பொளந்துகட்டிய ஃபெஞ்சல் புயல்: நடிகர் சிவகார்த்திகேயன் நிதியுதவி! நன்றி தெரிவித்த துணை முதல்வர் - எவ்வளவு தெரியுமா?
ஃபெஞ்சல் புயல் மீட்பு பணிக்காக நடிகர் சிவகார்த்திகேயன் ரூ.10 லட்சத்துக்கான காசோலையை துணை முதல்வரிடம் வழங்கினார்.
ஃபெஞ்சல் புயல் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரிடன் பொது நிவாரன நிதிக்கு நடிகர் சிவாகார்த்திகேயன் நிதியுதவி வழங்கியுள்ளார். அதற்கு துணை முதல்வர் உதயநிதி நன்றி தெரிவித்துள்ளார்.
ஃபெஞ்சல் புயல் - கனமழையைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வரும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்குத் துணை நிற்கும் விதமாக, ‘முதலமைச்சரின் பொது நிவாரண நிதி’-க்கு திரைப்பட நடிகர் சகோதரர் @Siva_Kartikeyan, ரூ.10 லட்சத்துக்கான காசோலையை இன்று நம்மிடம் வழங்கினார். அவருக்கு என்… pic.twitter.com/YIu9bMrFmH
— Udhay (@Udhaystalin) December 4, 2024
இதுகுறித்து துணை முதலமைச்சர் உதயநிதி தனது எக்ஸ் தளத்தில் “ஃபெஞ்சல் புயல் - கனமழையைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வரும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்குத் துணை நிற்கும் விதமாக, ‘முதலமைச்சரின் பொது நிவாரண நிதி’-க்கு திரைப்பட நடிகர் சகோதரர் சிவகார்த்திகேயன் ரூ.10 லட்சத்துக்கான காசோலையை இன்று நம்மிடம் வழங்கினார். அவருக்கு என் அன்பும், நன்றியும்” எனத் தெரிவித்தார்.
ஃபெஞ்சல் புயல் பல்வேறு மாவட்டங்களில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிகபட்சமாக விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, உள்ளிட்ட மாவட்டங்கள் சேதமடைந்துள்ளன. தமிழக அரசு முகாம்கள் அமைத்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு அத்தியாவசிய தேவைகள், மருத்துவ தேவைகளை வழங்கி வருகிறது.
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவாகார்த்திகேயன் நடிப்பில் உருவான அமரன் திரைப்படம் சமீபத்தில் தியேட்டரில் ரிலீசாகி பெரும் வரவேற்பை பெற்றது. போரில் வீரமரணம் அடைந்த மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கை வரலாறு படமாக எடுக்கப்பட்டிருந்தது.
இந்த படம் அரசியல் கட்சி தலைவர்கள் முதல் சினிமா கலைஞர்கள் வரை அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்திருந்தது. இதற்காக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் படக்குழுவை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.