Naane Varuven: நானே வருவேன் கொண்டாட்டம் ...அரசுப் பேருந்தை மறித்து அட்டகாசம் செய்த தனுஷ் ரசிகர்கள்...!
பல இடங்களில் காலை 4 மணி காட்சிகள் இல்லாமல் 8 மணிக்கு தான் முதல் காட்சி திரையிடப்பட்ட நிலையில், சில ஊர்களில் மட்டும் சிறப்பு காட்சிகள் காலை 6 மணிக்கே திரையிடப்பட்டது.

நடிகர் தனுஷ் நடித்துள்ள நானே வருவேன் படம் வெளியானதை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர்.
துள்ளுவது இளமை, காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன ஆகிய படங்களை தொடர்ந்து செல்வராகவன் - தனுஷ் கூட்டணி 5வது முறையாக இணைந்துள்ள படம் “நானே வருவேன்”. கிட்டதட்ட 12 ஆண்டுகளுக்குப் பின் இந்த கூட்டணியுடன் யுவனின் இசையும் இணைந்துள்ளதால் ரசிகர்களுக்கு பட அறிவிப்பு குறித்து வெளியாகும் போதே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. கலைப்புலி எஸ். தாணு தயாரித்துள்ள இந்தப் படத்தின் நாயகியாக இந்துஜா நடித்துள்ள நிலையில் படம் இன்று தியேட்டர்களில் வெளியானது.
View this post on Instagram
Madurai #NaaneVaruvean FDFS 💯 Morattu kapraaaa💥🔥
— Dhanushian Dhana (@DhanushianDhan2) September 29, 2022
Bus Mariyal @dhanushkraja Thalaivaaaa 😁😁😁
Mmala Tharamana sambavam 🎉@selvaraghavan @theVcreations #PS1 pic.twitter.com/oHTzXuezQM





















