Cobra : 'ஒரு கலைஞர் கையில் தமிழ்நாடு இருக்கிறது என்பதில் எனக்கு இருமாப்பு உண்டு' கோப்ரா இசை வெளியீட்டு விழாவில் பேசிய ஆனந்தராஜ்
ஒரு கலைஞர் கையில் தமிழ்நாடு இருக்கிறது என்பதில் எனக்கு இருமாப்பாக இருப்பதாக கோப்ரா இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ஆனந்த் ராஜ் நெகிழ்ச்சிபட கூறியுள்ளார்.
ஒரு கலைஞர் கையில் தமிழ்நாடு இருக்கிறது என்பதில் எனக்கு இருமாப்பாக இருப்பதாக கோப்ரா படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ஆனந்த் ராஜ் நெகிழ்ச்சிபட கூறியுள்ளார்.
நடிகர் விக்ரம் பல வேடங்களில் நடித்துள்ள படம் 'கோப்ரா'. இப்படத்தினை 'இமைக்கா நொடிகள்' படத்தை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கியுள்ளார். இப்படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டியும், வில்லனாக பிரபல கிரிக்கெட் வீரர் இர்பான் பதானும் நடித்துள்ளனர்.
ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள இப்படத்தினை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ளது. இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் ரஷ்யாவில் படமாக்கப்பட்டது எனபது குறிப்பிடத்தக்கது. ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா தற்போது (11/07/2022) சென்னையில் நடைபெற்று வருகிறது.
விழாவில் கலந்து கொண்ட நடிகர் ஆனந்த் ராஜ், கூறியதாவது, ”நடிகர் திலகத்திற்கு பிறகு கமல்ஹாசன் நமக்கு நடிப்பின் டிக்ஷ்னரி, மற்றொருவர் நடிகர் விக்ரம். நடிகர் விக்ரம் ஒரு பேன் இந்தியா நடிகர் என்பதில் நாம் பெருமைப்பட்ய வேண்டும். உடலை வருத்திக் கொண்டு நடிப்பவர் விக்ரம் என்பது நமக்கு தெரியும், ஆனால் இப்படத்திற்காக அவரின் உழைப்பு அசாத்தியமானது. கோப்ரா படம் நிச்சயம் ஒரு பேன் இந்தியா படம் தான். மேலும், நான் ரஜினி, விஜய் கூட நடிக்கும் போது பிற மொழி படங்களுக்கு டப்பிங் செய்வோம். அப்படியானால் அவற்றையும் பேன் இந்தியா படம் என்றுதான் அழைக்க வேண்டும். நடிகரும், சட்ட மன்ற உறுப்பினருமான உதய நிதி இன்னும் நிறைய படங்களில் நடிக்க வேண்டும். ஒரு கலைஞர் கையில் தமிழ்நாடு இருக்கிறது என்பதில் எனக்கு இருமாப்பு உண்டு” என நடிகர் ஆனந்த் ராஜ் பேசியுள்ளார்.
ரகுமானின் இசையினை புரிந்துகொள்வது மிகவும் ஒன்று
மேலும், கோப்ரா படத்தில் இரண்டு பாடல்களை எழுதியுள்ள பாடலாசிரியர் தாமரை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் பற்றி கூறியதாவது, ”ரகுமானின் இசையினை புரிந்துகொள்வது மிகவும் கடினமான ஒன்று. அவரது மெட்டு பாடலாசிரியர்களுக்கு சவாலானதாக இருக்கிறது. பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் இப்படத்திற்கு, இரண்டு பாடல்கள் எழுதியிருக்கிறேன் என்பது மகிழ்ச்சியாக இருக்கிறது” என பாடலாசிரியர் தாமரை கூறியுள்ளார்.
சில தினங்களுக்கு முன்னர் உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த நடிகர் விக்ரம், விழாவில் கலந்து கொள்வாரா எனும் சந்தேகம் இருந்த நிலையில், கடைசி நேரத்தில் அவர் கலந்து கொண்டார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்