மேலும் அறிய
Advertisement
Cuckoo Movie Actor Elangovan: வீடு இல்லாமல் பிளாட்ஃபார்மில் தங்கி இருக்கும் குக்கூ பட நடிகர்! வறுமையில் வாடுவதாக கண்ணீர்!
Cuckoo Movie Actor Elangovan: குக்கூ படத்தில் பார்வையற்றவராக நடித்த இளங்கோ, பெற்றோர் வீட்டை விட்டு விரட்டியதால், சாலையோரம் பிளாட்ஃபார்மில் தங்கி இருப்பதாக கவலையுடன் தெரிவித்துள்ளார்.
Cuckoo Movie Actor Elangovan: ராஜூ முருகன் இயக்கத்தில் வெளிவந்த குக்கூ படத்தில் பார்வையற்றவராக நடித்த இளங்கோ, பெற்றோர் வீட்டை விட்டு விரட்டியதால், சாலையோரம் பிளாட்ஃபார்மில் தங்கி இருப்பதாக கவலையுடன் தெரிவித்துள்ளார்.
குக்கூ பட நடிகர்:
அட்டகத்தி தினேஷ் நடித்த குக்கூ படம் 2014ம் ஆண்டு ரிலீசானது. பார்வையாளர்களின் உணர்வுகளையும், அவர்களின் வலியையும், காதலையும் கூறும் படமாக எடுக்கப்பட்ட குக்கூ ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார். படத்தில் அட்டகத்தி தினேஷ் மாளவிகா நாயர், ஆடுகளம் முருகதாஸ், சோமசுந்தரம், இளங்கோ, நந்தினி என பலர் நடித்திருந்தனர். குக்கூ படம் விமர்சன ரீதியாக மட்டும் இல்லாமல் பாடலிலும் நல்ல வரவேற்பை பெற்றது.
படத்தில் அட்டக்கத்தி தினேஷ்க்கு நண்பனாக இளங்கோவன் நடித்திருப்பார். இவர் படம் முழுக்க தினேஷுடன் நடித்து கவனம் ஈர்த்தவர். படத்தில் ஹீரோவான அட்டகத்தி தினேஷ் மட்டுமே பார்வையற்றவராக நடித்திருந்தார். அவருடன் நடித்திருந்த இளங்கோவன் நிஜத்தில் பார்வையாற்ற மாற்றுத்திறனாளி. குக்கூ படத்திற்கு பிறகு இளங்கோவன் சென்ற இடம் தெரியாமல் மறைந்தார்.
ஃப்ளாட்பாரம்:
இந்த நிலையில் இளங்கோவன் சென்னையில் வீடு இல்லாமல் பிளாட்ஃபாரத்தில் தங்கி பாட்டுப்பாடி வாழ்ந்து வருவதாக சமூக வலைதளங்களில் பகிரப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஊடகம் ஒன்றிற்கு இளங்கோவன் பகிர்ந்த வீடியோ பார்வையாளர்களை கண்கலங்க வைத்துள்ளது. அதில் பேசிய இளங்கோவன், “கண் தெரியாததால் தண்டச்சோறு சாப்பிடுவதாக கூறி பெற்றோர் திட்டினர். அதனால் 2019ம் ஆண்டு வீட்டை விட்டு வெளியேறினேன்.
குக்கூ படத்தில் நடித்த பிறகு வேறு எந்த படத்திலும் வாய்ப்பு கிடைக்கவில்லை. எனக்கு கண்பார்வை இல்லாததால், வாய்ப்பு தேடி சென்று நடிக்க முடியவில்லை. அதனால், வழக்கம் போல் பாட்டு பாடி வாழக்கையை நடிக்க முடிவெடுத்துள்ளேன். கொரோனா ஊடரங்கில் அதிகமாக கஷ்டபட்டு விட்டேன். லாக்டவுனில் பணம் கிடைக்காததால், ஒரு வேளைக்கு சாப்பாட்டுக்கு கஷ்டப்பட்டதுடன், ரூம் வாடகை கூட கொடுக்க முடியாமல் தவித்தேன். அதனால் வாடகை ரூமில் இருந்து வெளியேறி, பிளாட்ஃபார்மில் தங்கினேன். எனது செலவுக்கு பாட்டுப்பாடி பிச்சை எடுத்து வருகிறேன். சுரங்கப்பாதையில் தூங்குகிறேன்.
நான் பாட்டுப்பாடுவதால் சிலர் வேண்டுமென வந்து வம்பிழுத்து அடிப்பார்கள். எனக்கு என தனி வீடு இல்லாததால், எல்லாரும் சண்டைக்கு வருகின்றனர். கண்பார்வை இல்லை என்பதால் அடிப்பார்கள்” என உருக்கமாக கூறியுள்ளார். இளங்கோவனின் இந்த வீடியோவை பார்த்த பலரும், அவரது வாழ்வில் மாற்றம் ஏற்பட வேண்டும் என கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
மேலும் படிக்க: Neeya Naana: ”மதங்களை கடந்த மக்கள் ஒற்றுமை” .. நீயா, நானாவில் நடந்த நெகிழ்ச்சியான விஷயம்..!
சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் பொழுதுபோக்கு செய்திகளைத் (Tamil Entertainment News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
திரை விமர்சனம்
பொழுதுபோக்கு
கோவை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion