Thug Life: 20 ஆண்டுகளுக்குப் பிறகு கமலுடன் கை கோர்க்கும் நடிகை.. தக் லைஃப் பட அப்டேட்..!
மணிரத்னம் இயக்கும் தக் லைஃப் படத்தில் இருபது ஆண்டுகளுக்குப் பிறகு கமல்ஹாசனுடன் கைகோர்க்க இருக்கிறார் நடிகை அபிராமி
தக் லைஃப்
கமல்ஹாசனின் 234 ஆவது படத்தை இயக்குநர் மணிரத்னம் இயக்க இருக்கிறார். 1987 ஆம் ஆண்டு வெளியான நாயகன் படத்தைத் தொடர்ந்து கிட்டதட்ட 35 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இந்தப் படத்தில் இணைகிறது இந்த கூட்டணி. துல்கர் சல்மான், த்ரிஷா, ஜெயம் ரவி உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நடிக்க இருப்பதாக படக்குழு தகவல் வெளியிட்டது . ஏ ஆர் ரஹ்மான் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். தக் லைஃப் படத்தின் டைட்டில் வீடியோ சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் சிறப்பான வரவேற்பைப் பெற்றது.
A NEW NAME, A NEW HISTORY!#thuglife
— Raaj Kamal Films International (@RKFI) November 6, 2023
➡️https://t.co/f2s709GhTC#KH234 #Ulaganayagan #KamalHaasan #HBDKamalSir #HBDUlaganayagan @ikamalhaasan #ManiRatnam @arrahman #Mahendran @bagapath @actor_jayamravi @trishtrashers @dulQuer @MShenbagamoort3 @RKFI @MadrasTalkies_… pic.twitter.com/zuAGZFtC76
20 ஆண்டுகளுக்கு கமலுடன் இணையும் அபிராமி
இந்தப் படத்தில் நடிக்கும் பிற நடிகர்களின் பட்டியல் வெளியிடப்பட்டாலும் ஒரு நடிகையின் பெயரை படக்குழு இன்னும் வெளியிடாமல் வைத்திருக்கிறது. கமல் நடித்து கடந்த 2004 ஆம் ஆண்டு வெளியான விருமாண்டித் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை அபிராமி. விருமாண்டி திரைப்படத்திற்குப் பின் தற்போது 20 ஆண்டுகளுக்குப் பிறகு தக் லைஃப் படத்தில் அபிராமி நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கமலுடன் திரையில் மிகச் சிறப்பான கெமிஸ்ட்ரி அமைந்த நடிகைகள் அபிராமியும் ஒருவர் தற்போது தக் லைஃப் படத்தில் அவர் நடிக்க இருப்பது ரசிகர்களை உற்சாகமடையச் செய்துள்ளது. இதுகுறித்தான அதிகாரப்பூர்வத் தகவல் விரைவில் படக்குழு சார்பில் அறிவிக்கப் படும் என எதிர்பார்க்கப் படுகிறது.
இந்தியன்
அதேசமயம் உலகநாயகன் கமல்ஹாசன் நடித்துள்ள இந்தியன் 2 பட இறுதிகட்ட படப்பிடிப்பில் உள்ளது. சமீபத்தில் கமல்ஹாசன் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் அறிமுக வீடியோ வெளியாகி வரவேற்பைப் பெற்றது. இப்படத்தில் கமல்ஹாசன், பிரியா பவானி ஷங்கர், ரகுல் ப்ரீத், சித்தார்த், எஸ் ஜே சூரியா, மறைந்த நடிகர்கள் மனோபாலா, விவேக் , மற்றும் ஜி மாரிமுத்து ஆகியவர்கள் நடித்துள்ளார்கள். அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைத்திருக்கிறார். லைகா ப்ரோடக்ஷன்ஸ் இந்தப் படத்தை தயாரித்துள்ளது.
கமல்ஹாசன் 233
இதனைத் தொடர்ந்து எச் வினோத் இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார் கமல்ஹாசன். ராஜ்கமல் நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்க இருக்கிறது. சமூக கருத்துள்ள முழுக்க முழுக்க ஆக்ஷன் படமாக இந்தப் படம் இருக்கும் என்று கூறப்படுகிறது.
கல்கி 2898
பிரபாஸ் நடித்து வரும் பான் இந்தியத் திரைப்படமான கல்கி 2898 படத்தில் வில்லனாக நடித்து வருகிறார் கமல்ஹாசன். ரூ 600 கோடு ரூபாய் செலவில் சைன்ஸ் ஃபிக்ஷன் படமாக உருவாகி வரும் இப்படத்தின் படப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார்