Cook with comali season 3 : புகழ் இல்லாத குக் வித் கோமாளி: அதிர்ச்சி அளித்த ப்ரோமோ!
சீசன் 3க்கான ப்ரோமோ அண்மையில் வெளியானது. அதில் புகழ் இல்லாதது அனைவரையும் கேள்வியில் ஆழ்த்தியுள்ளது.
குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் அடுத்த சீசன் எப்போது துவங்கும் என ரசிகர்கள் ஆவலுடன் கேட்டு வந்த நிலையில் சீசன் 3 துவங்கப்படும் நாள் பற்றிய அறிவிப்பு அண்மையில் வெளியானது. கூடவே சீசன் 3க்கான ப்ரோமா வீடியோவும் வெளியானது. இந்த ப்ரோமோவில் வழக்கமாக, ஷிவாங்கி, மணிமேகலை, செஃப் தாமு, வெங்கடேஷ் பட் போன்ற முகங்கள் தென்பட்டாலும் சீசனின் முக்கிய முகங்களில் ஒருவரான புகழ் இல்லாதது அவரது ரசிகர்களைக் குழப்பமடையச் செய்துள்ளது. இதனால் சீசன்3ல் புகழ் இல்லையா எனப் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இது குக்கு வித் கோமாளி.. முடிஞ்சா சிரிக்காம சமாளி.. 😍 #CookWithComali Season 3 - விரைவில்.. நம்ம விஜய் டிவில.. #CWC #VijayTelevision pic.twitter.com/TLAs7g7RX4
— Vijay Television (@vijaytelevision) December 28, 2021
விஜய் டிவியில் ரசிகர்களை கவரும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகின்றன. பிக் பாஸ், ஜோடி, சூப்பர் சிங்கர், மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை, குக் வித் கோமாளி என பல நிகழ்ச்சிகளை ஒளிபரப்பாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகின்றன. அந்த வகையில் விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சி ரசிகர்களிடையே மிகவும் பிரபலமான நிகழ்ச்சியாக இருந்தது. கடந்த ஆண்டு நடைபெற்ற குக் வித் கோமாளி சீசன் 2 மிகவும் அதிகமான வரவேற்பை ரசிகர்களிடையே ஏற்படுத்தியது. கொரோனா காரணமாக தொடர்ந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில், இந்த நிகழ்ச்சி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
இந்த நிகழ்ச்சியில் குக்குகளாக நடிகை ஷகிலா, பாபா பாஸ்கர், மதுரை முத்து, அஸ்வின், தர்ஷா குப்தா, பவித்ரா லட்சுமி, கடைக்குட்டி சிங்கம் புகழ் தீபா, கனி ஆகியோர் இருந்தனர். மேலும் கோமாளிகளாக புகழ், பாலா, சிவாங்கி, மணிமேகலை, ஷரத், சுனிதா வீஜே பார்வதி, சக்தி ஆகியோர் காணப்பட்டனர். இந்த கோமாளிகளின் நகைச்சுவை இந்த நிகழ்ச்சியில் மிகவும் பிரபலமாக இருந்தது. பிக்பாஸில் கலந்து கொண்ட பலரும் அந்த நிகழ்ச்சிக்கு பிறகு சினிமாவில் வாய்ப்பு கிடைத்து, பெரிய அளவில் பிரபலமாகி விட்டனர். பலர் பிரபல ஹீரோக்கள் ஆகி உள்ளனர். சினிமா வாய்ப்புக்களும் குவிந்து வருகிறது. அதே போல் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அஸ்வின், சிவாங்கி, புகழ் ஆகியோருக்கு சினிமா வாய்ப்புக்கள் குவிந்து வருகிறது. ஷிவாங்கி தன்னுடைய பாடல் திறமையையும் வெளிப்படுத்தும் வாய்ப்புகளை தொடர்ந்து பெற்று வருகிறார்.சமீபத்தில் இந்த நிகழ்ச்சியின் வெற்றிக் கொண்டாட்டத்தையும் விஜய் டிவி நடத்தியது. இதில் மீண்டும் அனைவரும் கலந்துகொண்டு தங்களுக்கு கொடுக்கப்பட்ட டாஸ்க்குகளை நடத்தினர். மிகவும் சிறப்பாக இந்த வெற்றிக் கொண்டாட்டம் நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.