மேலும் அறிய

தைரியம் இருந்தால் நேருக்கு நேர் வந்து மோது..மேனேஜரை பேசவிட்டு வேடிக்கைப் பார்த்த தனுஷ்

நடிகர் தனுஷ் இயக்கி நடித்துள்ள இட்லி கடை படத்தின் இசை வெளியீட்டு தற்போது சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்று வருகிறது

இட்லி கடை ஆடியோ லாஞ்ச்

டான் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் தனுஷ் இயக்கி நடித்துள்ள இட்லி கடை படம் வரும் அக்டோபர் 1 ஆம் தேதி திரையரங்கில் வெளியாக இருக்கிறது. ராஜ்கிரண் , நித்யா மேனன் , அருண் விஜய் , ஷாலினி பாண்டே , சமுத்திரகனி , சத்யராஜ் ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இட்லி கடை படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்வில் நடிகர் தனுஷின் மேலாளர் ஷ்ரேயஸ் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

தைரியம் இருந்தால் நேருக்கு நேர் மோது 

" நீங்க எல்லா மொழியிலும் படம் பண்ணிட்டீங்க. நடிச்சா மட்டும் போதாது கொஞ்சம் ஐடியும் கத்துக்கனும். அவரு தலைவருக்கு அவர் சொன்னது தான் . ஒருத்தன் பத்து பேரை எதிர்த்தா அவன் வீரன். பத்து பேர் சேர்ந்து ஒருத்தனை எதிர்த்தா அவன் தலைவன். பிரபலமாக ரென்டே வழிதான் இருக்கு. ஒன்று ரத்தம் சிந்தி வியர்வை சிந்தி டாப்பில் போய் உட்காரனும். இன்னொன்று டாப்பில் இருப்பவர்களைப் அடிக்கனும் . உங்களால் வளர்ந்தவர்கள்., நீங்கள் வாழ்க்கை கொடுத்தவர்கள் எல்லாம் தைரியமாக நேருக்கு நேர் மோதினால் ஓக்கே. அதைவிட்டு ஒரு கம்ப்யூட்டர் பின்னால் உட்கார்ந்து கொண்டு மோதக்கூடாது.  தலைவர் சொன்னது மாதிரி தனுஷ் நீங்க நல்லவரா இருங்க ரொம்ப நல்லவரா இருக்காதீங்க." 

இட்லி கடை படத்தில் நாயகியாக நடித்துள்ள நித்யா மேனன் பேசியபோது " இந்த படம் எனக்கு ஒரு அழகான பயணமாக இருந்தது. நான் ஒரே நேரத்தில் பரோட்டா கடையிலும்(தலைவன் தலைவி) இட்லி கடையிலும் மாறி மாறி நடித்தேன். இந்த படம் முழுக்க உணர்வுகளால் நிறைஞ்சிருக்கு. இதில் எனக்கு ஒரு வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி தனுஷ்' என பேசினார்

இட்லி கடை பற்றி நடிகர் சத்யராஜ்

இட்லி கடை படம் பற்றி நடிகர் சத்யராஜ் பேசுகையில் " இது ஒரு அர்த்தமுள்ள படம். படத்தின் க்ளைமேக்ஸ் காட்சி எல்லாருக்கும் பிடிக்கும். நான் எதிர்பார்த்ததை விட என்னுடைய கதாபாத்திரம் நன்றாக வந்திருக்கிறது. தனுஷின் சிரிப்பு எனக்கு ரொம்பவும் பிடிக்கும் " என கூறினார். 

 

 

He covers Tamil cinema, film and OTT reviews, entertainment news, and key developments across the film industry for ABP Nadu. He explores film criticism, storytelling, performances, and the evolving landscape of cinema and streaming platforms. He has produced and conducted interviews with film-industry personalities, including director Thiyagarajan Kumararaja and playback singer Chinmayi. Beyond journalism, he pursues his passion for writing, filmmaking, and creative storytelling. He also co-authored the Tamil non-fiction book Noruṅgum Puvi Arangal (Breaking Planetary Boundaries).

Read More

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

கோவா சர்வதேச திரைப்பட விழாவில் தேர்வான 'அறிவு' திரைப்படம்
கோவா சர்வதேச திரைப்பட விழாவில் தேர்வான 'அறிவு' திரைப்படம்
கூகுள் குட்டப்பா இயக்குநரின் அடுத்த படம் பத்து நாள் ராஜா! விரைவில் திரையரங்கில்
கூகுள் குட்டப்பா இயக்குநரின் அடுத்த படம் பத்து நாள் ராஜா! விரைவில் திரையரங்கில்
பிஷ்னோய் கும்பல் அச்சுறுத்தல்.. இரண்டு பாலிவுட் நடிகர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு!
பிஷ்னோய் கும்பல் அச்சுறுத்தல்.. இரண்டு பாலிவுட் நடிகர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு!
அனிருத் - காவ்யா திருமணம்.. பெரியார் சொன்ன சுயமரியாதை திருமணத்தின் பின்னணி?
அனிருத் - காவ்யா திருமணம்.. பெரியார் சொன்ன சுயமரியாதை திருமணத்தின் பின்னணி?

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Cyclone Akwan: ஆந்திரா பக்கம் திரும்பும் அக்வான் புயல்! சென்னைக்கு ஆரஞ்ச் அலர்ட்! எந்தெந்த மாவட்டங்களில் கனமழை?
Cyclone Akwan: ஆந்திரா பக்கம் திரும்பும் அக்வான் புயல்! சென்னைக்கு ஆரஞ்ச் அலர்ட்! எந்தெந்த மாவட்டங்களில் கனமழை?
திருநெல்வேலி, தென்காசி: நவம்பர் 17 அன்று மின்தடை! உங்கள் பகுதி பாதிக்கப்படுமா?
திருநெல்வேலி, தென்காசி: நவம்பர் 17 அன்று மின்தடை! உங்கள் பகுதி பாதிக்கப்படுமா?
இறுதிப்போட்டியில் நியூசி. அணியை வீழ்த்தி தொடரை வென்று இந்திய கிரிக்கெட் அணி அசத்தல்!
இறுதிப்போட்டியில் நியூசி. அணியை வீழ்த்தி தொடரை வென்று இந்திய கிரிக்கெட் அணி அசத்தல்!
Sengottaiyan: எதிர்பாராத ட்விஸ்ட்! தவெகவில் இணையும் திமுக முக்கிய பிரமுகர்? போட்டுடைத்த செங்கோட்டையன்!
Sengottaiyan: எதிர்பாராத ட்விஸ்ட்! தவெகவில் இணையும் திமுக முக்கிய பிரமுகர்? போட்டுடைத்த செங்கோட்டையன்!
CTR Nirmal Kumar:
CTR Nirmal Kumar: "உரிமையைப் பெற்றுத்தருவோம்.." மேகமலை, வருசநாடு மக்களை நேரில் சந்தித்த அமைச்சர் CTR நிர்மல்குமார்
CM Vijay: காத்திருக்கும் 5 மாநில தேர்தல்; விஜய்யை களத்திற்கு கூப்பிடும் காங்கிரஸ்? தளபதியின் முடிவு என்ன?
CM Vijay: காத்திருக்கும் 5 மாநில தேர்தல்; விஜய்யை களத்திற்கு கூப்பிடும் காங்கிரஸ்? தளபதியின் முடிவு என்ன?
Kanda Sashti: கந்த சஷ்டி விரதம் இருந்தவர்கள் கவனத்திற்கு! சூரசம்ஹாரத்திற்குப் பிறகு செய்ய வேண்டியவை என்ன?
கந்த சஷ்டி விரதம் இருந்தவர்கள் கவனத்திற்கு! சூரசம்ஹாரத்திற்குப் பிறகு செய்ய வேண்டியவை என்ன?
தனிஷ்க் கொள்ளை: 4வது நாளாக தேடுதல்; முக்கிய குற்றவாளி நிஷாந்தை நெருங்கியது காவல்துறை!
தனிஷ்க் கொள்ளை: 4வது நாளாக தேடுதல்; முக்கிய குற்றவாளி நிஷாந்தை நெருங்கியது காவல்துறை!
Embed widget