மேலும் அறிய

Vadivelu: தன்னைப்போல் நடித்ததால் ஆள் வைத்து அடித்த வடிவேலு? காமெடி நடிகர் பகிர்ந்த அதிர்ச்சித் தகவல்!

நடிகர் வடிவேலுவை போல் தான் நடித்ததால் தனக்கு ஏற்பட்ட மோசமான அனுபவம் நடந்ததாக நடிகர் ”காதல்” சுகுமார் பகிர்ந்துள்ளார்.

வடிவேலு என்றாலே நம் எல்லோருக்கும் அவர் நடித்த நகைச்சுவை காட்சிகள் தான் நினைவுக்கு வரும்.  தனது பேச்சு, உடல் மொழி, கண் அசைவு என அனைத்திலும் காமெடி கலையை ஒளித்து வைத்திருக்கும் வித்தகர் வடிவேலு. ஆனால் மாமன்னன் திரைப்படத்திற்குப் பின் நடிகர் வடிவேலுக்கு புதிய திரைப்பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. இந்த படத்தில் சீரியஸ் கதாப்பாத்திரத்தில் நடித்து அவர் அசத்தி இருந்தார். இதில் வடிவேலு மிக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்ததாக பல்வேறு திரைபிரபலங்கள் அவரை பாராட்டி வருகின்றனர்.  இந்நிலையில், பிரபல நகைச்சுவை நடிகரும் இயக்குநருமான ‘காதல்’ சுகுமார் பிரபல யூடியூப் சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார். அதில் அவர், தனது சினிமா வாழ்க்கை குறித்த பல்வேறு சுவாரஸ்யமான நிகழ்வுகளை பகிர்ந்துகொண்டுள்ளார்.

குறிப்பாக, நடிகர் வடிவேலுவால் தனக்கு நேர்ந்த மோசமான அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டார். தற்போது அது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அவர் அந்த வீடியோவில் தெரிவித்திருப்பதாவது: 

நான் வடிவேலுவின் தீவிர ரசிகன். அவரது மேனரிசங்களை அப்படியே செய்வது எனக்கு பிடிக்கும். அப்படி ஒருமுறை, நடிகர் வடிவேலுவின் உடல்மொழியில் பொன்னம்பலத்துடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்து நடித்தேன்.  அங்குதான் எனக்கு பிரச்சனை ஏற்பட்டது. அந்த படத்தில் நடித்ததற்கு பிறகு ஒருநாள் நகைச்சுவை நடிகர்கள் போண்டா மணியும், முத்துக்காளையும் வடிவேலு என்னைக் பார்க்க வேண்டும் என்று கூறியதாக சொல்லி வந்து அழைத்துச் சென்றனர். நானும் என் குருநாதரைக் நேரில் பார்க்கப்போகிறோம் என்ற ஆர்வத்தில் அவரை காண சென்றேன். அங்கு தனியறை ஒன்றில்  அவரை சந்தித்தேன்.

அப்போது வடிவேலு என்னிடம், ”என்னைப்போலவே நடிக்கிறாய்” என வெகுவாக பாராட்டினார். நானும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன். பிறகு சிறிது நேரத்தில், நடிகர்கள் முத்துக்காளையும், போண்டாமணியும் அங்கிருந்து கிளம்பி விட்டனர். நானும் அவர்களோடு புறப்பட தயாரானபோது, வடிவேலு என்னை சிறிது நேரம் இருக்க சொல்லி, ”ஏன் நடிச்சா என்ன மாதிரிதா நடிப்பேன் என்று சொல்லி வருகிறாயாமே” என்று கேட்டார். ”நான் அப்படியெல்லாம் சொல்லவில்லை, ஒரு படத்தில் வாய்ப்பு கிடைத்தது அதனால் அப்படி நடித்தேன் அவ்வளவுதான். இனிமேல் உங்களைப்போல் நடிக்க மாட்டேன்” என  கூறினேன்.

”நான் இதை சொல்லி முடிப்பதற்குள்ளாக திடீரென, என் பின்னால் இருந்து சிலர் என்னைத் தாக்கத் தொடங்கினர். அப்போது என்மீது தாறுமாறாக அடிவிழுந்தது. அவர்களிடம் கெஞ்சி அங்கிருந்து தப்பி வந்தேன்” என நடிகர் சுகுமார் வடிவேலு குறித்து பகிர்ந்து கொண்ட இந்த விஷயங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

தலைப்பு செய்திகள்

அன்று குழந்தை நட்சத்திரம் , இன்று கேமியோ..40 ஆண்டுகளுக்குப் பின் ரஜினி ஹ்ரித்திக் ரோஷன் கூட்டணி
அன்று குழந்தை நட்சத்திரம் , இன்று கேமியோ..40 ஆண்டுகளுக்குப் பின் ரஜினி ஹ்ரித்திக் ரோஷன் கூட்டணி
அனைவரையும் குஷிபடுத்திய நெல்சன்! ஜெயிலர் 2 பார்த்து பிரபலங்கள் சொல்வது என்ன?
அனைவரையும் குஷிபடுத்திய நெல்சன்! ஜெயிலர் 2 பார்த்து பிரபலங்கள் சொல்வது என்ன?
ஜெயிலர் 2 பார்த்து விமர்சனம் சொன்ன தனுஷ்!
ஜெயிலர் 2 பார்த்து விமர்சனம் சொன்ன தனுஷ்!
Jailer 2 Review: குடும்பத்தோடு கொண்டாடுங்க.. மிரட்டிய ரஜினிகாந்த் - நெல்சன் காம்போ.. ஜெயிலர் 2 விமர்சனம் இதோ!
Jailer 2 Review: குடும்பத்தோடு கொண்டாடுங்க.. மிரட்டிய ரஜினிகாந்த் - நெல்சன் காம்போ.. ஜெயிலர் 2 விமர்சனம் இதோ!

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: 34 மாவட்டங்களுக்கு வார்னிங்..! எங்கெல்லாம் மிக கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
34 மாவட்டங்களுக்கு வார்னிங்..! எங்கெல்லாம் மிக கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
Rice: ரூ.30-க்கு அரிசி.. ரூ.130-க்கு துவரம்பருப்பு.. எங்கு கிடைக்கும்? தமிழ்நாடு அரசின் சூப்பர் அறிவிப்பு!
Rice: ரூ.30-க்கு அரிசி.. ரூ.130-க்கு துவரம்பருப்பு.. எங்கு கிடைக்கும்? தமிழ்நாடு அரசின் சூப்பர் அறிவிப்பு!
விஜய்யின் ரகசிய ஆந்திரப் பயணம்? துரைமுருகன் கேட்ட நறுக் கேள்வி... அலறும் தவெக!
விஜய்யின் ரகசிய ஆந்திரப் பயணம்? துரைமுருகன் கேட்ட நறுக் கேள்வி... அலறும் தவெக!
TASMAC: ரீல்ஸ் ஆட்சி நடத்தும் மிஸ்டர் விஜய்.. இதுதான் டாஸ்மாக் குறைக்கும் லட்சணமா? கீதா ஜீவன் கொந்தளிப்பு!
TASMAC: ரீல்ஸ் ஆட்சி நடத்தும் மிஸ்டர் விஜய்.. இதுதான் டாஸ்மாக் குறைக்கும் லட்சணமா? கீதா ஜீவன் கொந்தளிப்பு!
தொடங்கியது வடகிழக்கு பருவமழை.. எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! லிஸ்ட் இதோ
தொடங்கியது வடகிழக்கு பருவமழை.. எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! லிஸ்ட் இதோ
Thirumavalavan: ”தொகுதி மாறி நிற்க சொன்னேன், ஸ்டாலின் என் பேச்சை கேட்கவே இல்லை” SIR சதி - திருமாவளவன் அதிரடி
”தொகுதி மாறி நிற்க சொன்னேன், ஸ்டாலின் என் பேச்சை கேட்கவே இல்லை” SIR சதி - திருமாவளவன் அதிரடி
Actor Sarathkumar : ’தமிழக பாஜக தலைவராகிறார் நடிகர் சரத்குமார்?’ எல்.முருகனுக்கும் முக்கிய பொறுப்பு..!
Actor Sarathkumar : ’தமிழக பாஜக தலைவராகிறார் நடிகர் சரத்குமார்?’ எல்.முருகனுக்கும் முக்கிய பொறுப்பு..!
’100 கோடி ரூபாய் முறைகேடு வழக்கு’ முன் ஜாமீன் கோரினார் அன்பில் மகேஷ்..!
’100 கோடி ரூபாய் முறைகேடு வழக்கு’ முன் ஜாமீன் கோரினார் அன்பில் மகேஷ்..!
Embed widget