மேலும் அறிய

புதிய சொகுசு கார் வாங்கிய நடிகர் தாடி பாலாஜி- வைரலான படம் !

பிரபல காமெடி நடிகரும் விஜய் டிவி நிகழ்ச்சி நடுவருமான தாடி பாலாஜி புதிய கார் ஒன்றை வாங்கியுள்ளார்.

தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் காமெடி நடிகராக நடித்துள்ளவர் தாடி பாலாஜி. குறிப்பாக வடிவேலுவுடன் பல படங்களில் துணை காமெடி நடிகராக வந்து கலக்கியுள்ளார். அதன்பின்னர் அவர் சின்னத்திரையிலும் தொகுப்பாளர் மற்றும் நடுவர் என பல பரிமானங்களில் வந்துள்ளார். குறிப்பாக விஜய் டிவியில் முதலில் கலக்க போவது யாரு என்ற காமெடி நிகழ்ச்சிக்கு நடுவராக வந்துள்ளார். அதன்பின்னர் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் போட்டியாளராகவும் வலம் வந்தார். அந்த சீசனில் இவருடைய மனைவியும் பங்கேற்று இருந்தார். 

இந்நிலையில் தற்போது தாடி பாலாஜி ஒரு புதிய பிஎம்டபிள்யூ கார் ஒன்றை வாங்கியுள்ளார். அந்தக் காருடன் அவர் எடுத்து கொண்ட படம் தற்போது வேகமாக வைரலாகி வருகிறது. அவர் ஒரு சிவப்பு நிற பிஎம்டபிள்யூ சொகுசு காருடன் நிற்கும் படம் தான் பேசு பொருளாகி உள்ளது. புதிய கார் வாங்கிய தாடி பாலாஜிக்கு விஜய் டிவி நட்சத்திரங்கள் உள்ளிட்ட பலரும் தங்களுடைய வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். 


புதிய சொகுசு கார் வாங்கிய நடிகர் தாடி பாலாஜி- வைரலான படம் !

முன்னதாக பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பாக தாடி பாலாஜி மற்றும் அவருடைய மனைவி நித்யா ஆகிய இருவருக்கும் சண்டை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து அவர்கள் இருவரும் ஒரே பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டது பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியது. அந்த நிகழ்ச்சிக்கு பிறகு வெளியே வந்த பிறகும் அவருடைய மனைவி நித்யா தொடர்ந்து பாலாஜி மீது புகார் அளித்து வந்தார். அந்த விஷயங்களுக்கு பிறகு சில நாட்கள் விஜய் டிவியில் பாலாஜி வராமால் இருந்தார்.

தற்போது பிக்பாஸ் போட்டியாளர்களை மட்டும் வைத்து நடத்தப்படும் பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் பாலாஜி பங்கேற்று உள்ளார். இந்த நிகழ்ச்சியில் அவர் நிஷாவுடன் ஜோடியாக ஆடி வந்தார். நீண்ட நாட்களுக்கு பிறகு அவர் ஒரு புதிய கார் வாங்கியுள்ளது அவரை மிகுந்த மகிழ்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது என்று கூறப்படுகிறது.

இதனிடையே மீண்டும் அடுத்த பிக்பாஸ் தொடருக்கான ப்ரோமா வெளியாகியுள்ளதால் விஜய் டிவி ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர். இந்த முறை பிக்பாஸ் நிகழ்ச்சியில் யார் போட்டியாளர்களாக வர உள்ளனர் என்பதை அறிந்த கொள்ள அனைவரும் ஆர்வமுடன் உள்ளனர். பிக்பாஸ் நிகழ்ச்சி அடுத்த மாதம் தொடங்கப்படலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. ஆகவே இதில் யார் போட்டியாளர்கள் என்பது கூடிய விரைவில் தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க: இமயத்தில் ஏறிய வீடியோ இமயத்தை தொட்டது... ஜோதிகாவின் முதல் வீடியோ பேய் ஹிட்!

தலைப்பு செய்திகள்

Vishal:
Vishal: "உதயநிதி பேசுனாருனு உள்ளே வச்சாங்க.. வெளிய நிறைய பேரு அப்படி இருக்காங்க.." நடிகர் விஷால் பேச்சு
Vishal:
Vishal: "2031ல் மாற்றம் வரலாம்.." அரசியல் என்ட்ரியை மறைமுகமாக அறிவித்தார் விஷால்
Suriya:
Suriya: "20 வயது இடைவெளி மனப்போராட்டமே விஸ்வநாத் அன் சன்ஸ்.." மனம் திறந்த நடிகர் சூர்யா
Karthigai Deepam: ரேவதிக்கு தெரிந்த உண்மை.. அதிர்ச்சியில் உறைந்த சாமுண்டீஸ்வரி! கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: ரேவதிக்கு தெரிந்த உண்மை.. அதிர்ச்சியில் உறைந்த சாமுண்டீஸ்வரி! கார்த்திகை தீபத்தில் இன்று

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
US Iran War: யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
NEET Coaching Centre : ’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Trump Vs Iran: ''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
New Bajaj Pulsar 150: போடு வெடிய.! புதிய எஞ்சின் புதிய ஃபிரேமுடன் வரவிருக்கும் இளசுகளின் ப்ரியமான பஜாஜ் பல்சர் 150
போடு வெடிய.! புதிய எஞ்சின் புதிய ஃபிரேமுடன் வரவிருக்கும் இளசுகளின் ப்ரியமான பஜாஜ் பல்சர் 150
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
EV Subsidy: அப்படி போடு.! மின்சார வாகனங்களுக்கு ரூ.1,000 கோடி தனி மானியம் ஒதுக்கிய மத்திய அரசு; எப்படி பெறுவது.?
அப்படி போடு.! மின்சார வாகனங்களுக்கு ரூ.1,000 கோடி தனி மானியம் ஒதுக்கிய மத்திய அரசு; எப்படி பெறுவது.?
Embed widget