Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
தனுஷ் நடித்து வரும் குபேரா படத்தில் நாயகியாக நடிக்கும் ராஷ்மிகா மந்தனாவின் ஃபர்ஸ்ட் லுக் வரும் ஜூலை 5 ஆம் தேதி வெளியாக இருக்கிறது

குபேரா
நடிகர் தனுஷ் தற்போது சேகர் கம்முலா இயக்கத்தில் குபேரா படத்தில் நடித்து வருகிறார். தமிழ் , இந்தி மற்றும் ஹாலிவுட் படங்களில் நடித்த தனுஷ் இப்படத்தின் மூலமாக தெலுங்கு சினிமாவில் அடியெடுத்து வைக்க இருக்கிறார். ஸ்ரீ வெங்கடேஸ்வர ஃபிலிம்ஸ் இந்தப் படத்தை தயாரித்து வருகிறது . இப்படத்தில் நாகர்ஜுனா , ராஷ்மிகா மந்தனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். ஹைதராபாத் , மும்பை உள்ளிட்ட நகரங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது. முன்னதாக தனுஷ் மற்றும் நாகர்ஜுனாவின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானதைத் தொடர்ந்து தற்போது நடிகை ராஷ்மிகா மந்தவாவின் ஃபர்ஸ்க் குறித்த தகவலை வெளியிட்டுள்ளது படக்குழு
ராஷ்மிகா மந்தனா ஃபர்ஸ்ட் லுக்
Her character intrigues with every layer!
Meet @iamRashmika from #SekharKammulasKubera on July 5th 🔥@dhanushkraja King @iamnagarjuna @sekharkammula @jimSarbh @Daliptahil @ThisIsDSP @SVCLLP @amigoscreation @AdityaMusic @KuberaTheMovie #Kubera pic.twitter.com/atB7yGVlSR— Kubera Movie (@KuberaTheMovie) July 2, 2024
தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. கடந்த ஆண்டு வெளியான அனிமல் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இந்தி ரசிகர்களிடமும் பெரும் செல்வாக்கைப் பெற்றுள்ளார். அடுத்தபடியாக ஏ.ஆர் முருகதாஸ் இந்தியில் இயக்கும் சிகந்தர் படத்தில் சல்மான் கானுக்கு ஜோடியாக இணைய இருக்கிறார். தனுஷூடன் முதல் முறையாக குபேரா படத்தில் இணைந்து நடிக்கிறார் ராஷ்மிகா. இப்படத்தில் இருவருக்குமான கெமிஸ்ட்ரியை பார்க்க ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கிறார்கள். குபேரா படத்தில் ராஷ்மிகா மந்தனாவின் ஃபர்ஸ்ட் லுக் வரும் ஜூலை 5 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு தகவல் வெளியிட்டுள்ளது.
ராயன்
தனுஷின் 50வது படமாக உருவாகியுள்ள ராயன் படம் வரும் ஜூலை 26 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இப்படத்தை தனுஷ் இயக்கி நடித்துள்ளார். செல்வராகவன் , எஸ்.ஜே சூர்யா , பிரகாஷ் ராஜ் , துஷாரா விஜயன் , அபர்னா பாலமுரளி, வரலட்சுமி சரத்குமார் , சரவணன் , சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளார்கள். ஏ.ஆர் ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளது . வடசென்னையை பகுதியில் நடக்கும் இப்படம் மூன்று சகோதரர்களின் கதையை மையைமாக கொண்டிருக்கிறது. தனுஷ் , சந்தீப் கிஷன் , காளிதாஸ் ஜெயராம் ஆகியோ சகோதரர்களாக நடித்துள்ள நிலையில் இவர்களின் தங்கையாக துஷாரா விஜயன் நடித்துள்ளார்.

