‛தேவர் மகன் டூ வாலி....’ மிஸ் செய்த படங்களை நினைத்து வருந்தும் நடிகை மீனா!

தனது கால்ஷீட் பிரச்னை காரணமாக கைக்கு வந்து மிஸ் ஆன கதாபாத்திரங்கள் தொடர்பாக நடிகை மீனா மனம் திறந்துள்ளார்.

FOLLOW US: 

தமிழ் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் பல நடிகர்களுடன் கதாநாயகியாக நடித்து வந்தவர் நடிகை மீனா. தனது அழகிய கண்களாலும் நடிப்பாலும் பல ரசிகர்களை ஈர்த்தவர். குறிப்பாக 90 கிட்ஸ் பலரின் கனவு கன்னியாகவும் இருந்தவர் நடிகை மீனா. இவர் ரஜினி,கமல்,அஜித்,விஜய் என்ற தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழ் மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கு போன்ற மொழிகளிலும் நடித்து வருகிறார்.

இவர் சமீபத்தில் மலையாளத்தில் திரிஷ்யம்-2 திரைப்படத்தில் இவர் நடித்திருந்தார். அந்தப் படம் பெரியளவில் ஹிட் ஆனது. இந்தச் சூழலில் திரையுலகில் மீனா வந்து 40 ஆண்டுகள் தற்போது நிறைவுற்றுள்ளது. இந்நிலையில் இதுதொடர்பாக தனது பட வாய்ப்புகள் தொடர்பாகவும் சமீபத்தில் ஒரு பேட்டியில் மீனா மனம் திறந்துள்ளார். அதில்,"சினிமாவில் 40 ஆண்டுகள் நிறைவு செய்தது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. இதற்கு காரணம் என்னுடைய ரசிகர்கள் தான். அவர்கள் இல்லாமல் நான் இல்லை. அவர்களுக்கு எப்போதும் எனது நன்றியை தெரிவித்து கொண்டே இருப்பேன்.‛தேவர் மகன் டூ வாலி....’ மிஸ் செய்த படங்களை நினைத்து வருந்தும் நடிகை மீனா!

இந்த 40 ஆண்டுகால திரை வாழ்க்கையில் என்னுடைய கால்ஷீட் பிரச்னை காரணமாக சில படங்களை நான் தவற விட்டேன். குறிப்பாக தேவர் மகன் திரைப்படத்தில் ரேவதி கதாபாத்திரம், படையப்பா படத்தில் நீலாம்பரி கதாபாத்திரம், வாலி திரைப்படத்தில் சிம்ரன் கதாபாத்திரம் ஆகிய அனைத்தையும் நான் தவற விட்டேன். இந்த கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு எனக்கு வந்தது. எனினும் அப்போது நான் வேறு சில படங்களில் நடித்து வந்ததால் கால்ஷீட் பிரச்னை இருந்தது. இந்தப் படங்களின் வாய்ப்பும் பறிபோனது.

இந்தப் படங்களில் நடிக்க முடியாமல் போனது எப்போதும் எனக்கு வருத்தம் அளிக்கிறது. ஏனென்றால், என்னுடைய 40 ஆண்டுகால திரைப்பயணத்தில் பல வெற்றி படங்களை கொடுத்திருந்தாலும் இவற்றில் நடிக்க முடியவில்லை என்ற வருத்தம் எனக்கு உள்ளது" எனத் தெரிவித்துள்ளார். இவர் கூறிய திரைப்படங்களின் கதாபாத்திரங்கள் அனைத்தும் மிகவும் ஹிட்டான கதாபாத்திரங்கள். அதனால் தற்போது அவர் மிகவும் வருத்தப்படுகிறார் என்று கருதப்படுகிறது. ‛தேவர் மகன் டூ வாலி....’ மிஸ் செய்த படங்களை நினைத்து வருந்தும் நடிகை மீனா!

மீனாவை போல் அவருடைய மகள் நைனிகாவும் குழந்தை நட்சத்திரமாக தற்போது திரைப்படங்களில் நடித்து வருகிறார். குறிப்பாக விஜய் நடிப்பில் வெளியான 'தெறி' திரைப்படத்தில் அவர் விஜயுடன் சேர்ந்து சிறப்பான நடிப்பை வெளிபடுத்தியிருப்பார். தனது தீவிர சினிமா காலத்திலேயே திருமணம் செய்து கொண்ட தற்போது நாயகியாக அல்லாமல் பல குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறார். இவரை போல் இவருடைய மகளும் சிறந்த நடிகையாக வருவார் என்று பலரும் பாராட்டி வருவது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க: ”The Family Man சீசன் 2, பொதுப்புத்தியின் வெளிப்பாடே” - சர்வதேச விருதுகள் பெற்ற குறும்பட இயக்குநரின் பதிவு..

Tags: tamil Meena malayalam Vaali Actress Meena Padayappa Dhrishyam 2 child artist

தொடர்புடைய செய்திகள்

Amritha Aiyer bathroom photoshoot: வைரலாகும் பிகில் பட நாயகியின் பாத்ரூம் போட்டோஷூட்..!

Amritha Aiyer bathroom photoshoot: வைரலாகும் பிகில் பட நாயகியின் பாத்ரூம் போட்டோஷூட்..!

ஜகமே தந்திரம் vs உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்! காண தயாராகும் ரசிகர்கள்!

ஜகமே தந்திரம் vs உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்! காண தயாராகும் ரசிகர்கள்!

மருத்துவமும், அறிவியலும் - ஆக்‌ஷனில் தூள் பறக்கும் 'தி விட்ச்'

மருத்துவமும், அறிவியலும் - ஆக்‌ஷனில் தூள் பறக்கும் 'தி விட்ச்'

‛எனக்காடா எண்ட் கார்டு போடுறீங்க... எனக்கு எண்டே இல்லடா...’ வாராரு வாராரு வடிவேலு வாராரு...!

‛எனக்காடா எண்ட் கார்டு போடுறீங்க... எனக்கு எண்டே இல்லடா...’ வாராரு வாராரு வடிவேலு வாராரு...!

மனதை கரைய வைக்கும் பிரதீப் குமாரின் ப்ளேலிஸ்ட் !

மனதை கரைய வைக்கும் பிரதீப் குமாரின் ப்ளேலிஸ்ட் !

டாப் நியூஸ்

BREAKING: தமிழ்நாடு திரும்பினார் முதல்வர் ஸ்டாலின்

BREAKING: தமிழ்நாடு திரும்பினார் முதல்வர் ஸ்டாலின்

NEET Exam 2021: நீட் தேர்வை நடத்த திட்டம்? - விரைவில் அறிவிப்பு

NEET Exam 2021: நீட் தேர்வை நடத்த திட்டம்? - விரைவில் அறிவிப்பு

WTC Final Preview : நிறைவடைந்த கவுண்டவுன் - இன்று தொடங்கும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் யுத்தம்!

WTC Final Preview : நிறைவடைந்த கவுண்டவுன் - இன்று தொடங்கும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் யுத்தம்!

Oil Spill | எண்ணெய் படர்ந்த சென்னை கடல், போர்த்துகீசிய கப்பலில் கசிவு! நிலவரம் என்ன?

Oil Spill | எண்ணெய் படர்ந்த சென்னை கடல், போர்த்துகீசிய கப்பலில் கசிவு! நிலவரம் என்ன?