புதுமுக நடிகர் தேவ் நடிக்கும் யோலோ..கவனமீர்க்கும் டிரெய்லர்...
மகேஷ் செல்வராஜ் தயாரிப்பில், S. சாம் இயக்கத்தில், புதுமுகம் தேவ் நாயகனாக நடிக்க, “யோலோ” படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீடு, கோலாகலமாக நடைபெற்றது.

யோலோ பட டிரெய்லர் வெளியீட்டு விழா
Generous Entertainment சார்பில் கோகுல்
இப்படத்தை வெளியிடும் உரிமையை Generous Entertainment நிறுவனத்திற்குத் தந்ததற்கு நன்றி. மகேஷ் சார் இப்படத்தை தயாரித்து உழைத்ததைப் பற்றிப் பேசினார். புது முகங்களை நம்பி வாய்ப்பு தந்த இந்த குழுவிற்கு பத்திரிக்கையாளர்கள் முழு ஆதரவு தர வேண்டும். தேவ் சினிமாவில் பல வருடங்களாக இருக்கிறார். இப்போது தான் ஹீரோவாக மாறியுள்ளார். மிகச்சிறப்பாகச் செய்துள்ளார். அனைவரும் படத்திற்கு ஆதரவு தாருங்கள். நன்றி.
நடிகர் ஆகாஷ் பிரேம்
படத்தில் மதன் கேரக்டருக்கு நான் சரியாக இருப்பேன் என்று நம்பி என்னை அழைத்த உதவி இயக்குநர் ஸ்டீபன் சாருக்கு நன்றி. அவர் வார்த்தையை நம்பி எனக்கு வாய்ப்பு தந்த சாம் சார், மகேஷ் சாருக்கு நன்றி. மகேஷ் சார் மிகச்சிறந்த தயாரிப்பாளராக வருவார். ஒரு வருடத்திற்கு முன் இப்படத்திற்குப் பூஜை போட்டோம். இப்போது படம் முடிந்து வந்துவிட்டது. இந்த திட்டமிடல் சினிமாவில் மிகப்பெரிய விஷயம். இந்தப்படத்தில் நடித்த அனைவருக்கும் என் நன்றிகள். எங்களை அழகாக காட்டிய சூரஜ் சாருக்கு நன்றி. இப்படத்தில் நான் ஒரு பாடலும் பாடியுள்ளேன். அந்த வாய்ப்பு தந்த இசையமைப்பாளர் சகிஷ்னா சேவியர் சாருக்கு நன்றி. வயலண்ட் படங்களுக்கு மத்தியில் உங்களை ஆச்சரியப்படுத்தும் படமாக இது இருக்கும். அனைவரும் இப்படத்திற்கு ஆதரவு தாருங்கள். நன்றி.
நடிகர் படவா கோபி
2009 லேயே என்னை நடிகனாகச் செதுக்கி இப்போது ஸ்கூல் பஸ் படத்திலும் வாய்ப்பு தந்த சமுத்திரக்கனி சாருக்கு நன்றி. இந்தப்படத்தில் நான் முதலில் காமெடி தான் செய்வதாக இருந்தேன், ஆனால் சாம் தான் என்னை ஹீரோயின் அப்பாவாக நடிக்க வைத்தார். என்னுடைய மகள் 5 வயதில் இருந்தபோது தவறிவிட்டார். ஆனால் டீனேஜில் மகள் என்ன செய்வார் என்பதை இப்படம் மூலம் அனுபவித்தேன். இப்படத்தின் ஷூட் அவ்வளவு ஜாலியாக இருந்தது. சாம், ராம் இருவரும் ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து பார்த்து செய்தார்கள். செப்டம்பர் 12 படம் வருகிறது – ஒரு இளமை கொண்டாட்டம். அனைவரும் பார்த்து ரசிக்கவும். நன்றி.
நடிகை தேவிகா
நான் தமிழில் செய்யும் முதல் படம் யோலோ. இதற்கு முன் ஒரு சீரிஸ் செய்திருந்தேன். இப்பட வாய்ப்பு தந்த சாம் சாருக்கு நன்றி. சமுத்திரக்கனி சாரின் தெலுங்கு படத்தில் நடித்த போது, சாம் சார் பார்த்து இந்த வாய்ப்பை தந்தார். இப்படத்தில் என்னுடன் நடித்த அனைவருக்கும் நன்றி. படம் மிக அருமையாக வந்துள்ளது. செப்டம்பர் 12 எல்லோரும் தியேட்டரில் படம் பாருங்கள். நன்றி.
தயாரிப்பாளர் K.V. துரை
நாங்கள் Access Film Factory-யில் நிறைய புது திறமையாளர்களை அறிமுகப்படுத்தியுள்ளோம். எங்கள் குழுவிலிருந்து ஒரு திறமையாளரான தேவ்வை இப்படத்தில் நடிகராக அறிமுகப்படுத்தியதற்கு நன்றி. டிரெய்லர் அற்புதமாக உள்ளது. அனைவருக்கும் வாழ்த்துகள்.
இயக்குநர் சதீஷ்
படக்குழு அனைவருமே இளமைத் துள்ளலுடன் இருக்கிறார்கள். படம் பார்க்க மிக நன்றாக உள்ளது. சாம் மிகச்சிறப்பாக உழைத்துள்ளார். தேவ் எனக்குத் தம்பி மாதிரி. அவன் ஹீரோவாகியிருப்பது மகிழ்ச்சி. சிறப்பாக வர வேண்டும். வாழ்த்துகள்.
இயக்குநர் ARK சரவணன்
டிரெய்லர் நன்றாக உள்ளது. அதில் ஒன்றை மறைத்து வைத்துள்ளனர், அது படத்தில் சர்ப்ரைஸ் ஆக இருக்கும். தேவுக்காக தான் வந்துள்ளேன். அவரிடம் தான் முதலில் மரகதநாணயம் கதை சொன்னேன். Access Film Factory-யில் அவர் நிறைய உழைத்துள்ளார். இப்போது ஹீரோவாகியிருப்பது மகிழ்ச்சி. இந்த நேரத்தில் டெல்லி சார் இருந்திருந்தால் சந்தோஷப்பட்டிருப்பார். தேவ் பெரிய ஹீரோவாக வர வாழ்த்துக்கள்.
நடிகர் தேவ்
இந்த வாய்ப்பு வரக் காரணமாயிருந்த அரவிந்த் பிரதருக்கு நன்றி. அவர் தான் இப்படத்திற்கு ஆள் தேடுகிறார்கள் என என்னை அனுப்பினார். கதை கேட்டேன், ரொம்ப பிடித்தது. என்னைத் தேர்ந்தெடுப்பார்களா என சந்தேகம் இருந்தது. ஆனால் தயாரிப்பாளர் போன் செய்து, “புதுமுகம் தான் வேண்டும், நீங்கள் பொருத்தம்” என்று சொன்னார். மகிழ்ச்சி. தயாரிப்பாளர் மொத்த டீமுக்கும் சுதந்திரம் தந்தார். சாம் சார் பக்காவாக திட்டமிட்டு உழைத்தார். என்னுடன் நடித்த அனைவருக்கும் நன்றி. என்னை இப்படிப் பார்க்க ஆசைப்பட்ட என் அப்பா, அம்மா, மாமா மூவரும் இல்லை. அவர்களின் ஆசிர்வாதத்தில்தான் இது நடந்துள்ளது. செப்டம்பர் 12 யோலோ திரைக்கு வருகிறது. அனைவரும் பார்த்து ஆதரவு தாருங்கள். நன்றி.





















