற்றி இயக்குநர் சுப்பிரமணிய சிவா ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “தம்பி தனுஷின் புதிய வீடு கோவில் உணர்வு எனக்கு... வாழும் போதே தாய்,தந்தையை சொர்கத்தில் வாழ வைக்கும் பிள்ளைகள், தெய்வமாக உணர படுகிறார்கள்... மேலும், தன் பிள்ளைகளுக்கும், மற்றவர்களுக்கும், எடுத்துகாட்டாகவும், உதாரணமாகவும், உயர்ந்து விடுகிறார்கள்.. வாழ்க தம்பி” என கூறியுள்ளார். அதேசமயம் ரஜினி குடும்பத்தினருடன் பெங்களூரு சென்றுள்ளார். என்னதான் இருந்தாலும் ரஜினியும் - தனுஷூம் பங்கேற்ற நிகழ்ச்சி என பழைய புகைப்படத்தை ரசிகர்கள் வெளியிட்டுள்ளனர். 

தலைப்பு செய்திகள்

Jailer 2:
Jailer 2: "என்றைக்கும் ஒரே தலைவன்.." ஜெயிலர் 2 ட்ரெயிலரை கொண்டாடும் ரஜினி ரசிகர்கள்!
அதிமுக ஆட்சியில் கண்ணீர்...தவெக ஆட்சியில் அங்கீகாரம்...நெகிழ்ச்சியில் புஷ்பவனம் குப்புசாமி
அதிமுக ஆட்சியில் கண்ணீர்...தவெக ஆட்சியில் அங்கீகாரம்...நெகிழ்ச்சியில் புஷ்பவனம் குப்புசாமி
Vijay Sethupathi:
Vijay Sethupathi: "நான் சந்தோஷமா இருந்தால் காய்ச்சல் வரும்.." பத்தா வெற்றி விழாவில் விஜய் சேதுபதி
"என் பாடல்கள் சமுதாயத்திற்கு தீங்கா?" - விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்து ரூ.5 லட்சம் நன்கொடை அளித்த அசல் கோலார்!

வீடியோ

கேப்டனை கொல்ல சதி மிகப்பெரிய கட்டிடம் டார்கெட் கோ பைலட் பகீர் வாக்குமூலம்
Noida supernova suicide | 41வது மாடியில் இருந்து தற்கொலை! 28 வயது இளைஞர் பகீர்! விசாரணையில் அதிர்ச்சி தகவல்
TVK MLA vs Cong MP | காங்.MP-தவெக MLA மோதல்! மெழுகுவர்த்தியை தட்டிவிட்ட MLA.. அமைச்சர் முன்பே வாக்குவாதம்
Toor Dal issue :துவரம் பருப்பில் நடந்த மோசடி?அரசு கஜானாவிற்கு வந்த 187 கோடி..சாட்டையை சுழற்றிய விஜய்
Sivakarthikeyan Politics : CM விஜய் ரூட்டில் SK..ரசிகர் மன்றம் டூ நற்பணி இயக்கம்! குஷியில் ரசிகர்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ABP Nadu Exclusive:
ABP Nadu Exclusive: "தவெக அரசுதான் தமிழ் உணர்வோடு செயல்படுகிறது.. கேட்காமலே பதவி.." புஷ்பவனம் குப்புசாமி ஏபிபி நாடுக்கு பிரத்யேக பேட்டி
"தொட்டு தொட்டுப் பேசும் சுல்தானா... இயல் இசைக்கு இனி நீதானா.." தவெக ஆட்சியில் புஷ்பவனம் குப்புசாமிக்கு முக்கிய பதவி!
Holiday: குட்நியூஸ்.. நாளை சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிப்பு.. யார் யாருக்கு தெரியுமா?
Holiday: குட்நியூஸ்.. நாளை சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிப்பு.. யார் யாருக்கு தெரியுமா?
GOLD LOAN : அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
SC On CEC: “நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
“நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
Maruti Suzuki Alto K10: நடுத்தர குடும்பங்களின் முதல் தேர்வு.! ரூ.3.70 லட்சத்தில் 33கிமீ மைலேஜ்.! புதிய நவீன மாருதி ஆல்டோ K10
நடுத்தர குடும்பங்களின் முதல் தேர்வு.! ரூ.3.70 லட்சத்தில் 33கிமீ மைலேஜ்.! புதிய நவீன மாருதி ஆல்டோ K10
Russia Vs Ukraine: கருங்கடலில் இந்தியர்கள் இருந்த கப்பலை தாக்கிய ரஷ்ய ட்ரோன்கள்; கேப்டன் உயிரிழந்ததாக கூறும் ஜெலன்ஸ்கி
கருங்கடலில் இந்தியர்கள் இருந்த கப்பலை தாக்கிய ரஷ்ய ட்ரோன்கள்; கேப்டன் உயிரிழந்ததாக கூறும் ஜெலன்ஸ்கி
Jailer 2:
Jailer 2: "என்றைக்கும் ஒரே தலைவன்.." ஜெயிலர் 2 ட்ரெயிலரை கொண்டாடும் ரஜினி ரசிகர்கள்!
Embed widget