(Source: ECI/ABP News/ABP Majha)
‛ஹீரோ டூ காமெடியன்’ பெர்த் டே பாய் சத்யனின் டாப் 5 பாடல்கள்!
தமிழ் திரைப்படங்களில் ஹீரோவாக அறிமுகமாகி காமெடி நடிகராக வலம் வரும் சத்யன் இன்று தனது 46ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
தமிழ் திரைப்பட உலகலில் நடித்து வரும் நல்ல காமெடி நடிகர்கள் வரிசையில் சத்யனுக்கும் ஒரு இடம் உண்டு. இவர் முன்னாள் திரைப்பட தயாரிப்பாளர் மாதப்பம்பட்டி சிவக்குமாரின் மகன். மேலும் தமிழ் திரையுலகில் மற்றொரு முக்கிய நடிகரான சத்யராஜின் நெருங்கிய சொந்தக்காரர். இளையவன் என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக தமிழ் திரையுலகில் கால் பதித்தார். அந்தப் படத்தில் இசைஞானி இளையராஜா இசையமைத்திருந்தார். அதன்பின்னர் பாய்ஸ், கோவில், அருள், ஜெய், மன்மதன், மாயாவி, தேவதையை கண்டேன் உள்ளிட்ட பல படங்களில் காமெடி நடிகராக வலம் வந்தார். மேலும் பல அஜித்,விஜய்,சூர்யா போன்ற முன்னணி நடிகர்களுடனும் கூட்டணி சேர்ந்து சிறப்பாக ஹிட் படங்களை கொடுத்தார்.
குறிப்பாக நண்பன் திரைப்படத்தில் இவரின் கதாபாத்திரம் அனைவரையும் ஈர்க்கும் வகையில் அமைந்தது. சத்யன் இன்று தனது 46ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்தச் சூழலில் அவர் திரையில் தோன்றி காட்சியளித்த சில பாடல்கள் என்னென்ன?
1. காதல் பண்ண:
கோவில் திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல் இது. இந்தப் படத்தில் சிம்பு மற்றும் வடிவேலு உடன் இணைந்து சத்யன் நடத்திருப்பார். இப்படத்தில் காமெடியில் அசத்தியிருப்பார். இந்தப் பாடலில் அவர் ஒரத்தில் நடனம் ஆடியிருப்பார். இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருப்பார்.
2. ஜோ ஜோ ஜோதிகா:
மாயாவி திரைப்படத்தில் இந்தப் பாடல் இடம்பெற்றுள்ளது. இப்படத்தில் சூர்யா,ஜோதிகாவுடன் இணைந்து சத்யன் நடித்திருப்பார். இந்தப் பாடல் முழுவதும் இவர்கள் மூவரும் திரையில் தோன்றியிருப்பார்கள். இப்படத்திற்கு தேவி ஶ்ரீபிரசாத் இசையமைத்திருப்பார்.
3. மாமா பையா:
தனுஷ் நடிப்பில் வெளியான தேவதையை கண்டேன் என்ற திரைப்படத்தில் இப்பாடல் இடம்பெற்று இருக்கும். இந்தப் படத்தில் தனுஷ் உடன் சேர்ந்து சத்யன் உள்ளிட்ட சிலரும் கதாநாயகியை காதலிப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்று இருக்கும். இப்பாடலில் சத்யன், தனுஷ்,மயில்சாமி,கருணாஸ் ஆகியோர் இடம்பெற்று இருப்பார்கள்.
4. எப்படியோ மாட்டிக்கிச்சு:
ஜீவா நடிப்பில் வெளியான சிவா மனசுல சக்தி திரைப்படத்தில் சத்யன் நடித்திருப்பார். இப்படத்தில் இவர்கள் இருவர் காமெடி காட்சிகள் சிறப்பானதாக அமைந்திருக்கும். அத்துடன் இந்தப் பாடலில் ஜீவா மற்றும் சத்யன் ஆகிய இருவரும் திரையில் வந்திருப்பார்கள்.
5. ஹார்டிலே பேட்டரி:
இயக்குநர் சங்கர் இயக்கத்தில் வெளியான 'நண்பன்' திரைப்படத்தில் சத்யன் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இதில் விஜய்,ஜீவா,ஶ்ரீகாந்த் ஆகியோருடன் ஶ்ரீவத்சன் என்ற கதாபாத்திரத்தில் சத்யன் இருப்பார். இக்கதாபாத்திரம் அவரை பலரிடம் கொண்டு சேர்த்தது. இந்தப் படத்தில் ஹார்டிலே பேட்டரி பாடலில் சத்யன் சில நிமிடங்கள் வந்தாலும் அவரை அப்பாடலில் மறக்க முடியாத நபராக வந்து சென்று இருப்பார்.
மேலும் படிக்க: ‛தேவர் மகன் டூ வாலி....’ மிஸ் செய்த படங்களை நினைத்து வருந்தும் நடிகை மீனா!